August 19, 2009

முன்னேறும் இந்தியத் திருநாட்டின் அதிர்ச்சியான மறுபக்கம்

நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சந்தேகத்துடன் கூறுவேன்.... ஒரு புறம் முன்னேறும் காட்சிகள் பல அரங்கேறிக் கொண்டிருந்தாலும் நம் தாய் நாட்டின் மறுபக்கம் :(

நம் அம்மா பார்ப்பதற்கு அழகாக பட்டாடை, நகையெல்லாம் உடுத்திக் கொண்டு அழகுக்கு அழகு சேர்த்து படாடோபமாக இருந்தால் அவர் மகிழ்ச்சியாக வளமாக வாழ்கிறார் என்று கூறிவிடலாமா? அவர் மனதிலும் எந்தக் குறைகளன்றி உண்ண உணவிலும் எந்தக் குறையுமின்றி நோய் ஏதுமின்றி இருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக அவளமோடு வாழ்கிறார் என்று கூறுவோம்....

பின் நம் தாய் நாட்டினைப் பற்றி மட்டும் ஏன் அப்படி முன்னேறிய பக்கத்தை மட்டும் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறோம் என்று தெரியவில்லை!

இதன் மறுபக்கம்.... இன்னும் குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை அல்லது வரதட்சனைக் கொடுமை செய்வதாக பொய் புகார் அளித்து கணவர் குடும்பத்தைப் பழிவாங்குதல், நோய்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லமாட்டேன் குறைவாக இருக்கிறது... இப்படி எத்தணையோ நிகழ்கிறது நம்மை சுற்றி!

படித்த மேல் தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தினரை மட்டும் பார்த்து, "இல்லை இப்படியெல்லாம் இப்போது நடப்பதே இல்லை" என்று கூறிவிட முடியாது! நான் கூறும் நிகழ்வுகளை படித்துவிட்டு சொல்லுங்கள்...

நிகழ்வு 1

அன்று ஒரு நாள் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கிராமத்தின் குழந்தைகள் அனைவருமே பொன்னுக்குவீங்கி என்னும் ஒரு வித அம்மை தொற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்... ஆனால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் பலருக்கும் நகரத்திலேயே உருவாக நிலையில் கிராம மக்களைப் பற்றி என்ன சொல்வது... நகரத்தில் தங்க நகை அணிவித்து இந்த நோயைக் குணப்படுத்துவதாக எண்ணி மருத்துவ ஆலோசனை பெறாமல் அது தானாகவே சரியாகிவிடும்... இதை நானே பல இடங்களில் நேரில் பார்த்திருக்கிறேன்...

அது கிராமம் அல்லவா அதனால் தான் மக்கள் ஒரு படி மேலே போய் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த நோய் வந்தால் உடனடியாக தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கத்தினாலான திருமாங்கல்யத்தைப் போடுகிறார்கள்.... இது கேட்பதற்கே கேவலமாக இருக்கிறது...

அங்கு ஓடு அசுத்தமான சாக்கடை நீரே இதற்கு காரணம்... சுகாதார நிலையத்திற்குச் சென்று நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி நடப்பதும் நம் இந்தியாவில் தான்! :(

நிகழ்வு 2

சாலைகளில் அழகான விளக்குகள் அமைத்து, சாலையோரச் சுவர்களில் அழகான படங்கள் வரைவது மிகவும் நல்ல விஷயம் தான்! ஆனால் அதற்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை குடிசைமாற்று வாரியத்திற்கு ஒதுக்கி இன்னும் சென்னை "மா"நகரின் பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடம் ஏற்படுத்தித் தரலாமே?

அவர்கள் இருப்பிடத்தைவிட்டு மீண்டும் பிளாட்பாரத்திற்கு வந்தால் (அப்படியும் நடக்கிறது ) கடுமையான தண்டனைகளை விதிக்கலாம்!

அண்ணா நகரில் டவர் பூங்காவிற்கு அருகில் செல்லும் தெருவில் கூட நான் இத்தகைய பிளாட்பாரவாசிகளைப் பார்த்திருக்கிறேன்!

நிகழ்வு 3

நம் நாட்டில் செய்வதற்கு ஆயிரம் வேலை இருக்கிறது... சுய தொழில் இருக்கிறது... பின் ஏன் வேலைவெட்டியில்லாதவர்களும் , போலிச் சாமியார்களும் (இதுவும் ஒரு சுய தொழிலோ? ) , பேயோட்டும் மந்திரவாதிகளும் என்று தெரியவில்லை.... பின் எப்படி நாடு சுத்தமாக அழகாக மாறும்?

