மாய வலையில்
சிக்கி தேடினேன்
வலையே நீயாக
சிக்கியதோ உன்னில்
தேடியதோ என்னை
கிடைத்ததோ காதல்
ஏனோ கசக்கிறது
அன்று இனித்தவை
ஏனோ இனிக்கிறது
உன்னை நினைக்கையில்
யாரோ நீ யாரோ
என்னில் ஏனோ
வந்தே புகுந்தாய்
நொடிகள் தோறும்
இம்சை ஏனோ
காதல்
இது நஞ்சோ??
நொடிகள் தோறும்
இனிமை ஏனோ
காதல்
இது அமுதோ??
கன்னம் சிவக்க
இதயம் வலிக்க
கண்கள் பேச
தனியே சிரிக்க
இரவோ நீள
விடியல் தேடி
உன்னைக் காண
நானோ காத்திருக்க
ஏனோ மாற்றம்
உன்னால் தானோ!!!!!!!!
பின் குறிப்பு:
கவிதை போன்றும் அல்லாமலும் வந்த இந்த கவுஜக்கு கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மன்னிக்கவும் :(
12 comments:
தாமரை ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணியிருக்கீங்க. கலக்கல். :))
//கவிதை போன்றும் அல்லாமலும் வந்த இந்த கவுஜக்கு கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மன்னிக்கவும் :(
எனக்கு புரியாத மாதிரி மாதிரி எழுதினாதான் கவிதையா??? அவ்வ்வ்!!
good thoughts, but sequensy is not clear, i thing you want tell what you thought thats all.
அச்சோ கார்த்திக்... தாமரை என்னை கடலில் தூக்கிப் போட்டுட போறாங்க... :)
ஆங் இது வஞ்சப் புகழ்ச்சி அணியா கார்த்திக்? :))
நன்றி கார்த்திக்... ஆனா இது எனக்கே புரியல அவ்வ்வ்வ்... :((
எழுதினது என்னமோ நான் தான்... எழுதி முடிச்சதுக்கப்புறம் ஒன்னுமே புரியல... ஒரு வேளை பித்தன் சொன்னாமாதிரி sequense இல்லனு நினைக்கிறேன்....
பொழிலன் அப்பா மட்டும் இதை படிச்சா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க... :)
நன்றி பித்தன்... நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே... :)))
முதல் முயற்சியா !
வாழ்த்துக்கள்
:-) ஒரே ஃபீலிங்ஸா இருக்கே!
ஏன் திடீர்ன்னு கவிஞர் ஆகிட்டீங்க!!
tHANK U AMITHU AMMA! :)
Thank u mullai! :)
என்ன ஆச்சு, பதிவையே காணோம்,..
அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
இதெல்லாம் ஓவரா தெரில?. வந்தவுடன் ஒரு பதிவை போட்டதோடு சரி. நீங்கள் பதிவைதான் போட வேணாம். பொழிலன் போட்டோவையாவது அப்டேட் செய்யுங்கள்.
Post a Comment