தம்பி கார்த்திக்கும், தோழி வித்யாவும் என்னை இந்த பதிவு எழுத சொல்லி ரொம்ப கெஞ்சி அழுது புரண்டு கேட்டதுனால நான் பி்ட்டு பிட்டா அள்ளிவிடுறேன்... ஹி ஹி ஹி! சும்மா சொன்னேன்... என்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பிய தோழிக்கும், தம்பிக்கும் நன்றிகள் பல!
இங்கே இனி வரப் போறது எல்லாம் நெசம்தானுங்க....
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் அப்பா வழி ஆச்சியின் பெயர் சுப்புலட்சுமி... அதனால் எனக்கும் அவர் நினைவாக சுப்புலக்ஷ்மி :) என்னை சுபா என்று எல்லோரும் அழைப்பர்! ஏனா எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐவர் இதே பெயரில் :)
சுப்புலக்ஷ்மி என்றாலும் சுபா என்றாலும் மிகவும் பிடிக்கும்... ஒரு டிஸ்கி... என் பெயர் ரொம்ப அழகா இருப்பதா நான் உணர்வது என் கணவ்ர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் போது தான்!
2।கடைசியாக அழுதது எப்பொழுது?
என்னை யாராவது கோவமாகவோ அல்லது கிண்டலாகவோ ஏதாவது சொல்லிவிட்டால் உடனே அழுகை வரும் :(ரொம்ப சென்சிடிவ் டைப் நான்... யாராவது அழுவதைப் பார்த்தாலே எனக்கும் கண்ணீர் வழியும்!
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பரவால பிடிக்கும்னு சொல்லலாம்...
4।பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாதம்/வத்தல் குழம்பு சாதம் + தயிர் சாதம் + அப்பளம்ரொம்ப பிடிக்கும்... காய், கீரையும் ரொம்ப புடிக்கும் ஆனால் காய் மற்றும் கீரை தவிர அனைத்தும் அளவு குறைவாக இருக்கனும்!
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரொம்ப எளிதில் நட்பாவதாக எல்லாரும் சொல்லிருக்காங்க :)நான் எல்லாரிடமும் நல்லா பேசுவேன், பின் அவர்கள் குணம் அறிந்து தான் நட்பு வைத்தல் எல்லாம்...
6।கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் தான் எப்பவும் என் சாய்ஸ்... கடல் மீது தீராக் காதல் எனக்கு!!! :)))
ஆனால் குளியலறையில் சில்லென்ற கொட்டும் நீரில் வெகு நேரம் குளிப்பது தான் மிக மிக பிடிக்கும்...
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர் முக பாவனை, கண்கள், சிகையலங்காரம்,உடையலங்காரம்... நன்கு சிரித்து பேசினால் அவர் வாயையும் பார்ப்பேன் :))
8। உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கிட்ட பிடிக்காதது சட்டுனு வரும் சுரீர் கோவம்...:( எல்லாரிடமும் வைக்கும் அதிக அன்பு!
பிடித்தது அந்த கோவத்தையும் உடனே தணித்துவிடுவேன் சிறிது நேரத்தில்... அதோடு நான் அதிக அன்பு வைத்துள்ள சிலர் மீது மட்டும் தான் கோவத்தைக் காட்டுவேன்... பொழிலன் மீது மட்டும் அதிக அன்பு இருந்தாலும் கோவத்தைக் காட்டுவதில்லை! :)
எல்லாரிடமும் வைக்கும் அதிக அன்பு பிடிக்கவும் செய்யும்... இது தான் என்னுடைய பிளஸும் மைனஸும் :)
9।உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் அமைதியாப் பேசுறது, அழகா சிரிப்பது, தமிழார்வம்,சில விஷயங்களில் குழந்தைத் தனம், அழகா பாடுவது, என் மீது அவங்களுக்குத் தெரியாமலே இருக்கும் பொஸெஸிவ், எங்கள் அன்பு, என் மீதுள்ள பாசம், பொறுமையா பொருட்களைக் கையாள்வது,இந்த இளம் வயதிலேயே உறவுகளை மதித்து நேசிக்கிறது, அவங்க தங்கைய நேசிக்கிறது( இது பொதுவானது தான் ஆனால் என்னைப் போல் அண்ணன் இல்லாதவர்களுக்கு இது பார்க்கும் போது மகிழ்ச்சி) இப்படி பிடித்ததுனு நிறை......................................ய சொல்லலாம்! ஒரு பதிவு பத்தாது :( முக்கியமா அவங்க அவங்களாவே இருப்பது ரொம்ப பிடிக்கும்!
