July 29, 2009

பொழிலன் ஆல்பம்








பொழில்குட்டிக்கு பிறந்தநாள் விழாவில் வந்த பரிசுப்பொருட்கள் அத்துணையும் மிக அருமை! ஒவ்வொன்றும் ஒரு விதம்!

இப்போதிருந்து 4வயது வரை உபயோகப்படுத்தும் படியான உபயோகமான பரிசுகள்!

அதில் அவன் தற்சமயம் பயன்படுத்துவது அவனுடைய கிடாரையும் காரையும்தான்!

ஆனால் கார் முன்புறமாகச் செல்லாது பின்னோக்கிதான் செல்லும் ஏனென்றால் ஓட்டுனர் பொழிலன் பின் பக்கமானதான் ஓட்டுகிறார்! :)

அவருக்கு இரண்டு நாட்கள் பிறந்தநாள் கொண்டாடினோம்! உறவினர்களுக்காக அவர்களின் அன்பு விருப்பத்திற்கிணங்க... இந்த படங்கள் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்தவை! :)
கார்:
நானும் என் மாமனாரும் எங்கே பொழிலன் காரில் இருந்து விழுந்துவிடுவானோ என்ற பயத்தில் அவனைப் பிடித்திருக்க அவனோ தைரியமாக வண்டியை பின்னோக்கிக் கிளப்பிவிட்டான்!
கிடார்:
பொழிலன் கிடார் வாசிக்கும் இசைமழையில் நனைந்து கொண்டே எடுத்த புகைப்படம் மூன்றாவது! அவனுடன் இருப்பது என் அப்பா!
பிரணவ்:
இரண்டாவது படத்தில் என் பெரியமாமியாரின் கைக்குள் நின்று அவர் உதவியோடு கைதட்டுவது என் நாத்தனார் மகன் பிரணவ்! அழகான அருமையான வாலு! அழகாக கதைகள் சொல்வான் மழலை மொழியில்! அவனுக்கு இப்போது இரண்டரை வயது ஆகிறது! இப்போதே அழகாக எல்லோரின் பெயரையும் உறவுமுறையையும் மிகத் தெளிவாகச் சொல்கிறான்!
அவ்வுளவுதாங்க.... சிறப்பான படங்கள்! மற்றதெல்லாம் எங்கள் முகத்தோடு வந்து பயமுறுத்தும்! :))


8 comments:

jothi said...

//ஆனால் கார் முன்புறமாகச் செல்லாது பின்னோக்கிதான் செல்லும் ஏனென்றால் ஓட்டுனர் பொழிலன் பின் பக்கமானதான் ஓட்டுகிறார்! :)//

பரவாயில்லை,.. பிற்காலத்தில் எனக்கு பொழிலன் வலையில் நிறைய கொசுவத்தி பதிவுகள் கிடைக்கும்

Karthik said...

photos ellaam nalla irukku. guitar vaasikka aarampichacha? :)

kanagu said...

போட்டோஸ் எல்லாம் சூப்பர் அக்கா.. :)

இன்னும் நிறைய போட்டோஸ் போட்டு இருக்கலாம் :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி!
ஓ நிச்சயமாக.... :)))

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! இந்த கிடார் குழந்தைகளுக்கான பொம்மை கிடார் :)

ஆனால் நிஜமான கீபோர்டில் கீ அனைத்தையும் அமுக்கி ஏதேதோ சத்தம் வரவைக்கிறான் :)

ஆகாய நதி said...

நன்றி கனகு! :))

திருஷ்டி பட்டுவிடக்கூடாதே என்று தான் :)

Dhiyana said...

அருமையான படங்கள் ஆகாயநதி..

சந்தனமுல்லை said...

ஆகா...அழகான படங்கள்!! ஆகாயநதி...பொழில் கலக்கல்ஸ்!! :-)