இந்த மிஸ்।சென்னை சென்னை மேன் போட்டி ரவுசு தாங்க முடியல... இதெல்லாம் தேவையா.... அப்படியே இம்மாதிரி போட்டி நடந்தாலும் இது சென்னை அழகி(??!!) மற்றும் அழகனை(??!!) தேர்ந்தெடுக்கும் போட்டிதானே??
இதற்கு எதற்கு ஆங்கிலம்? எதற்கு ஆடை குறைப்பு அலங்காரம், அதிலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பேசும் அரைகுறை ஆங்கிலத்திற்கும் தமி"லு"க்கும்... :( சே! என்னத்த சொல்ல....
கண்ணைக் கூசும் அளவிற்கு கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது.... இது போதாதுனு இப்போலாம் எங்கேனாலும் சரி மாடர்ன் மாடர்ன் அப்படினு நிறைய பேர் செய்யும் லொள்ளு தாங்கமுடியலப்பா.... எதுனாலும் மகிழ்ச்சிய வெளிப்படுத்த கட்டிப்பிடிக்கிறது.... சீ சீ.... வருங்காலம் எப்படி இருக்குமோ பயமாத்தான் இருக்கு! :(
இந்த போட்டில ஆங்கிலம் சரியா பேசலனு போட்டிலருந்து நீக்குறாங்கலாம்.... என்ன கொடுமை இது? தமிழ் நாட்டுத் தலைநகர அழகிக்கும் அழகனுக்கும் தமிழ் தானே கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும்... அடச்சே நான் தான் லூசு... அவங்க பாதி பேர் தமிழ்நாடே கிடையாது... கேரளா, கர்நாடகா மாநிலத்தினர்...
சரி யாராக இருந்தால் என்ன? உண்மையான அழகு என்பது அகத்தின் அழகு! அதுக்கு இங்கே போட்டியில இடமே இல்லப்பா....
ஆண் பெண் எல்லாரும் நல்லா மொக்கை போடுறாங்களா? ஒழுங்கா அதிக செலவு இல்லாம குறைந்தா ஆடைகள் போட்டு பணத்தை மிச்சப்படுத்துறாங்களா? அடுத்த ஆண்/பெண்ணை தொட்டு பேசி இன்னபிற எல்லாம் கேமரா முன்னாடியே சரியா செய்யுறாங்களா? மிக சரியா தமி"லை"யே கொலை பண்ணுறாங்களா? ஆங்கிலம் அப்படினு நினைச்சு நல்லா உளறுறாங்களா? இது தான் போட்டி!!!!! :(((((
கலாச்சாரத்தை சீரழித்து நம் தமிழ்நாட்டுப் பெருமைய கேவலப்படுத்தனும்னே அலையுறாங்களா என்ன?
இவ்வளவும் நான் போட்டியின் விளம்பரத்தைப் பார்த்தும் பல விமர்சனங்களைப் படித்தும் பின் என் மனதிற்கு பட்டதை எழுதினேன்!
இந்த நிகழ்ச்சிய பார்த்திராத எனக்கே இவ்வளவு கோபம்னா பார்ப்பவர்கள் நிலைமை பாவம் தான்!
வணக்கம்
1 week ago
19 comments:
கவலைக்குரிய நிலைமை தான் அக்கா... ஆனால் என்ன செய்வது தமிழ்க்கு தமிழகத்திலேயே மரியாதை இல்லாமல் இருக்கிறதே :(
கலாசார சீரழிவும் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிரது :(
//
தமிழ்க்கு தமிழகத்திலேயே மரியாதை இல்லாமல் இருக்கிறதே :(
//
உண்மைதாங்க.... :(
மார்டன் வேல்டுன்னு
நம்மை நாமே தொலைச்சுட்டு இருக்கோம். இதை பத்தி கேட்டா பழமைவாதிபாங்கா.
நல் வரவு விஷ்ணு!
நீங்கள் கூறுவது உண்மைதான்...
நான் பார்க்கவில்லை. இதுக்கு :) போடவா இல்லை :( போடவானு தெரியலை. :)
ஆம் அக்கா ஆங்கில பித்து பிடித்திருக்கிறது இந்த தலைமுறைக்கு..மாடர்னிசமும் சேர்ந்து கொண்டுள்ளது .. வருத்த பட வேண்டிய விஷயங்கள் தான்...
நன்றி கார்த்திக்!
:( இல்லனா :) ஏன் இந்தக் குழப்பம்னு புரியுது;)
சும்மா நக்கல் தான் கார்த்திக்! :)
:((
நன்றி வித்யா!
நன்றி முல்லை!
நன்றி முல்லை!
உண்மைதான் சிறகுகள்... என்ன செய்ய மாற்றம் நிச்சயம் தேவை!
நன்றி!
அக்கானுலாம் கூப்பிடாதீங்க சிறகுகள்... நான் சின்ன பொண்ணுதான் :)
அப்போ சரி .. அக்கானு சொன்னத வாபஸ் வாங்கிக்கிறேன்..
என்ன நிகழ்ச்சி அது??
நன்றி சிறகுகள்!
ஆகாயநதினோ இல்ல சுபா எப்படினாலும் கூப்பிடுங்க....:))))
வாங்க ஜோதி!
மிஸ்.சென்னை சென்னை மேன் போட்டி
நன்றி என் பக்கம் அவர்களே வந்து பார்க்கிறேன் :)
Post a Comment