பொழில் குட்டி வர வர ரொம்ப செல்ல கலாட்டா பண்றான்.... சேட்டை பண்றது அவன் தான் ஆனால் அடி மட்டும் எங்களுக்கு :( அவ்வ்வ்வ்வ் அடிப்பது வேறும் யாரும் இல்லை பொழிலன் தான்.... ஒரு அடிக்கு இரண்டு மூன்று கிள்ளுகள், பிராண்டல்கள் இலவசம்! :)
************************************************
கஷ்ஷ்ஷ்டப்பட்டு வளர்த்த கூந்தல் எல்லாம் பொழிலன் கையில சிக்கி சின்னாபின்னமாகி அல்லோலப்படுது! இதுல வேற பொழிலன் அப்பா டயலாக் ஒரு சமயம் என் முடிய பார்த்திட்டு " பரவால நீ முடி நிறைய தான் வெச்சிருக்கே நம்ம குழந்தை பிறந்ததும் புடிச்சு இழுத்து விளையாட " அவ்வ்வ்வ் அவன் இழுத்தா விளையாடுறான்? நோ நோ........ பிய்த்துல விளையாடுறான்....
அன்று ஒரு நாள் இப்படித் தான் நான் இட்லி சாப்பிட்டுக்கிட்டே தொலைக்காட்சி பார்த்துட்டு இருந்தேன்... அப்போ இங்கே அங்கே நடமாடிக்கொண்டு இருந்த நம்ம சார் அதாங்க மிஸ்டர்.பொழிலன் நேரா என் கிட்ட வந்து என் இட்லி தட்டைப் பிடித்து இழுக்க நான் இழுக்க ஒரு வழியா நான் வெற்றி எனக்கு.... ஆனால் அதற்குள்ளே டிவில ஒரு எண்ணெய் விளம்பரம் அதுல இரண்டு வடை காமிச்சாங்க...
வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு நான் டிவியில வடைய பார்க்கத் திரும்பினா என் தட்டு பொழிலன் கையில.... என் இட்லி தரைல.... உடனே வடைய காட்டுவதற்கு முன்னாடியே நான் பொழிலன் பக்கம் திரும்ப என் இட்லி தரைல.... அதுக்குள்ள வடையும் போச்சு :( அய்யோ வடை போச்சே அதோட இட்லியும் போச்சே!
***********************************************
இப்போது எல்லாரையும் உம்பா என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறான்.... பின்ன நாங்க அவனை பல செல்லப் பெயர்களில் கொஞ்சும் போது அவன் எல்லாருக்கும் ஒரு செல்லபெயர் வைத்திருக்கிறான்! :)
உம்பா உக்கார்(உட்காரு), உம்பா வேணாம் உம்பா, உம்பா இயா பா ( மியாவ்கு பால்) , உம்பா பாட்டில், அய்யா பாஆஆஆ ( பாய் சொல்கிறான்) , உம்பா தா தா தா இவையெல்லாம் அவன் இப்போது தொடர்ச்சியாக பேசும் வரிகள்!
என்னை அம்மானும், உம்பானும் கூப்பிடுவது போலவே எல்லாரையும் அந்தந்த உறவு முறை அல்லது உம்பா என்று அழைக்கிறான்.... :)
***********************************************
எந்த எந்த பொருளை எதற்காக எப்படி பயன்படுத்தனும்னு நல்லாவே தெரியுது! சீப்பினை எடுத்த தலை வாறுவது போல செய்கிறான், கரண்டி,ஸ்பூன் எடுத்தால் கூடவே கிண்ணம் எடுத்துக் கொண்டு ஏதோ சாப்பிடுவது போல செய்கிறான்! புத்தகங்களைப் பார்த்தால் ஒன்றை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக ஏதோ படிக்கிறான்.... புத்தகம் தலைகீழாக இருந்தாலும் குழந்தை பொறுப்பாக படிக்கும் அவன் படிப்பது என்னனு அவனுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும்! :)
பொறுப்பான பிள்ளை துடைப்பத்தை பார்த்தாலே எடுத்து வீடு பெருக்குகிறான்... அதை தூக்க முடியாமல் தூக்கி பெருக்குவது கொள்ளை அழகு! ஆனால் அவன் அதில் பாதி உயரம் தான்!
