எனக்கும் பொழிலனுக்குமான உரையாடல்கள் இப்போது அதிகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகியிருக்கிறது!
நான் வெளியில் காணும் காட்சிகள் பற்றிய என்னுடைய எண்ணங்களை ஒரு தோழனிடம் கூறுவது போல் அவனிடம் கூறுகிறேன் :) அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ குழந்தைகளின் மூளை மிகவும் கூர்மையானது என்பதை நானறிவேன்!
அவனும் ஒவ்வொரு பொருளையும் காட்டி அம்மா அது அம்மா இது என்று கேட்டுக் கொண்டே வருகிறான்! நானும் விளக்கிக் கொண்டே வருகிறேன்!
இப்போது காலிங் பெல் அடித்தால் பயந்தது போய் வீட்டிற்கு தாத்தா அல்லது வேறு யாரோ வருகிறார்கள் என்பது புரிகிறது அவனுக்கு! நாங்கள் கதவைத் திறக்கும் முன்பாகவே அவன் வந்து தயாராக நிற்பான்....
பொருட்களின் பெயர்கள் நன்கு தெரிவதால் எப்போதும் நான் அதை அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறேன்!
நானும் பொழிலனும் உப்பு மூட்டை விளையாட ஆரம்பித்துவிட்டோம்! அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.... என் வயிற்றில் சுமந்த எங்கள் குழந்தையை இப்போது என் முதுகில் சுமப்பது மகிழ்ச்சியான அனுபவம்! :))
நான் எழுதுவதைப் போலவே அவனும் எழுத விரும்புகிறான்! ஆனால் அதையெல்லாம் பழக்கிவிடவில்லை.... பிஞ்சுக் கைகளை இப்போதே சிரமத்திற்கு உள்ளாக்க விருப்பம் இல்லை.
என்னைப் போலவே அவனும் தலைவாற விரும்புகிறான்! ஆனால் அவன் வாறிவிட வி்ரும்பும் தலைமுடி என்னுடையது அவ்வ்வ்வ்வ்.....
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பது சரிதான் போல....
நான் கட்டிலில் படுத்திருக்கும் போது என் மீது ஏறி நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அதன் மீது ஏறி நிற்க முயல்கிறான்!! பயமாகத் தான் இருக்கிறது அவனுக்கல்ல எனக்கு!
15 comments:
//நான் கட்டிலில் படுத்திருக்கும் போது என் மீது ஏறி நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அதன் மீது ஏறி நிற்க முயல்கிறான்!! பயமாகத் தான் இருக்கிறது அவனுக்கல்ல எனக்கு!//
Good :) :) :)
/*நான் எழுதுவதைப் போலவே அவனும் எழுத விரும்புகிறான்! ஆனால் அதையெல்லாம் பழக்கிவிடவில்லை.... பிஞ்சுக் கைகளை இப்போதே சிரமத்திற்கு உள்ளாக்க விருப்பம் இல்லை*/
மிகவும் நல்லது :)
பொழிலனின் வளர்ச்சியை கேட்க நன்றாக உள்ளது.. :)
// நாங்கள் கதவைத் திறக்கும் முன்பாகவே அவன் வந்து தயாராக நிற்பான்....//
ம்ம்ம் மலர்கிறது நினைவுகள்,. நான் அலுவகலத்திலிருந்து வரும் போது மகன் தான் கதவை திறப்பான்,. அவன் தூங்குவான் என நினைத்து காலிங் பெல்லை தவிர்த்துவிட்டு கதவை தட்டினால் "ப்பா" என்று அவன் தான் கதவை திறப்பான்:)
// சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பது சரிதான் போல....
நான் கட்டிலில் படுத்திருக்கும் போது என் மீது ஏறி நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அதன் மீது ஏறி நிற்க முயல்கிறான்!!//
இதை பெண் குழந்தைகளும் செய்யும். ஆண்கள் மட்டுமே சேட்டை செய்பவர்கள் என்று முத்திரை குத்தாதீர்கள்.
// பயமாகத் தான் இருக்கிறது அவனுக்கல்ல எனக்கு!//
இளங்கன்று பயமறியாது,..
சரி,.. சத்தமில்லாமல் TVயை ஆப் செய்யும் சேட்டைகள் இன்னும் ஆரம்பிக்கலையா??? இருந்தாலும் பொழிலனின் சேட்டைகள் அவன் வயதிற்கு மீறியதுதான்,..குழந்தைகளின் எல்லையில்லா மகிழ்ச்சிகளை நீங்களும் சேர்த்து அனுபவிங்கள்,.. நல்ல பதிவு,..
அழகாக எழுதியுள்ளீர்கள்.பொழிலனுக்கு என் வாழ்த்துகள்.
ஹையோ, பெரிய ஆளுதான்! :)
சொல்ல மறந்துட்டேன் சார் போட்டோ கலக்கல்..! :)
//
Good :) :) :)
//
நன்றிங்க....:)
நன்றி கனகு :)))
//
ம்ம்ம் மலர்கிறது நினைவுகள்,. நான் அலுவகலத்திலிருந்து வரும் போது மகன் தான் கதவை திறப்பான்,. அவன் தூங்குவான் என நினைத்து காலிங் பெல்லை தவிர்த்துவிட்டு கதவை தட்டினால் "ப்பா" என்று அவன் தான் கதவை திறப்பான்:)
//
சந்தோஷமாக இருக்கு கேட்க :)))
//
இதை பெண் குழந்தைகளும் செய்யும். ஆண்கள் மட்டுமே சேட்டை செய்பவர்கள் என்று முத்திரை குத்தாதீர்கள்.
//
கி கி கி! :))) இதை நான் ஓரளவு ஒத்துக்கிறேன்...
//
இளங்கன்று பயமறியாது,..
//
:)) நன்றி ஜோதி!
நன்றி ராம் சார்! :)))
நன்றி கார்த்திக்! :)))
//
சொல்ல மறந்துட்டேன் சார் போட்டோ கலக்கல்..! :)
//
ரொம்ப மகிழ்ச்சி கார்த்திக்! :)
Post a Comment