நான் பிறந்தது முதலே தொடர்வண்டியில் பயணங்கள் பல செய்திருந்தாலும் ஒவ்வொரு பயணமும் எனக்கு அழகானதாகவும் மகிழ்ச்சியானதாகவுமே இருக்கிறது இன்று வரை....
இந்த இரயில் பயணம் பிடிக்காதவர்கள் என்று வெகு சிலர் தான் இருக்கமுடியும்.... பலருக்கும் பிடிக்கும் இந்த இரயில் எனக்கும் பிடிக்கும்னு சொல்வதை விட வாழ்க்கைத் தத்துவங்கள் பலவற்றை இரயில் சொல்வதாகவே எனக்கும் தோன்றும் அளவிற்கு நான் அதனோடு இணைந்தே இருக்கிறேன் அப்படினு கூட சொல்லலாம்!
அந்த தடக் தடக் அப்படினு ஏற்ற இறக்கத்தோட வரும் சத்தம் ரொம்ப அழகான சங்கீதமாவே எனக்கு தோணுது! வாழ்க்கையும் இப்படி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒன்றாவே இருந்தாலும் நம் பயணப் போக்கில் எந்த் மாறுதலும் இல்லாம நாம போகனும்னு இரயில் உணர்த்துவதாவே என் மனசுக்கு தோணுது!
நம் உறவுகள், நண்பர்கள், பொறுப்புகள், கடமைகள், சந்தோஷம், சோகம் அப்படினு பல பெட்டிகளை நம் கூடவே அழைத்துச் செல்கிறோம் நம் வாழ்க்கை என்னும் பயணத்தில்!
ம்ம்ம்... என்ன ஒரே தத்துவ மொக்கைனு நீங்க கேட்பது புரியுது! :)
சும்மாதேன்.... பதிவு தேத்தலாம்னு!
நான் எவ்வளவு முறை இரயில் பயணம் செய்தாலும் பொழில்குட்டியோட இந்த இரண்டாவது இரயில் பயணம் எனக்கும் அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியானதாகவும் எனக்கு சவாலானதாகவும் இருந்தது! :))))
பின்னே என்னங்க ஊருக்கு போகும் போது குட்டிமா நல்லா தூங்கிட்டாரு! 7மணி நேர பயணத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரே குதூகல ஆட்டம் கொஞ்சம் அழுகை! பின் தூங்க ஆரம்பித்தவன் ஊருக்கு போயிதான் எழுந்தான்! ஆனால் திரும்பி வரப்போ..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... வழக்கமா வீட்டில் விலையாடுவது போலவே 12மணி வரை விளையாட்டு! அதிலும் அவனுக்கு ஒரு தோழி வேறு கிடைத்தாச்சு விளையாட்டு துணைக்கு!!!!
சாப்பிடாம, தூங்காம... அவ்வ்வ் என்னையும் தூங்க விடாம விளையாடினான்... :)) எனக்கு இதை பார்க்கும் போது விளையாட்டுகள் பல நிறைந்த என்னுடைய குழந்தைப் பருவ இரயில் பயண நினைவுகள் தான் மனசுல ஓடுச்சு! :))))
அவனுக்கும் இரயில் பயணம் பிடித்தமானதாக இருப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்!
எனக்கு பிடித்தமான இரயில் படமும் இரயில் நிலையப்படமும் கூகுள் உதவியால் உங்களுக்காக மேலே! :))
8 comments:
மீ த ஃபர்ஸ்ட் :)
எனக்கும் இரயில் பயணங்கள் ரொம்ப பிடிக்கும்.. :)
சில மாதங்கள் முன்பு தான் திருச்சி இரயில் நிலையத்திற்கு வந்திருந்தேன் :)
வாங்க கனகு... ரொம்ப நன்றி! :)
நான் சீரியஸா படிச்சிட்டு இருந்தேன்.. திடீர்னு,
//ம்ம்ம்... என்ன ஒரே தத்துவ மொக்கைனு நீங்க கேட்பது புரியுது! :)சும்மாதேன்.... பதிவு தேத்தலாம்னு!
LOL. :))
நல்லா இருந்ததுங்க பதிவு. எனக்கும் ரயில் பயணங்கள் பிடிக்கும்.
ஜூனியரோடு பயணம் எனக்கு எப்பவுமே டெரர் தான்:)
தீஷுவிற்கு இரயில் ரொம்ப பிடிக்குது... அதனால நாங்கள் இரண்டு பேரும் பயணங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நன்றி வித்யா! என்ன செய்ய இதெல்லாம் ஒரு இனிமையான டெர்ரர் தான்! :)
சாப்பிட வைக்கவும் சேட்டையை தடுக்கவும் முடியலயே இப்போதே... இவன் இன்னும் ஓடி ஆட ஆரம்பித்துவிட்டால்???!!!!! :))))
//
தீஷுவிற்கு இரயில் ரொம்ப பிடிக்குது... அதனால நாங்கள் இரண்டு பேரும் பயணங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
//
சூப்பர் தியானா! நல்லா enjoy பண்ணுங்க! :)))
Post a Comment