பிடிக்காதது அவங்க கோவம் :( வேறு எதுவும் இல்லை :)
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் கணவர்! அவங்க அமெரிக்காவில் நான் இங்கே...
11।இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல நிற சுடிதார்
12।என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நிறைய... இப்போது ஓடிக் கொண்டிருப்பது... "உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது..." ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் :)
13।வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு! கருமையான எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் அதிகம் புத்தகம் வாசிப்பதாலும் கருமையில் தான் எழுத்துகள் அழகா இருப்பதாக எண்ணுவதாலும்...
14.பிடித்த மணம்?
மல்லிகை, எங்கள் பொழிலனின் வாய் மணம், பொழிலன் தலை முடி வாசனை, மழையில் நனையும் மண் வாசனை, பச்சிளம் சிசு வாசனை, பசுஞ்சாணம் தெளித்த வாசல் வாசனை மற்றும் இன்ன பிற :)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
தீஷூ- காரணம்: அதிசயிக்க வைக்கும் ஆக்டிவிடிஸ் அறிவாளி!
ஜோதி- காரணம் : ஒரு நண்பரைப் பற்றி அறியலாம் என்று தான்...
16। உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கார்த்திக்கின் பெரும்பாலான பதிவுகள் மிக பிடிக்கும்... இன்னதென்று சொல்ல முடியாது...
வித்யாவின் அனைத்து யதார்த்தமான, நச் பதிவுகளும் பிடிக்கும்.... உதாரணம் "ஏதாவது செய்யனும் பாஸ்", நிவா"ரணம்" போன்றவை....
17। பிடித்த விளையாட்டு?
முதலில் கூடைப் பந்து, பூப்பந்து இப்போது பொழிலனோடு விளையாடும் அனைத்து விளையாட்டுகளும்!
18।கண்ணாடி அணிபவரா?
இல்லை...
19।எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நல்ல கதை, உருக்கமான ஆனால் தோற்காத காதல், திகில், நகைச்சுவைபோன்ற அம்சங்கள் நிறைந்த படங்கள் பிடிக்கும்!
முக்கியமாக பெண்களை இழிவு படுத்தும் அல்லது இம்சிக்கும் காட்சிகள் இருந்தால் அறவே பிடிக்காது!
20।கடைசியாகப் பார்த்த படம்?
படம் பார்ப்பதில் அத்துணை ஆர்வம் இல்லை.... தியேட்டரில் பார்க்கத் தான்பிடிக்கும்! :) கடைசியாக வீட்டில் பார்த்தது பில்லா என நினைவு!
21।பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம், இளவேனிற்காலம்... :)
22। இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
குழந்தைகளுக்கான கதைகள், லூயி பிரெய்லியின் வாழ்க்கை வரலாறு பற்றியபுத்தகம்....
23।உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வாரம் ஒரு முறை அல்லது இரு முறை... பொழிலன் , சில சமயம் பூக்கள்!தற்போது பொழில் குட்டி!
24।உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பொழிலனின் சிரிப்பு,அவன் குரல், மெல்லிய இசை, பறவைகள் சத்தம், நாய்க் குட்டி சத்தம்,மழலைகள் குரல் இப்படி நிறைய பிடிக்கும்!
சத்தமாக பேசுவது எனக்கு பிடிக்காது... ஆனால் நானே சத்தமாக பேசுவதாக என் கணவரிடம் திட்டுவாங்குவேன் :) பின் இந்த சுவற்றில், பேப்பரில், தரையில் நகத்தால் தேய்ப்பது பிடிக்காது!
வாகனங்களின் ஹார்ன் சத்தம் சுத்தமாகப் பிடிக்காது!
25।வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
டெல்லி, மும்பை, டேராடூன், மிசோரி என வட இந்திய இடங்கள் தான்!
26।உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய பேசுவேன், ரொம்ப அழகா கோலம் போடுவேன், நல்லா வரைவேன்,அப்புறம் எவ்வளவு பெரிய புத்தகம் ஆனாலும் ஒரு இரவில் படிக்கும் பழக்கம் உண்டு... பொன்னியின்செல்வன் முதல் 3 பகுதிகள் விரிவான தொகுப்பு தலையணை அளவு இருக்கும் அதை மட்டும் இரு இரவுகள் எடுத்து முடித்தேன்! பொழிலன் பிறந்த பின் அவ்வாறு செய்ய இயலவில்லை...
