June 23, 2009

தூர்தர்ஷன்

இந்த தூர்தர்ஷன் என்னும் சேனல் இப்போது தடமின்றி அழிந்து வரும் நிலையில் இதன் சேவைகளைப் பற்றி நினைவு கூறவே இந்த பதிவு!


ஒரு காலத்தில் தெருவுக்கு ஒரு தொலைக்காட்சி இருந்த காலத்தில் கொடிக் கட்டிப் பறந்த இந்த சேனல் வழங்கிய நிகழ்ச்சிகள் அற்புதமானவை! பயனுள்ளவை!


இந்த அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்த வானொலி, இயந்திர மகிழுந்து, விமானம், தொலைபேசி போன்றவை பிறந்த கதைகளை தொடராக ஒளிபரப்பினர்! இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி!



இதிகாச, புராண கதைகளையும் நல்ல தரத்துடன் ஒளிபரப்பினர்! அறிவியல் நிகழ்ச்சிகள், நம் நாட்டின் முதுகெலும்பான விவசாய நிகழ்ச்சிகள், பேராசிரியர் நன்னன் அவர்களின் தமிழ் நிகழ்ச்சி என ஒரு கலக்கு கலக்கிய இந்த சேனல் இப்போது அடையாளம் இன்றி போய்விட்டது! :(


இந்திய வரலாறு பற்றிய தொடர்கள் மகான்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்கள் என பயன்களை அள்ளி அள்ளி வழங்கியது! இன்று இந்த தனியார் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர், ஆட்டம், பாட்டங்களுக்கு இடையே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது :(


ஷோபனா ரவியை யாரும் இன்னும் மறந்திருக்கமாட்டீர்கள்... அவர் செய்தி வாசிக்கும் போது நான் மிக சிறு பெண்... இன்னும் அவர் முகம் நினைவிருக்கிறது!


அன்று தூர்தர்ஷன் வழங்கிய நிகழ்ச்சிகளின் தரத்திற்கும், பயன்களுக்கும் ஈடாக, சமுதாய சிந்தனையுள்ள நிகழ்ச்சிகள் போல் இன்று எந்த சேனலும் நிகழ்ச்சிகள் வழங்குவதில்லை என்பது என் கருத்து!

13 comments:

jothi said...

உண்மைதான்,..

ரமேஷ் said...

நன்றாக உள்ளது

Dhiyana said...

எல்லா சானல்களிலும் ஸ்பான்ஸர்ஸ் சொல்லற நிகழ்ச்சிகள் தான் வருது. மக்களுக்குப் பயன்படுமா என்று யாரும் பார்ப்பதில்லை.

ஆகாய நதி said...

நன்றி ஜோதி!

ஆகாய நதி said...

நன்றி ஜோதி!

ஆகாய நதி said...

நன்றி ரமேஷ்குமார் :)

ஆகாய நதி said...

முற்றிலும் உண்மை தீஷூ அம்மா! விளம்பர வியாபார உலகம் இது :(

சிறகுகள் said...

தூர்தர்ஷன் பக்கம் இப்போ யாருமே திரும்பரது இல்லை தான்..கொடிகட்டி பறந்த சேனல் இப்போ கேட்பார் இல்லாது போய்விட்டது...

kanagu said...

உண்மை தான்.. :(

நானும் இப்போது தூர்தர்ஷன் பார்ப்பது இல்லை.. டி.வி கூட பாடல் மற்றும் விளையாட்டுக்காக தான் பார்க்கிறேன்

ராம்.CM said...

அருமை.

ஆகாய நதி said...

நன்றி சிறகுகள் :)

ஆகாய நதி said...

நன்றி கனகு :)

ஆகாய நதி said...

நன்றி ராம் சார் :)