March 24, 2011

மழலைச் செல்வம் பொழில‌ன்

மழலைத் தமிழ் பேசிக்கொண்டிருந்த பொழில்குட்டி தற்போது மழலையில் ஆங்கிலம் பேசத் துவங்கியுள்ளான்.... :))) தற்போது எங்களுக்கு அவனுடைய மழலைத் தமிழும் ஆங்கிலமும் கேட்பதற்கு இனிமையாகவும் சில சமயம் சில சொற்கள் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கின்றது....






அவனுடை மழலைத் தமிழ் தற்போது தெளிவாகியுள்ளது... அதனால் நாங்கள் அவனிடம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியிருக்கிறோம்... ஏனெனில் அவனுக்குப் பள்ளி துவங்குவதற்கு முன்பாக அவன் சரியான ஆங்கிலத்தில் ஓரளவிற்குப் பேச வேண்டியுள்ளது.... அவனது தேவைகளை அவன் ஆசிரியையிடம் தெரிவிக்கவாவது.... பின் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிட்டால் அமெரிக்க வழக்கில் ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடுவான்.... தற்போதே தொலைக்காட்சியின் பயனாக சில வார்த்தைகள் இவர்களின் மொழி பேசும் வழக்கிலேயே வருகின்றது....அவனுக்கு இந்த ஊரின் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறோம்...


 இப்போதெல்லாம் அவன் அவனுடைய அப்பாவோடு தொடர்ந்து இருப்பதால் இருவரும் நன்கு நெருங்கிவிட்டார்கள்....நாள்தோறும் மாலை அவன் அப்பா வீடு திரும்பும் போதே அன்றைய நிகழ்வுகளின் பட்டியலோடு தயாராக இருப்பான்... நானும் அவனும் பகலில் எங்கெல்லாம் சென்றோம்... யாரை சந்தித்தோம்... என்ன விளையாடினோம் என பட்டியல் ஒரு நிகழ்வினையும் தவரவிடாது இருக்கும்.....



வெளியில் சென்றால் அம்மம்மா!!! அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு இந்த 24மணி நேரம் போதவே போதாது....வீட்டில் இருந்தாலும் சரி கேள்விகளுக்கு மட்டும் நேரம் காலம் என்பது கிடையாது... கேள்விக்கு பதில் கூறும் போது அதிலிருந்து இன்னொரு கேள்வி பிறக்கும்,.... நானே இன்றும் அப்படித்தான்.... பின் நான் பெற்ற குழந்தை எப்படி இருப்பான்...

ம‌க்க‌ள் மெய்தீண்ட‌ல் உட‌ற்கின்ப‌ம் ம‌ற்ற‌வ‌ர்

சொற்கேட்ட‌ல் இன்ப‌ம் செவிக்கு

இந்த‌ குற‌ள் தான் என் நினைவிற்கு வ‌ருகிற‌து :)))



 
அவ‌னுக்கு இங்கு உள்ள‌ உண‌வுப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ம் பிடிக்க‌வில்லை..... ந‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளான‌ இட்லி,ப‌ருப்பு, இர‌ச‌ம், கீரை, அசைவ உணவு தான் பிடித்திருக்கிற‌து..... ம‌ற்ற‌ப‌டி ஆசிய‌நாடுக‌ளின் அசைவ உண‌வுக‌ளை விரும்பி சாப்பிடுகிறான்.... ஆனால் இவ‌ன் ப‌ள்ளிக்குச் சென்றால் அங்கே அமெரிக்க‌ சிற்றுண்டி வ‌கைக‌ள் தான் குழ‌ன்தைக‌ளுக்குத் த‌ருகிறார்க‌ள்.... நாம் கொடுத்த‌னுப்ப‌க் கூடாது.... அத‌ற்கு தான் இவ‌னை எப்ப‌டிப் ப‌ழ‌க்குவ‌து என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்....

2 comments:

Vidhya Chandrasekaran said...

பொழில் குட்டிக்கு வாழ்த்துகள்:)

jothi said...

பொழில‌ன் ம‌ழ‌லை குர‌ல் இனிமை