சோம்பேறித் தனத்தை மறைக்க சாமியார் வேடம் ஒரு வழியா? அதிலும் கருப்பசாமி தன் காலில் விழுந்து கெஞ்சியதாம் தன் மகள் உடம்பில் வசிக்க அதனால் தானும் ஒத்துக் கொண்டாராம்.... இப்படி கூறும் ஒரு மனிதர் தன்னை காளி அன்னை என்றும் கூறிக் கொள்கிறார்.... தகவல் உபயம் விஜய் டிவிக்கு நன்றி!

இதெல்லாம் ஒரு பிழைப்பா? அதிலும் கருப்புசாமி வந்ததும் அப்பெண் மது குடிக்கிறார், பீடி, சுருட்டு புகைக்கிறார், கஞ்சா அடிக்கிறார்... சீ இதெல்லாம் கேவலமாக இல்லை.... தெய்வத்தை, பெண்மையை, நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் இவர்களை விடுத்து எப்போது பார்த்தாலும் இந்த ஐடி பெண்கள் அட்டகாசம் செய்கின்றனர், ஐடி மக்கள் குடிக்கின்றனர், அப்படி செய்றாங்க, இப்படி போறாங்க, இவங்களால கலாச்சாரம் கெடுது அது இது என்று ஐடி மக்களை குறை கூறுவதே பொறாமை பிடித்த பல மக்களின் வேலையாகப் போயிற்று!

இதில் உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால் அந்த பெண் சட்டத்தினால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா அடிப்பதைக் கூட வெளிபடையாகக் கூறுகிறார், "நீங்கள் தவறுனா நினைச்சாலும் பரவால எனக்கும் அது தவறுனு தெரியும் ஆனா கருப்புதான் கஞ்சா அடிக்கிறார் "
என்று வேறு நாக்கூசாமல் சொல்கிறார்...

ஏங்க இப்படி தெய்வம் மனிதனுக்குள்ள வந்து எல்லா காரியங்களும் செய்தா நமக்கு எதுக்கு படிப்பு, வேலை? எல்லாத்தையும் தெய்வம் பார்த்துக் கொள்ளாதா? கடவுள் வழிதான் காட்டுவார் நாம தான் அதை கடவுள் கொடுத்த மூளையை வைத்து நல்லவிதமா நமக்கும் பிறருக்கும் பயன்படும் விதமா அமைத்து வாழ்க்கையை உயர்த்திக்கனும்.... அதை விட்டுட்டு , எல்லாருக்கு எப்போதும் நன்மை செய்யக் கூடிய கடவுள் மேல் பழிபோட்டு இப்படி தீய காரியங்கள் செய்யலாமா?

இந்த நிகழ்வுகளையெல்லாம் படித்த பிறகு என்ன தோன்றுகிறது நமக்கு.... நம் நாட்டில் மாற வேண்டியது பல உள்ளன... மக்களுக்காக மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் தாராளம்.... அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளும் அதற்கு நம் ஒத்துழைப்பும் ஏராளம் தேவை... நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு ஆகா இந்தியா எங்கோ போகிறது என்று பேசி பெருமைக் கொள்வதில் தவறில்லை ஆனால் இன்னும் நல்லவிதமாக முன்னேற நம் கடமைகளை இனியாவது செம்மையாக ஆற்றுவோம்...

சுதந்திர தினத்தன்று மட்டும் நாட்டுப்பற்று வந்து என்ன பயன்? நாட்டுப்பற்றினை நாள்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்! முயற்சிப்போமே!






22 comments:

Anonymous said...

Hats Off to ur View...

நட்புடன் ஜமால் said...

நிகழ்வுகள் வருத்தம் தந்தாலும்

--------------

சுதந்திர தினத்தன்று மட்டும் நாட்டுப்பற்று வந்து என்ன பயன்? நாட்டுப்பற்றினை நாள்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்! முயற்சிப்போமே!]]


இதை படிக்கையில் சந்தோஷமாக இருக்கின்றது - இது போன்ற எண்ணங்கள் எல்லோருக்கும் வந்துவிட்டால் :)

எம்.எம்.அப்துல்லா said...

//சுதந்திர தினத்தன்று மட்டும் நாட்டுப்பற்று வந்து என்ன பயன்? நாட்டுப்பற்றினை நாள்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்! முயற்சிப்போமே!

//

முத்தாய்பு.

manjoorraja said...

