முன்பெல்லாம் வெளியே விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் நான் ஓடிச் சென்று பொழிலனுக்கு விமானம் பறக்கும் போது காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் "பொழில் குட்டிமா வா ஒடியா ஒடியா ஃபிளைட் பார்க்கலாம்" என்று அவசரமாக சொல்லிக்கொண்டே அவனை தூக்கிக் கொண்டு வேக வேகமாக வருவேன்!
"அதோ ஏரோபிளேன் பறக்குது பாரேன் " என்று காட்டுவேன்! அவனும் அழகாக பார்ப்பான்... டாடா சொல்லுவான்.... பிளைட் எங்கே போச்சுனு கேட்டா வான் நோக்கிக் கைக்காட்டுவான்.... ஆனால் நான் அவனை அவசர கதியில் தூக்கிச்சென்றதால் அவன் மனதில் உண்டான எண்ணம் எனக்கு ஒரே சிரிப்பாகிவிட்டது....
ஃபிளைட் சத்தம் கேட்டதுமே பார்ப்பதில் ஆர்வம் காட்டிய பொழிலன் சில நாட்களாக அந்த சத்தம் தொலைவில் கேட்டதுமே அழுதுகொண்டே என் அருகில் வந்து என் காலைக் கட்டிக்கொண்டு வெளியே செல்ல வேண்டுமென வெளியே நோக்கிக் கை காட்டுவான்.... முதலில் நான் கூட சரி குழந்தை ஃபிளைட் பார்க்க இவ்ளோ ஆர்வமா இருக்கானுதான் நினைத்தேன்...
அவ்வ்வ்வ்... பின்னர் தான் எனக்கு புரிந்தது ஃபிளைட் வந்தால் அம்மாவிடம் ஓடி செல்ல வேண்டும் என்றும் பின்னர் வெளியில் ஓடிச் சென்று அதனைப் பார்க்க வேண்டும் என்றும் இதனை ஒரு கட்டாய செயல் போல் எண்ணிய அவனது புரிதல்... அதாவது என் அணுகுமுறையில் ஏற்பட்ட சிறு பிழை...
எனக்கு அப்போது சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் சிந்திக்கவும் செய்து இதனைப் புரிந்து கொண்டேன் :)))
இப்போது இருவரும் சேர்ந்து எந்த அவசரமும் இன்றி பொறுமையாகவே சென்று விமானத்திற்கு டாடா சொல்கிறோம்!
யாருக்குத் தெரியும் ஒருவேளை பொழிலன் ஒரு சிறந்த விமானியாகவோ, விண்வெளி வீரனாகவோ கூட வரலாம்!!! :)))
வணக்கம்
2 weeks ago
16 comments:
/*பின்னர் தான் எனக்கு புரிந்தது ஃபிளைட் வந்தால் அம்மாவிடம் ஓடி செல்ல வேண்டும் என்றும் பின்னர் வெளியில் ஓடிச் சென்று அதனைப் பார்க்க வேண்டும் என்றும் இதனை ஒரு கட்டாய செயல் போல் எண்ணிய அவனது புரிதல்... */
ஹ ஹ ஹ...
பரவாயில்லை சீக்கிரமே புரிந்து கொண்டீர்கள்... :)
மீ த ஃபர்ஸ்ட் :)
பொழிலனின் கதைகளை நாங்கள் தொடர்ந்து படித்து வருவதால்,எனது பக்கத்து வீட்டு குழந்தையின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்ப்பது போல் ஒரு பிரமை. உங்களின் எழுத்துக்கள் கண்ணன் கதைகள் கேட்பது போல் இனிமையாக உள்ளது.
நன்றி கனகு! :)) என்னை கிண்டல் பண்ணலீயே?! :)))
நன்றி கனகு :)
//
பொழிலனின் கதைகளை நாங்கள் தொடர்ந்து படித்து வருவதால்,எனது பக்கத்து வீட்டு குழந்தையின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்ப்பது போல் ஒரு பிரமை
//
ரொம்ப சந்தோஷம் ஜோதி!
//
உங்களின் எழுத்துக்கள் கண்ணன் கதைகள் கேட்பது போல் இனிமையாக உள்ளது.
//
நிஜமாவா? :))) பொழிலன் பற்றி எழுதுவதன் அழகிய பலன் இது :))
ரொம நன்றி ஜோதி!
ஹ்ம்ம், கலக்குங்க.
எனக்கு ரெண்டு ஓசி டிக்கெட் கிடைக்குமான்னு பொழிலனை கேட்டு சொல்லுங்க. :)
// ஒரு சிறந்த விமானியாகவோ, விண்வெளி வீரனாகவோ கூட வரலாம்!!! ///
வருவார் பொழில்...
கண்டிப்பா இல்ல அக்கா :)
நன்றி கார்த்திக்!
கண்டிப்பா... ஓசியில டூரே அடிக்கலாம் பொழிலன் புண்ணியத்துல... :)
நன்றி சூரியன்... உங்க எல்லாரின் வாழ்த்துகள் தான் :)
நன்றி கனகு!:)
ஒரு சிறந்த விமானியாகவோ, விண்வெளி வீரனாகவோ கூட வரலாம்!!! \\
எமது வாழ்த்துகளும் ...
வாழ்த்துகள் விமானி/விண்வெளி வீரருக்கும் அவரது பெற்றோருக்கும்! :-)
Thank u Jamhal! :)
Thank u Mullai! :)
Post a Comment