காலையில் நான் கிச்சனில் அமர்ந்து காய்கள் வெட்டிக் கொண்டிருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து கொண்டு நான் வெட்டும் காயெல்லாம் எடுத்து தூக்கி வீசிக் கொண்டிருப்பான்!
***********************************************
அவனுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தாலும் மியாவ்கும், காகாவிற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்பான் அவன் மழலையில்.... இயா தா... (மியாவ்கு தா)!
வர வர ஒழுங்காக சாப்பிடுவது இல்லை.... சாப்பாட்டினை தானே உண்ண வேண்டும் என்று கிண்ணத்தோடு வாங்கிக் கொள்வான்... பின் அதனை கீழே சிந்தி மேலே சிந்தி கடைசியில் வயிற்றுக்குள் ஒன்றும் போகாது :(
*********************************************
ஆனால் எல்லாவற்றிற்கும் அழுது, கத்தி, அடம் பிடித்து சாதிக்கும் குணத்தை எப்படி மாற்றுவது? இன்னும் வளர்ந்த பின்பு இப்படி செய்தால் தகாது அதனால் இந்தக் கால குழந்தைகளின் பிடிவாதத்தை மாற்றும் சிறந்த வழி அறிந்தோர் கூறுங்கள்! நாங்கள் அனைவரும் பலவாறு முயற்ச்சித்து வெற்றிகரமாக தோல்வியடைந்தோம்! :(
************************************************
ஆனால் அவனுடனான தருணங்கள் இன்பத்திற்கு குறைவில்லாத இரசனைகள் நிறைந்த தருணங்கள்! அவன் மீதான என் இரசனைகளுக்கு வயதே ஆகாது (பொழிலனுக்கே வயதானாலும்) ! :) அவனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் ஆனால் அப்புறம் இடம் இருக்காது மற்றும் படிப்பவர்களின் பொறுமை கருதி இதோடு இன்று நிறுத்திக் கொள்கிறேன்!
*************************************************
வணக்கம்
2 weeks ago
21 comments:
கலக்கல் அப்டேட்ஸ் ..ஆகாயநதி! :-) பொழில் செம ரகளை பார்ட்டி போல இருக்கே!! ரசித்தேன்!!
//காலையில் நான் கிச்சனில் அமர்ந்து காய்கள் வெட்டிக் கொண்டிருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து கொண்டு நான் வெட்டும் காயெல்லாம் எடுத்து தூக்கி வீசிக் கொண்டிருப்பான்!
//
:)))
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
//அவன் மீதான என் இரசனைகளுக்கு வயதே ஆகாது (பொழிலனுக்கே வயதானாலும்) ! : //
:))
உண்மையிலேயே செம பதிவு. :))))
செம வாலு. Enjoy!!!!!!!!!
அப்படியே என் மகனின் சேட்டைகள்,.. என்ன வித்தியாசம்?? உங்களுக்கு தட்டில் இருந்த இட்லி போகும்,. எங்களுக்கு டிவி சேனல் மாறும் (மிக முக்கியமாக நீங்கள் சுவாரஸ்யமாக பார்க்கும் போது,..) ஏன்னா டிவி ரிமோட் தலைவர் கையல இருக்கும்,..
//அதனால் இந்தக் கால குழந்தைகளின் பிடிவாதத்தை மாற்றும் சிறந்த வழி அறிந்தோர் கூறுங்கள்! நாங்கள் அனைவரும் பலவாறு முயற்ச்சித்து வெற்றிகரமாக தோல்வியடைந்தோம்! :(//
ஆண் குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது பொதுவான பிரச்சனையே இப்போது நீங்கள் கொஞ்சம் படங்கள் நிறைந்த புத்தகங்களை அறிமுகப்படுத்தினால் அதிகம் பிடிவாதமாக இருக்கும் சமயங்களில் புத்தகம் மீது கவனத்தைத் திருப்பலாம்... இது என் ஐடியா... நீங்களும் யோசித்துக் கொள்ளுங்கள்...
