பொழிலன் குறும்பும், பேச்சும் அதிகரித்திருக்கும் நாட்கள் இவை!
சேட்டை செய்யும் போது நாம் கண்டித்தால் திருப்பி மிரட்டுகிறானே! சிரிப்பதா? அழுவதா? :))) நடக்க ஆரம்பித்துவிட்டதால் அதிகம் வெளியில் செல்லும் முயற்சிகள் நடந்தேறிய வண்ணமும் பல நேரங்களில் அதில் வெற்றியடைதலும் நடக்கிறது!
வெளியே போகாதே என்றால் உள்ளே வந்துவிடுவான்... ஆனால் மீண்டும் சிறிது நேரத்தில் வெளியில் செல்வான்... இப்படி இருந்த பொழில்குட்டி இப்போது சில நாட்களாக உள்ளே வா என்று பலவாறு கெஞ்சினாலும் கொஞ்சினாலும் வருவதில்லை.....
அவனுக்கு இப்போது ஒன்றரை வயதில் ஒரு தோழன் வேறு அதனால் அவனுடன் வெளியில் விளையாட மிகுந்த ஆர்வம் காட்டுகிறான்!!! கடவுளே இப்போதேவா???? மகிழ்ச்சிதான் ஆனாலும் சிறு குழந்தையாயிற்றே தத்தி தத்தி நடக்கையில் எப்படி தனியே நடக்கவிடுவது??? அதனால் ஹி ஹி ஹி நானும் சேர்ந்து விளையாடப் போகிறேன் :)))
என்னை எங்கும் தனியே செல்லவிடுவதில்லை.... அவனும் உடன் வர வேண்டுமாம்.... இப்போதே என்ன பொறுப்பு தாய் மீது!!!!??? :)))) (அவன் அம்மாவுடன் இருக்க வேண்டும் தானும் டாடா போகவேண்டும் என்று அழுவதே உண்மை)
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை என் இடுப்பில் இருக்கும் நேரம் பிறரைப் பார்த்து புன்னைகைக்கும் வரை புரிந்து வைத்துள்ளான்.... ஆனால் அவனை ஆசையோடு யாரும் தூக்கினால் என்னை இறுகப் பிடித்து கொள்கிறான்! வீட்டிற்கு புதிய பெண்கள் யாரும் வந்தால் என் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறான்!
ஆனால் ஆண்கள் என்றால் மிகவும் ஒட்டிக் கொள்கிறான் அதிலும் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியமாக சேர்ந்து கொள்கிறான்! :)))
இனம் இனத்தோடு தான் சேருமோ??? :)
வணக்கம்
1 week ago
12 comments:
எனக்கு ஊருக்குப் போன குழந்தைக ஞாவகம் வந்திடுச்சி....அவ்வ்...
/*சிறு குழந்தையாயிற்றே தத்தி தத்தி நடக்கையில் எப்படி தனியே நடக்கவிடுவது??? அதனால் ஹி ஹி ஹி நானும் சேர்ந்து விளையாடப் போகிறேன் :)))*/
:))))))))))
/*அவனை ஆசையோடு யாரும் தூக்கினால் என்னை இறுகப் பிடித்து கொள்கிறான்!*/
குழந்தைகளுக்கே உரித்தானது :)
// இனம் இனத்தோடு தான் சேருமோ??? //
இதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். கல்லூரி நாட்களில் எதிர் இனம் தேடிய அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு உண்டு. கொஞ்சம் காத்திருங்கள்,.. ஆண்டுகள் எவ்வளவு வேகமாக ஓடுகிறதென்று பாருங்கள்,..
நன்றி பழமைபேசி! விரைவில் உங்கள் குழந்தையை நீங்கள் காண என் வாழ்த்துகள்! :)
நன்றி கனகு! :)
உண்மைதான்...
//
இதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். கல்லூரி நாட்களில் எதிர் இனம் தேடிய அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு உண்டு. கொஞ்சம் காத்திருங்கள்,.. ஆண்டுகள் எவ்வளவு வேகமாக ஓடுகிறதென்று பாருங்கள்,..
//
ஹி ஹி ஹி! அது பரவாயில்லை... :)))
நன்றி ஜோதி! உங்கள் குழந்தை இப்போது நீங்கள் இல்லாமல் சாப்பிடப் பழகிவிட்டானா?
பசி எடுத்தால் தலைவர் இப்ப ஆட்டோமெட்டிக்காக சாப்பிடுறார்.பிரச்சனையில்லை. ஆனால் முரட்டுத்தனமாக இருப்பதாக மனைவி சொல்லுகிறாள்,..கவலையாக இருக்கிறது,. யாருக்காக இங்கு வேலை செய்யாத AC யில் கஷ்டப்படுறோம்?
அது ஒன்றும் பிரச்சனையில்லை... அதை தான் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்றேன்...:)))
ஆண் குழந்தைகள் முரட்டுத்தனமாக இருப்பது பொதுவான பிரச்சனையே இப்போது நீங்கள் கொஞ்சம் படங்கள் நிறைந்த புத்தகங்களை அறிமுகப்படுத்தினால் அதிகம் முரட்டுத் தனமாக இருக்கும் சமயங்களில் புத்தகம் மீது கவனத்தைத் திருப்பலாம்... இது என் ஐடியா... நீங்களும் யோசித்துக் கொள்ளுங்கள்...
இப்போது நான்-டாக்சிக் வாட்டர் புரூஃ புத்தகங்கள் பல பழங்கள், வாகனங்கள், காய்கள், விலங்குகள் போன்ற படங்களுடன் கிடைக்கிறது... நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் :)
எனக்கு நட்டு நியாபகம் வருது இந்தபதிவை படிக்கும் போது. நல்லா எழுதி இருக்கீங்க!
நன்றி அபிஅப்பா! ;))
மிக்க நன்றி ஆகாய நதி. இப்போதுதான் படித்தேன். உங்களின் ஆலோசனை கண்டிப்பாக வேலை செய்யும் என நான் நினைக்கிறேன்.
நன்றி ஜோதி! :)
Post a Comment