இதெல்லாம் விட ஒரு தனித் திறமை என்னனா யாரையும் பேச விடாம நான் மட்டும் பேசனும்னா ரொம்ப நல்லா செய்வேன! :)))
27।உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கணவன் மனைவி பேச்சுக்கு இடையே விளையாட்டாக கூட இன்னொருவர் மூக்கை நுழைப்பது, சொன்ன சொல் தவறுவது, நட்பிலும் உறவிலும் நம்பிக்கை துரோகம், இந்த பக்கம் ஒரு மாதிரி பேசிட்டு அந்த பக்கம் போயி மாற்றிப் பேசுவது இப்படி நிறைய.... இதையெல்லாம் நான் நண்பர்கள் வட்டாரத்திலேயே அனுபவித்து இருக்கிறேன் :( யாராக இருந்தாலும் சரி இந்த குணங்கள் எனக்கு பிடிக்காது!
28।உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம் தான்! என் கிட்ட யாராவது கோவப் பட்டா ஏத்துக்க முடியாது ஆனால் நான் நல்லா கோவப் படுவேன்... இப்போதான் குறைச்சிக்கிட்டே இருக்கேன்!
29।உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல், கேரளா,டேராடூன்,டெல்லி!
பின் பனி நிறைந்த எல்லா இடங்களும்....
३०எப்படி இருக்கணும்னு ஆசை?
எல்லாருக்கும் உண்மையானவளா, அன்பானவளா, நல்லவளா, கடவுளுக்கும் உண்மையானவளா இருக்கனும்....
३१)கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அப்படி எதுவுமே இல்லை... அவங்களிடம் சொல்லாம எதுவுமே செய்யமாட்டேன்...
அதுவுமில்லாம என்னோட ஒவ்வொரு அசைவினிலேயும் அவங்களும் இருக்கனும்னுரொம்ப ஆசைப் படுவேன்...
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை சரவணபவன் முழு சாப்பாடு மாதிரி! இனிப்பு, கசப்புனு எல்லாம் நிறைந்தது! மொத்தத்தில் கடவுள் அளித்த ஒரு சுவையான விருந்து! :))))
வணக்கம்
1 week ago
33 comments:
நல்ல தொகுப்பு ஆகாயநதி! ரொம்ப ரசித்தேன்! மிக வெளிப்படையான பதில்கள் வித் உங்கள் பாணி நகைச்சுவையோடு!!
//ஆனால் நான் நல்லா கோவப்
படுவேன்... இப்போதான் குறைச்சிக்கிட்டே இருக்கேன்!//
அய்யோ!! அதுக்கு கோவமேபட்டுடுங்க! "குறைச்சா" பொழில் பயந்துட போறான்! ;-) juz kidding!
க்யூட். உங்கள் கணவரின் மீதான் உங்களின் அபரிதமான அன்பு பதிவெங்கும் தெரிகிறது. வாழ்த்துகள் சுபா:)
//என் பெயர் ரொம்ப அழகா இருப்பதா நான் உணர்வது என் கணவ்ர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் போது தான்!
ஓஓஓ!!! :)))
//கடல் தான் எப்பவும் என் சாய்ஸ்...
திருச்சின்றதால ஆறுன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன். :)
//கார்த்திக்கின் பெரும்பாலான பதிவுகள் மிக பிடிக்கும்...
ரொம்ப நன்றி. :)
//வாழ்க்கை சரவணபவன் முழு சாப்பாடு மாதிரி! இனிப்பு, கசப்புனு எல்லாம் நிறைந்தது! மொத்தத்தில் கடவுள் அளித்த ஒரு சுவையான விருந்து! :))))
நிஜமாவே கலக்கல்.. ரொம்ப வித்யாசமா இருந்தது. :)
இதெல்லாம் விட ஒரு தனித் திறமை என்னனா யாரையும் பேச விடாம நான் மட்டும் பேசனும்னா ரொம்ப நல்லா செய்வேன! :)))//
super
//அமைதியாப் பேசுறது, அழகா சிரிப்பது, தமிழார்வம்,சில விஷயங்களில் குழந்தைத் தனம், அழகா பாடுவது, என் மீது அவங்களுக்குத் தெரியாமலே இருக்கும் பொஸெஸிவ், எங்கள் அன்பு, என் மீதுள்ள பாசம், பொறுமையா பொருட்களைக் கையாள்வது,இந்த இளம் வயதிலேயே உறவுகளை மதித்து நேசிக்கிறது, அவங்க தங்கைய நேசிக்கிறது( இது பொதுவானது தான் ஆனால் என்னைப் போல் அண்ணன் இல்லாதவர்களுக்கு இது பார்க்கும் போது மகிழ்ச்சி) இப்படி பிடித்ததுனு நிறை......................................ய சொல்லலாம்! ஒரு பதிவு பத்தாது :( முக்கியமா அவங்க அவங்களாவே இருப்பது ரொம்ப பிடிக்கும்!//
ஐஸ் ஐஸ் ஐஸ் மழை ...