இப்போது நான்-டாக்சிக் வாட்டர் புரூஃ புத்தகங்கள் பல பழங்கள், வாகனங்கள், காய்கள், விலங்குகள் போன்ற படங்களுடன் கிடைக்கிறது... நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் :)
(சரி சர்ரி,.. டென்சன் ஆகறது தெரியுது,.ஒன்னும் வேலைக்காகல,.. புத்தகம் கிழிஞ்சதுதான் மிச்சம்)
கலக்கல் பதிவு.. பொழிலன் -னா கலக்கல் தான் :)
/*அய்யோ வடை போச்சே அதோட இட்லியும் போச்சே!*/
ஹா ஹா ஹா :))
இந்த அடம்பிடிப்பது ஒரு phase என நினைக்கிறேன். நானும் இதே நிலையில். Its better now:)
நன்றி முல்லை! :)
அனானி பழமொழியெல்லாம் சொல்றீங்க பேரை சொல்லலயே :)
நன்றி அப்துல்லா... :)
நன்றி கார்த்திக்... :)
நன்றி தீஷு அம்மா! :)
//
எங்களுக்கு டிவி சேனல் மாறும் (மிக முக்கியமாக நீங்கள் சுவாரஸ்யமாக பார்க்கும் போது,..) ஏன்னா டிவி ரிமோட் தலைவர் கையல இருக்கும்,..
//
ஹி ஹி இது பண்ணி முடிச்சாச்சு ரொம்ப பழசு இப்போலாம் நாங்க ரிமோட் மேல தான் உட்காருவோம் அப்போதான் பொழிலன் கைக்கு ரிமோட் கிடைக்காது :)
ஹி ஹி ஹி ரீப்பீட்டு???
5மாத காலமா பயன்பட்ட புத்தக டெக்னிக் இப்போ பயன்படல ஜோதி!
:( அவன் ஒரு புத்தகத்தை நல்லா கிழிச்சுட்டான் :)
ஆனாலும் சளைக்காம இன்னும் நாங்க புத்தகத்தை கொடுப்போம் மோட் மாத்த சில நேரம் சரிவரும் சில நேரம் சரி வராது :)
ஜோதி இன்னும் டீப்பா சொல்லனும்னா அவ்வ்வ்வ்வ் புத்தகத்து மேல தண்ணீர் ஊற்றுவது கூட நடக்குது... :) வாட்டர் ப்ரூஃப் புக் அதுனால தாங்குது...
//ஹி ஹி இது பண்ணி முடிச்சாச்சு ரொம்ப பழசு இப்போலாம் நாங்க ரிமோட் மேல தான் உட்காருவோம் அப்போதான் பொழிலன் கைக்கு ரிமோட் கிடைக்காது :)//
:))))
//ஜோதி இன்னும் டீப்பா சொல்லனும்னா அவ்வ்வ்வ்வ் புத்தகத்து மேல தண்ணீர் ஊற்றுவது கூட நடக்குது... :) வாட்டர் ப்ரூஃப் புக் அதுனால தாங்குது.../
தண்ணீர் ஊத்துவது பரவாயில்லை. என் மனைவி படித்துக் கொண்டு இருக்கும் போது சரியாக புக்கில் வந்து "water falls". அப்போ என் மனைவி முகத்தை பாக்கனுமே,.. அதுக்கு கோடி கண்கள் வேண்டும்,..
//
தண்ணீர் ஊத்துவது பரவாயில்லை. என் மனைவி படித்துக் கொண்டு இருக்கும் போது சரியாக புக்கில் வந்து "water falls". அப்போ என் மனைவி முகத்தை பாக்கனுமே,.. அதுக்கு கோடி கண்கள் வேண்டும்,..
//
ஹி ஹி ஹி :)
Post a Comment