மிக முக்கியமான விசயத்தை எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியை ஒரு நண்பரின் வீட்டுக்கு போகும்போது வேறு வழியில்லாததால் பார்க்கும்படியாகிவிட்டது. கண்றாவியான மிகவும் அருவருக்கத்தக்க செயலாகவே அப்பெண் செய்ததை கூறலாம. இதற்கு அவரது தந்தையே ஒத்தூதுவதை காண்கையில் மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. கடவுள் என்ற பெயரில் நடக்கும் இம்மாதிரி மாய்மாலங்களை பார்க்கையில் நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது.
ஐடி துறையினரை குறைக்கூறுபவர்கள் இம்மாதிரி பல இடங்களிலும் நடக்கும் கூத்துகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என தெரியவில்லை. (தற்போது ஐடி துறையினரின் பாடு மிகவும் மோசம் என்பது வேறு விசயம்).

இலவசங்கள் கொடுத்தே (யார் வீட்டு பணம் என தெரியவில்லை) ஏமாற்றும் ஒரு ஆட்சி.

என்ன செய்ய. புலம்புவதை தவிர!

வனம் said...

வணக்கம்

மிகச்சரியான மதிப்பீடுகள்.

இராஜராஜன்

Karthik said...

உண்மையில் ரொம்ப நல்ல பதிவு. மீண்டும் வந்து விரிவாக கமெண்டுகிறேன். :)

jothi said...

ரொம்ப நாளைக்கு பின் நச்சென்ற பதிவு படித்த திருப்தி. உண்மையிலேயே,.. ஒரு நல்ல பதிவை தந்ததிற்கு மிக்க நன்றி

உங்கள் பல எண்ணங்களுடன் நானும் ஒத்துப் போகின்றேன். முக்கியமாக அந்த ரோட்டோர ஜனங்கள்.

jothi said...

//அவர் மனதிலும் எந்தக் குறைகளன்றி உண்ண உணவிலும் எந்தக் குறையுமின்றி நோய் ஏதுமின்றி இருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக அவளமோடு வாழ்கிறார் என்று கூறுவோம்....//

ரொம்ப சரி. பணத்திற்கும் மனத்திற்கும் சம்பந்தம் இல்லை

jothi said...

//அவர்கள் இருப்பிடத்தைவிட்டு மீண்டும் பிளாட்பாரத்திற்கு வந்தால் (அப்படியும் நடக்கிறது ) கடுமையான தண்டனைகளை விதிக்கலாம்!//

வழி மொழிகிறேன்,..

jothi said...

//இவங்களால கலாச்சாரம் கெடுது அது இது என்று ஐடி மக்களை குறை கூறுவதே பொறாமை பிடித்த பல மக்களின் வேலையாகப் போயிற்று! //
கிராமத்தில் கரகாட்டம் பாத்திருக்கிற அனுபவம் உங்களுக்கிருக்க வாய்ப்பில்லை. அவை பல இடங்களில் மிக மிக வக்கிரமாய் இருக்கும். அவை படங்களில் வரும் காப்ரேயை விட மோசமானவை. இப்போது கிராமங்களில் கூட கலை ஆட்டங்கள் நடக்கின்றன. அவையும் இந்த வகையை சேர்ந்தவையே,.. (எல்லா இடங்களிலும் இல்லை).

jothi said...

//"நீங்கள் தவறுனா நினைச்சாலும் பரவால எனக்கும் அது தவறுனு தெரியும் ஆனா கருப்புதான் கஞ்சா அடிக்கிறார் //

இன்றைக்கு மக்கள் மனமே மாறிவிட்டது. தவறுகளை ஏற்றுக்கொள்ள பழகி கொண்டுவிட்டோம்.

லஞ்சம் கொடுப்பது தவறென்று தெரியவில்லை. வாங்குவது பிச்சை என்றும் தெரியவில்லை.

தண்ணி அடிப்பது தப்பு என்று சொல்லமுடியாத அளவிற்கு மனங்கள் துருப்பிடித்து போய்விட்டது.

அப்பா இன்னும் சொந்த காலில் நிற்கிறார் என சொல்வது நமக்கு வெட்கமாக தெரியவில்லை.

கூட்டுக்குடும்பத்தை ஒழித்து நாம் வெளியில் வருவது சில இளசுகளுக்கு அது வெற்றியாக தெரிகிறது.

இப்படி பல,..

ஆகாய நதி said...

நன்றி அனானி அவர்களே!

ஆகாய நதி said...

நன்றி ஜமால்... எல்லாருக்கும் இது போன்று எண்ணங்கள் நிச்சயம் இருக்கும் அதனை உணர்ந்து வெளிப்படுத்தினார்களானால் நம் நாடு எங்கோ சென்று விடும் :)

ஆகாய நதி said...

நன்றி அப்துல்லா...

ஆகாய நதி said...

நன்றி மஞ்சூர் ராசா! புலம்ப தேவையில்லை... நாம் நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும் :)

ஆகாய நதி said...