பொழிலன்!
அருமையான தமிழ்ப் பெயர். யாருடைய தேர்வு?
//
நல்ல தொகுப்பு ஆகாயநதி! ரொம்ப ரசித்தேன்! மிக வெளிப்படையான பதில்கள் வித் உங்கள் பாணி நகைச்சுவையோடு!!
//
ரொம்ப நன்றி முல்லை... :)
நகைச்சுவையா நானா... ஆகா... நன்றி நன்றி! :)
//
அய்யோ!! அதுக்கு கோவமேபட்டுடுங்க! "குறைச்சா" பொழில் பயந்துட போறான்! ;-) juz kidding
//
:))) கி கி கி!:)
//
க்யூட். உங்கள் கணவரின் மீதான் உங்களின் அபரிதமான அன்பு பதிவெங்கும் தெரிகிறது. வாழ்த்துகள் சுபா:)
//
ரொம்ப நன்றி வித்யா! :)
//
ஓஓஓ!!! :)))
//
என்ன கார்த்திக்... ஏதும் குழப்பமா இந்த பதிலில்... :))
//
திருச்சின்றதால ஆறுன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன். :)
//
:) பல ஆறுகளில் குளிச்சாச்சு குழந்தைப் பருவத்தில்...
ஆனால் அது ஏனோ கடல்னா அவ்வளவு பிரியம்... கடற்கரையும்...
அதுவும் கடல் புறா 3வருடங்களுக்கு முன் படித்தேன் அதிலிருந்து கடல் மீதான காதல் இன்னும் அதிகமாயிடுச்சு!
ரொம்ப நன்றி கார்த்திக்!
எல்லா பதிவுகளுமே சூப்பர் தான் வானவில்வீதியில் அதான் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியல... :)
ரொம்ப நன்றி கார்த்திக்!
எல்லா பதிவுகளுமே சூப்பர் தான் வானவில்வீதியில் அதான் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியல... :)
ரொம்ப நன்றி மயில்! :)
வாங்க சூரியன்... கணவரை ஐஸ் வைத்து தான் காரியம் சாதிக்கனுமா என்ன? :)
நோ ஐஸ் :)
//
பொழிலன்!
அருமையான தமிழ்ப் பெயர். யாருடைய தேர்வு?
//
அவங்க தேடிப் பிடித்து என் விருப்பமும் அறிந்து வைத்த அழகான பெயர் :)))
நல்ல இருக்கிறது
ஒவ்வொரு பதில்களும்
மிக்க நன்றி திகழ்மிளிர்! :)
மிக்க நன்றி திகழ்மிளிர்! :)
அருமையான பதில்கள் ஆகாயநதி. அழைத்தமைக்கு நன்றி!!!
நன்றி தீஷூ! ;)
billa padam nu soneengale... athu Rajini nadichathu illaye :P
romba nalla ezhuthi irukeenga :) naan romba rasichen :)
innum sila vishayangal pidichirundhudu... indha comment section vandha vudane marandhu pochu :(
வாங்க கனகு...
அட இரண்டு பில்லாவும் தாங்க...
இவனுக இந்த பில்லா போட்டா அடுத்த நாளளவனுக அந்த பில்லா போடுறானுவளே... :)
ரொம்ப நன்றிங்க... :)))
பொழில் அம்மாஆஆஆஅ...
நல்லா எழுதியிருக்கிங்க ....நகைச்சுவையோட...
ஷமி
:) good
ரொம்ப நன்றி சுதர்சன்/ஷமி!!!! ??? :)
நன்றி முத்துலட்சுமி மேடம்... :)))
32 Q&A - மொத்தத்தில் aagayanathi அளித்த ஒரு சுவையான விருந்து! :)))) //
நன்றி ஜோதி! :)
ஏன் என் பெயர் மட்டும் ஆங்கிலத்தில்??!!! :))))
//:(ரொம்ப சென்சிடிவ் டைப் நான்... யாராவது அழுவதைப் பார்த்தாலே எனக்கும் கண்ணீர் வழியும்!//
ஓ...என்னை மாதிரியேவா!!
//
ஓ...என்னை மாதிரியேவா!!
//
நீங்களுமா??? நன்றி அருணா! :)
/*என் பெயர் ரொம்ப அழகா இருப்பதா நான் உணர்வது என் கணவ்ர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் போது தான்!
*/
:-))
நல்ல பதில்கள்
Post a Comment