இந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் பல புதுமையாக இரசிக்கும் படி இருந்தாலும் இன்னும் பல விளம்பரங்கள் முகம் சுழிக்கும் படியாகவும், ஒரு அர்த்தமிள்ளாததாகவும் வெறுமனே மக்களைக் கவருவதை மட்டுமே கொண்டும் அமைக்கப்படுகின்றன!
அதிர்ஷ்டம் வருதய்யா:
ஏற்கனவே விளம்பரங்களை நான் துவைத்திருக்கிறேன! இது ஒரு அதிர்ஷ்டக் கல் பற்றிய விளம்பரம்! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சி காட்டுகிறார்கள்.... அதில் ஒரு காட்சி... அந்தக் கடையின் அதிர்ஷ்டக்கல்லை அணிந்த ஒரு சோம்பேறிக்கு(அதிர்ஷ்டக் கல்லை நம்பி தன்னம்பிக்கையை இழப்பவனை எப்படி சொல்வது?) நடு ரோட்டில் ரொக்கப் பணமாக ஒரு கட்டுக் கிடைக்கிறது! ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.... என்னதான் சொல்லவராங்க? இப்போ புரியுதாங்க நான் ஏன் சோம்பேறினு சொன்னேனு?
இதெல்லாம் ஒரு விளம்பரமா? உழைப்பின் மீதான நம்பிக்கையை விட அதிர்ஷ்டம் பெரியது என்றால் ஏன் நாமெல்லாம் விரும்பி வருந்தி உழைக்க வேண்டும்? பேசாமல் எல்லோரும் ஆளுக்கொரு அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டுக் கொள்வோம்! என்ன சொல்றீங்க?
வணக்கம்
1 week ago
9 comments:
நன்றாய்ச் சொன்னீர்கள்,
விரும்பி வருந்தி உழைத்தாலும் விரும்பியதை அடைவதென்பது எட்டாக் கனியாக உள்ளபோது இந்தக் கல்லை அணிந்தால் விருப்பியதையெல்லாம் அடையலாம் என்பது அலாவுதீன் பூதம் கதை கேட்பது போலுள்ளது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
i haven't seen this ad yet which is a good thing it seems.
//உழைப்பின் மீதான நம்பிக்கையை விட அதிர்ஷ்டம் பெரியது என்றால் ஏன் நாமெல்லாம் விரும்பி வருந்தி உழைக்க வேண்டும்? பேசாமல் எல்லோரும் ஆளுக்கொரு அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டுக் கொள்வோம்//
அதானே? நல்லா கேட்டீங்க... எப்பத்தான் திருந்த போறாங்களோ?
ஏமாறுவர் இருக்கிற வரை ஏமாற்றுவர்களுக்கு என்ன கவலை??
நன்றி ந.முத்துகுமார்! :) உண்மைதான்! அலாவுதீன் கதை போல் இது வெறும் கதை மட்டுமல்ல.... கபட நாடகம் விற்பனைக்காக...
நன்றி கார்த்திக்! சரியா சொன்னீங்க...தப்பிச்சீங்க டென்ஷன்ல இருந்து :)
நன்றி சரவணகுமரன்! :)
நன்றி ஜோதி! உண்மைதான்...
ஓ...நான் பாத்ததில்லை...காமெடியா இருக்கும் போல இருக்கே,...நீங்க சொல்றதைப் பாத்தா!! :-))
Post a Comment