செய்திவளையம் குழுவினருக்கு என் நன்றிகள்! :)

ஆகாய நதி said...

நன்றி இராஜராஜன் அவர்களே!

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்!

ஆகாய நதி said...

ரொம்ப நன்றி ஜோதி!

ஆகாய நதி said...

//
கிராமத்தில் கரகாட்டம் பாத்திருக்கிற அனுபவம் உங்களுக்கிருக்க வாய்ப்பில்லை. அவை பல இடங்களில் மிக மிக வக்கிரமாய் இருக்கும். அவை படங்களில் வரும் காப்ரேயை விட மோசமானவை. இப்போது கிராமங்களில் கூட கலை ஆட்டங்கள் நடக்கின்றன. அவையும் இந்த வகையை சேர்ந்தவையே,.. (எல்லா இடங்களிலும் இல்லை).
//

நானும் இது பற்றி கேள்விப்பட்டும் திரையில் பார்த்தும் இருக்கிறேன்... மகா கேவலமான ஒரு மேக்கப் மற்றும் ஆடை எங்கே என்று தேடும் அளவுக்கு ஆடை :(

பித்தனின் வாக்கு said...

சுவற்றில் வண்ண சித்திரம் வரையும் காசில் ப்ளாட்ப்பாம் வாசிகளுக்கு நல்லது செய்யலாம்.
வாங்க்கிங் போகும் பூங்கா கட்டுவதற்கு பதில் நல்ல வீடு கட்டித்தராலாம். அருமையான வரிகள்.
நல்ல யோசனை உங்களின் எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கூட இல்லாமல் நாட்டில் ஆயிரம் போர் உள்ளனர்.

ஆனால் நம் நாடு ஏன் இன்னமும் உருப்படாமல் உள்ளது தெரியுமா?

தன்னிடம் ஆயிரம் தப்பை வைத்துகொண்டு அடுத்தவனை குறை கூறுவதுதான்.

தாங்கள் தவறாக எடுத்துகொள்ளவில்லை என்றால் ஒரு கேள்வி. உங்களின் ஒரு 4 பதிவு முன்னொக்கி பாருங்கள்

உங்கள் வீட்டு குட்டி கண்ணணின் பிறந்த நாள் போட்டாக்களை அந்த குழந்தைக்கு எனது ஆசியும் வாழ்த்துக்கள்.

அந்த போட்டாவில் கானும் ஆடம்பரமான கேக் பார்த்தீர்களா. உங்கள் எலுதும் நடை அய்யங்க்கார் போல் உள்ளது ஆனால் முட்டை கலந்த கொழுப்பு நிறைந்த அந்த கேக் வாங்கும் காசில் குழுந்தையின் பிறந்த நாளுக்கு அனாதை குழந்தைக்கு உணவு போட்டு இருக்கலாம். அல்லது 4 ஏழைக்குழந்தைக்கு படிக்க பணம் கொடுத்து இருக்கலாம்.

அல்லது உங்க தம்பீ எனக்கு ஒரு ....... அடிக்க பணம் கொடுத்து இருக்கலாம் (சும்மா காமடி).

உங்களை பாருங்கள் ஊருக்கு உபகாரம் சொல்லுங்கள்.

ஆகாய நதி said...

வாங்க பித்தன்... வருகைக்கு நன்றி... நான் இங்கு நாம் மாற வேண்டும் என்று தான் கூறியிருக்கிறேன்... அது என்னையும் சேர்த்துதான் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

நாங்கள் பிறருக்கு அதிலும் அனாதைக் குழுந்தைகளுக்கு உதவி செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
என்னை நேரில் பார்த்து நான் நடவடிக்கைகளை கவனித்தீரா? இல்லையே பின் எப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வரலாம்?

வலது கை செய்யும் தானம் இடது கைக்கு தெரியக்கூடாது.... எனக்கும் என் கணவருக்கும் பொதுவான அபிப்ராயத்தில் முக்கியமாக இருப்பது ஏழைகளுக்கு உதவுவது தான்...

ஆதலால் பிறரைக் குறை கூறாதீர்கள் என்று கூறூம் நீங்களே பார்த்து குறை கூறுவது நல்லது...

பிறகு ஒரு விஷயம் என் பதிவிலேயே என் சாதி என்னவாக இருக்கும் என்று யூகிக்க முயற்சித்திருக்கும் உங்களைப் பற்றி என்ன சொல்வது?

சாதிகள் இல்லையடி பாப்பா படித்திருக்கிறீர்களா?

என்னைப் பார்க்கமலே பேசாமலே என் எழுத்தை மட்டும் வைத்து சாதியை கணிக்க முயன்றிருக்கிறீர்களே? பின் எப்படி இந்தியா மாறும்?