August 3, 2009

பொழிலனும் சேட்டைகளும்!

பொழிலன் வளர வளர சேட்டைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.... கூடவே அவன் மீதான என் ரசனைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது!

இப்போதெல்லாம் அதிகம் கோவமும் பிடிவாதமும் பொழிலனின் ஆயுதங்கள்! ஒரே கத்தல்தான்..... அவன் வாயருகே நம் காது இருந்தால் போச்சு... தலை சுற்றி கொஞ்ச நேரம் காதில் "ஒய்ங்" என்ற ரீங்காரம் கேட்கும் :(

ஆனால் எங்கள் பிள்ளை அதிபுத்திசாலி.... ஹி ஹி ஹி எல்லா அம்மாவுமே இப்படித் தான் சொல்வாங்க.... ஆனால் அடுத்து நான் சொல்லப் போவதை கேளுங்கள் பின்பு நீங்களே அப்படி சொல்வீங்க!

வெளியே பூனை நடமாட்டம் கண்டதுமே "இயா வா இயா வா" என்று அழைத்து எங்களிடம் ஃபிரிட்ஜைக் காட்டுவான்.... எதற்கென்றால் என் அத்தை எப்போதும் பூனைகளுக்காக ஃபிரிட்ஜில் மீன்கள் வைத்திருப்பார்.... அதை எடுத்து பூனைக்கு போடுவதை பார்த்த பொழிலன் அன்று முதல் பூனைகளைக் கண்டால் எங்களுக்கு ஆர்டர் போடுகிறான் மேற்கண்டவாறு.... பின்பு அதற்கு பால் ஊற்ற வேண்டும்... அதற்கு "அம்மா பா இயா வா அம்மா பா" என்று என்னிடம் பூனைக்கு பால் ஊற்றும்படி கேட்பான்!

இயா வா என்பது மியாவ் வா என்பதின் மழலை திரிபு! :)

இந்த அம்மா என்பது சில சமயங்களில் அம்மா அப்பா இருவரையும் இணைத்து "அம்பா"" என்று வரும்.... அம்பாவும் நான் தான்! :)

டப்பாக்களை திறக்கக் கற்றுக் கொண்டுவிட்டான்.... அதனால் கையில் கிடைக்கும் டப்பா, தண்ணீர் பாட்டில் எல்லாவற்றையும் திறந்து மூடுவது ஒரு விளையாட்டு அவனுக்கு!

பால் கலக்குவதைப் பார்த்தால் அவனும் கலக்க வேண்டும்... அடுத்த வினாடி அவன் அலறல் கேட்கும் முன் அவன் கையில் ஒரு காலி டம்ளர் மற்றும் ஸ்பூன்! :)

எல்லாவற்றையும் அவனே தன்னிச்சையாக செய்யவிரும்புகிறான்! இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளதெனினும் இன்னும் அவன் வளர வேண்டும்!
தலை அவனே வாரிக்கொள்வதாக நினைத்து அவனது குட்டி சீப்பினை வைத்து முடியைக் கலைத்துக் கொள்வான்! இது போல் சின்ன சின்ன விஷயங்கள் அவனுக்கு சில மாதங்களில் நன்கு பழகிவிடும் என்று நினைக்கிறேன்! நான் எம்பிராய்டரி போடுவதைப் பார்த்து அவனும் கேட்பதால் அவன் தூங்கும் போது அதனை செய்கிறேன்!

ஆனால் சிக்கலான சமாளிக்க முடியாத விஷயம் அவனுக்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட உணவினை விட நாங்கள் உண்பதை பிடிவாதமாகக் கேட்பது தான்! தரவில்லை என்றால் அழுகை வேறு! :(

மற்றபடி அலமாரித் துணிகளை அவன் களைப்பதும் நான் அடுக்குவதும், செய்திதாளை அவன் கிழிப்பதும் நான் குப்பைப் பொறுக்குவதும் இனிமையான அனுபவங்கள்! :)

அவனுடைய நான்கு பற்கள் தெரியும் படி அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது! :)

கடவுளும், காதலும் காதலின் நகலாய் அமையும் குழந்தையின் சிரிப்பில் தான் தெளிவாகத் தெரிகிறது!

20 comments:

Karthik said...

ha..ha. nice post. i can actually see pozhilan doing these things. :)))

jothi said...

//அவனுடைய நான்கு பற்கள் தெரியும் படி அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது! :)//

உரையாடலில் அமைந்த கவிதை

நட்புடன் ஜமால் said...

அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது]]

அற்புதம் ...

இராம்/Raam said...

சூப்பரூ.. :)

ஆ.ஞானசேகரன் said...

//கடவுளும், காதலும் காதலின் நகலாய் அமையும் குழந்தையின் சிரிப்பில் தான் தெளிவாகத் தெரிகிறது!//

ம்ம்ம் உண்மை

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! ஆஹா கொஞ்சம் உரைநடைக் கவிதை தான்.... எழுதும் போது சரியாகக் கவனிக்கவில்லை.... இல்லையெனில் கவிதையாகவே எழுதியிருக்கலாமோ? சரி எதற்கு அந்த கொலைவெறி? :))

ஆகாய நதி said...

நன்றி ஜமால்! :)

ஆகாய நதி said...

நன்றி இராம்! :)

ஆகாய நதி said...

நன்றி ஞானசேகரன்! :)

சந்தனமுல்லை said...

ரசித்தேன்! :-) அழகா எழுதியிருக்கீங்க!!

துபாய் ராஜா said...

//கடவுளும், காதலும் காதலின் நகலாய் அமையும் குழந்தையின் சிரிப்பில் தான் தெளிவாகத் தெரிகிறது!//

உணர்ந்த உண்மை.

Muthu Kumar N said...

\\அவனுடைய நான்கு பற்கள் தெரியும் படி அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது! :)

கடவுளும், காதலும் காதலின் நகலாய் அமையும் குழந்தையின் சிரிப்பில் தான் தெளிவாகத் தெரிகிறது! \\

சந்தோஷத்தின் ஆழமும் தமிழின் ஆர்வமும் அன்னையின் ஆனந்தமும் அனுபவத்தின் வெளிப்பாடும் அழகாய் வெளிப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

jothi said...

//இல்லையெனில் கவிதையாகவே எழுதியிருக்கலாமோ? சரி எதற்கு அந்த கொலைவெறி? :))//

உங்கள் உரை நடை கவிதையாய் இருக்கிறது. எனக்கு கவிதை (அதை கவிதைனு சொல்லக்கூடாது) உரை நடையாய் இருக்கிறது. ஹி ஹி

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவனுடைய நான்கு பற்கள் தெரியும் படி அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது! :)


பொழிலன் அப்டேட்ஸ் கலக்கல் ஆகாயநதி.

ஆகாய நதி said...

மிக்க நன்றி முல்லை! :)

ஆகாய நதி said...

நன்றி துபாய்ராஜா! :)

ஆகாய நதி said...

நன்றி ந.முத்துகுமார் அவர்களே.... ரொம்ப புகழ்ந்துட்டீங்களே! :))

ஆகாய நதி said...

ஜோதி, உங்கள் கவிதையும் அழகு தான்! அவரவருக்கே உரிய பாணி தான் தனித்திரமையின் வெளிப்பாடும் அழகும் :)

ஆகாய நதி said...

நன்றி அமித்து அம்மா! :) இருந்தாலும் உங்களைப் போல பதிவுகள் எழுதுவது கடினம் தான் :)