இந்த வருடத்திய விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது....
சில நிறைகளும் சில குறைகளும் கலந்து வெற்றிகரமாக 27விருதுகளை திரைத் துறை கலைஞர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தது!
விழா மேடையின் சிறப்பு இது வரை இந்தியாவில் செய்யாதது! நம் தமிழ்(???) தொலைக்காட்சியில் முதலில் முயன்றிருப்பது நமக்குப் பெருமையே!
ஆனால் விருதுகளில் தான் கொஞ்சம் ஏமாற்றம் :( கமல் சாருக்கு நிறைய வி்ருதுகள்! அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கவே விருது! அவரோ வளர்ந்த சிகரம்! அவருக்கு அத்துணை விருதுகளைக் கொடுப்பதற்கு பதில் அதனைப் பிரித்து மற்ற கலைஞர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.....
சாந்தனு என்ன நடித்தார் என்று அவருக்கு விருது??? பாக்கியராஜ்க்கு விஜய் டிவி செய்யும் நன்றி போல!! யாருக்குத் தெரியும்?
ஏ.ஆர்.ரஹ்மான் வரவில்லை... அதற்காக அவரை தேடிச் சென்று விருது கொடுப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்! அவர் என்ன உடல்நிலைக் காரணமாகவா வரவில்லை? இல்லையே!
அஞ்சாதே குருவி மனதில் உள்ளதை அதே உணர்ச்சியுடன் பேசினார்! :)
சூர்யாவும் சினேகாவும் நல்ல தேர்வு!
எல்லாம் நல்ல விஷயங்களே.... ஆனால் இந்த சிவப்பு கம்பள பகுதியில் இந்த திவ்யதர்ஷினியின் தங்கிலீஷ் தொல்லை தாங்க முடியல.... வர எல்லார்கிட்டயும் வேறு அவங்க மேக்கப் முடிந்து ரெடியாக எவ்வளவு நேரம் ஆச்சுனு நாட்டுக்கும் திரைத் துறை முன்னேற்றத்திற்கும் தேவையான அதிமுக்கிய கேள்விகளை கேட்டு குடைச்சல் குடுத்துச்சு!
என்னங்க கேள்வி அது? சுண்ணாம்பு பூசி, பெயிண்ட் அடிச்சு, வார்னிஷ் பண்ணி, அதுவும் சிலர் உடையப் போட்டதற்குப் பின்னாடி அதை தைத்து... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..... எவ்வளவு வேலை?
ஆனாலும் சிலர் அழகாவே வந்திருந்தாங்க.... நம்ம ஜோதிகா சூர்யாவும், சூர்யாவும் தான் ஹைலைட் போங்க... வெண்ணிற உடைல தேவதையும் கந்தர்வனும் மாதிரி என்ன பொருத்தம்!!!! அப்புறம் நம்ம சினேகா! பிறகு பார்வதி அவங்க அடுத்தபடியா அழகா வந்திருந்தாங்க... பின் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியினர் பரவாயில்லை! அவ்வளவுதான் வேறு யாரையும் சொல்ல முடியாது :( வயதில் மூத்தவர்கள் அனைவரும் மரியாதைக்குரிய வகையில் வந்திருந்தனர்!
நடனங்கள் படு மோசம்.... :((( மற்றபடி விழா சிறப்பாகவே இருந்தது!
கலைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பு இத்தகைய விழாக்கள்!
பின் குறிப்பு: விழாவுல போட்ட சாப்பாடு பற்றி ஒரு செய்தியும் இல்லை... ஒரு வேளை சாப்பாடே போடலியோ??? ஹும் :(
வணக்கம்
3 weeks ago
6 comments:
//:((( மற்றபடி விழா சிறப்பாகவே இருந்தது!//
அடிச்சு நார் நாராய் கிழிச்சுட்டு அப்புறம் விழா சிறப்பாய் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? ம்ம்ம் ஏதோ உங்களால முடிஞ்சது,..
நல்ல தொகுப்பு...
//அஞ்சாதே குருவி மனதில் உள்ளதை அதே உணர்ச்சியுடன் பேசினார்! :)
சூர்யாவும் சினேகாவும் நல்ல தேர்வு!//
நானும் இதையேதான் நினைத்தேன் :-)
நன்றி ஜோதி! :)))
நன்றி கண்ணா! :)
இந்த நிகழ்ச்சி எல்லாம் பாக்குற ஆர்வம் எனக்கு இப்ப இல்ல அக்கா... நீங்க சொல்றது சரி தான்... கமல் அவருக்கு விருது கொடுத்து தான் ஊக்குவிக்க வேண்டும்னு இல்ல... மற்றவர்களுக்கு கொடுத்து இருக்கலாம்..
ஜோதிகா, சூர்யா வை போட்டோ-ல பார்த்தேன்.. ரொம்ப அருமையான் ஜோடி :)
நன்றி கனகு :)
Post a Comment