August 27, 2009

மெளனம்


மெளனமான என் இரவொன்றில்


எனக்கான உன் நினைவுகள்


காற்றின் வழி செல்கையிலே


அது உன்னை அடைந்ததோ


அல்லது பொழுது விடிந்ததோ!


காற்றோடு பயணித்தாலும் அது


காற்றினும் விரைவாக வருகையில்


என் மனமோ மெளனமாக


உன் மனதின் வசமாக


உன் நினைவுகளோ


நம் நினைவுகளாய்


என்னை வந்தடைய


இது காதலோ நட்போ


இரண்டும் கடந்த உறவோ


என் மனதைக் கேட்டேன்


மெளனமான என் மனதோடு


உரையாடும் உன் மனம்


சொன்னது என்னிடம்


இது நமக்கான..............





17 comments:

ஆயில்யன் said...

லேபிள் பார்த்து பஸ்ட்டு பயந்துட்டேன்! அப்புறம் ஸ்டெப் பை ஸ்டெபா இருந்துச்சா கவிதைதான்னு நினைச்சு தைரியமா படிச்ச்சேனாக்கும்

நல்லா இருக்கு!

sakthi said...

அருமை

நட்புடன் ஜமால் said...

இது நமக்கான


மெளனம்

அல்லது

எச்சரிக்கை

அழகு போட்டோ வரிகளோடு ...

jothi said...

//இது நமக்கான..............//

புல் ஸ்டாப்பா??

கவிதை உக்காந்து எழுத நிறைய யோசிக்கனும்போல இருக்கே,..

Anonymous said...

நல்லா இருக்கு..மனைவி கணவனுக்கு எழுவது போல் ஏதாவது கவிதை போஸ்ட் பண்ணுங்க..

அன்புடன்,
அம்மு.

பித்தனின் வாக்கு said...

good nalla irukku, but enakku ithuthan valkai.

Vidhya Chandrasekaran said...

எச்சரிக்கையெல்லாம் குடுக்கற நீங்க ரொம்ப நல்லவங்க:)

ஆகாய நதி said...

நன்றி ஆயில்யன் அண்ணா...

ஆனா பாவம் உங்கள பயமுறுத்திட்டேனா?
:)

ஆகாய நதி said...

நன்றி சக்தி!:)

ஆகாய நதி said...

நன்றி ஜமால்...

கவிதையில விடுபட்ட இடத்தை நல்லாவே நிரப்புறீங்க போங்க... :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி... அது ஃபுல் பண்ணவே முடியாத ஸ்டாப்... எப்பூடி??

சரி சிறியபறவை பெரிய பதிவுக்காக காத்திருக்கிறது போல சீக்கிரம் ஒரு கலக்கல் பதிவு வரட்டும்... நாங்க எல்லாரும் எப்போ வரும்னு பார்த்திட்டே இருக்கோம்...

ஆகாய நதி said...

ஜோதி ஒரு உண்மைய சொல்றேன்... நான் பொழில்குட்டி பதிவு எழுதலாம்னு தான் உட்கார்ந்தேன் ஆனால் newpost உள்ள போனதும் திடீர்னு மனதில உள்ள எண்ண ஓட்டங்களை கவிதையா எழுத முயற்சி பண்ணினா என்னனு தோணுச்சு எழுதிட்டேன்...

ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சு எழுதும் அளவுக்கு நான் இன்னும் வளரல கவிதைலனு நினைக்கிறேன் :)

ஆகாய நதி said...

நல்வரவு அம்மு....

நன்றி! :)


//
மனைவி கணவனுக்கு எழுவது போல் ஏதாவது கவிதை போஸ்ட் பண்ணுங்க
//

அவ்வ்வ்வ்வ்வ்... முயற்ச்சிக்கிறேன்...
இது அப்படி இல்லையா?

ஆகாய நதி said...

நன்றி பித்தன்..

மெளனமா உங்கள் வாழ்க்கை? :(

பதிவுலகத்திற்கு வந்துட்டீங்கல கவலையே படாதீங்க... இங்க மக்கள் நல்லாவே கம்பெனி கொடுப்போம் :)

எங்கேயோ அல்லல் படும் மக்களுக்கும் ஓடிச் சென்று உதவும் வலையுலகம் இது :)

உங்களுக்கு இங்கே ஏராளமான உறவுகளும், நண்பர்களும் இருக்கோம் :)

ஆகாய நதி said...

ஹி ஹி ஹி! நன்றி வித்யா! ஆனா கவுஜய பற்றி கமெண்ட் காணோமே...

Karthik said...

செம கவிதை! :))

//இது நமக்கான..............

great!

ஆகாய நதி said...

thank u karthik! :)