August 31, 2009

எழும்பூர் இரயில் நிலையமும்.....

எழும்பூர் இரயில் நிலையமும், தி।நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களும் குறிப்பாக பொத்தேரி இவை என் வாழ்வின் இனிமை, மகிழ்ச்சி மட்டுமே பார்த்த இடங்கள்!

சின்ன வயதிலிருந்தே அடிக்கடி சென்னை வந்து பழகியிருந்தாலும் நான் என் மேல்நிலைப் படிப்பிற்காக சென்னையிலுள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன் அங்கு கேம்பஸ் இன்டெர்வியூ வாய்ப்புகள் அதிகம் என்பதால்! ஆனால் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த போது நான் வெளியே காட்ட விரும்பாத பயமும் பீதியும் ஒரு மாதிரியான உணர்வும் என்னை ஆக்கிரமிச்சது நிஜம்! ஆனால் அதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்!

அடிக்கடி சென்னை விஜயம் என்பதால் எனக்கு எப்போது எழும்பூர் இரயில் நிலையம், மலைக்கோட்டை விரைவு இரயில், திநகர் ஆகியவை மனதிற்குப் பிடித்தமானவை :)


கல்லூரி படிப்பு நல்லவிதமாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் வார விடுமுறைகளை நாங்கள் வீணாக்குவதே இல்லை! ஒரு நாள் படிப்பு, ரெக்கார்ட், மெஸ் உணவு, அழகாகும் முயற்சிகள்(கி கி கி வெள்ளரிக்காய், தயிர், எண்ணெய் மற்றும் இன்னபிற பூசி 2மணி நேரம் குளிப்பது) ஆகியவை நடந்தேறும்.... அடுத்த நாள் காலை சுறுசுறுப்பாக எழுந்து குளித்து அழகாக ரெடியாகி(அவ்வ்வ் பார்ப்பவர்கள் பாவம்) மாடர்ன் சிம்பிளா ஜீன்ஸ்+குர்தா (அ) டீசர்ட் போட்டுக்கிட்டு கோயிலுக்கு போவோம் பிரகு மெஸ்ல அவசரகதியா உணவு முடிச்சிட்டு காலை 10மணி பீச் டிரெயின் தான் டார்கெட்...


நாங்கள் எங்கே ஊர் சுற்ற போனாலும் 10மணி டிரெயின் தான்.... நாங்க பெண்கள் மட்டும் சேர்ந்து போவதால லேடிஸ் பொட்டிக்குள்ள புகுந்துடுவோம்... உள்ளே போயி சிக்கிச்சின்னாபின்னமாகி கசங்கி பூச்சாண்டி மாதிரியே உருமாறி ( ஏற்கனவே அப்படித்தான்ற உண்மைலாம் இப்போ யோசிக்கப் படாது) நாங்க இறங்கும் இடம் திநகர் அல்லது எழும்பூர் அல்லது நுங்கம்பாக்கம்...

சென்னைல எங்கே போகனும்னாலும் இந்த மூன்று இடங்கள் போதும் இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் ரூட் பிடிச்சிடலாம் :)

ஸ்பென்ஸர் பிளாசா:
***********************

ஒரு வழியா எழும்பூர்ல இறங்கி ஆட்டோ பிடிச்சி 30ரூபாய் கொடுத்தா ஸ்பென்ஸர்ஸ் போலாம் வெயில் ரொம்ப இருந்தா அங்கே போய்ட்டா நல்லா சுற்றின மாதிரியும் இருக்கும் ஏசில இருந்தா மாதிரியும் இருக்கும்(எப்பூடி??) !

ஸ்பென்ஸர்ல தப்பித்தவறி கூட பெரிய கடைகளில் எதுவுமே வாங்கிடக் கூடாது..... போனோமா எல்லா பொருளையும் ரேட் கார்டோட பார்த்தோமானு இருக்கனும்.... அதுக்காக ஒண்ணுமே வாங்கலனா எப்பிடி அதுனால லைஃஸ்டைல்ல வேணும்னா ஏதோ ஒன்றிரண்டு வாங்கிக்கலாம்.... நான் பொதுவா புக், சாக்லேட், கிரீடிங் கார்ட் வாங்குவேன்! ஸ்பென்ஸர்ல கூட சீப்பா (அட ஸ்பென்ஸர்குள்ள அது தாங்க சீப்) துணிகள் வாங்க சில கடைகள் இருக்கு.... அது ரொம்ப உள்ளே போகனும்.... அங்கே 100ரூபாய்க்கு அழகான டாப்ஸ், 300ரூபாய்க்கு அழகழகான குர்தா, 350லிருந்து 700ரூபாய் வரை அழகான முழு நீள ஃபேஷன் ஸ்கெர்ட் கிடைக்கும்.... அட நெசமாதாங்க... ஆனா தரம் ரொம்ப நல்லா இருக்கும்!

அப்புறம் ஃபுட் கோர்ட் போயி அரைவயித்துக்கு ஏதாவது போட்டுகிட்டு லம்பா காசைக் கொடுத்துட்டு நடையகட்ட வேண்டியதுதான்...

அபிராமி மெகா மால்:
************************

இங்கே போகனும்னா நுங்கம்பாக்கம்ல இறங்கி பஸ் கிடைக்கும் இல்லனா நல்லா பேரம் பேசினா 40ரூபாய் இல்லனா 50ரூபாய் கொடுத்தா ஆட்டோல போயிடலாம் ! அது அழகான இடம் நல்லா பொழுதை போக்கலாம்... ஸ்பென்ஸரைவிட இங்கே ஃபேன்ஸி பொருட்கள் விலை சற்று குறைவு... அப்பிடி இப்படி சுற்றிக் கொண்டே இருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு தான் வருவோம்.... இங்கே தியேட்டரும் இருப்பதால் படம் பார்க்கலாம்.... நாங்க இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை கஜினி இங்கே பார்த்தோம்.... வெளியே வந்தால் கொஞ்சம் டீசென்டான திநகர்....

இஸ் ஃபன்னி சென்டர்:
*************************

அண்ணாநகர், நுங்கம்பாக்கம்ல இருந்து ஷேர் ஆட்டோ, அல்லது நுங்கம்பாக்கம்ல இருந்து 30ரூபாய் ஆட்டோக்கு அழுதா இங்கே வந்துடலாம்! ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஆனால் ஸ்பென்ஸர் மேரி பிரவுன் உணவைவிட இங்கே இருக்கும் மேரி பிரவுன் எனக்கு மிகவும் பிடிக்கும்.... ஏனா இங்கே நல்லா பொறுமையா கவனிப்பாங்க... அமைதியான அழகான இடம்.... இங்கே எனக்கு பிடித்தது சீஸ் பர்கரும், பீட்ஸாவும், சமோசா மற்றும் கட்லெட்டும்! ரொம்ப சூடாவும் சுவையாவும் இருக்கும்!

இங்கே எப்போ போனாலும் யாராவது சினிமா விஐபி பார்க்கலாம்.... நான் பிருந்தா மாஸ்டர், குஷ்பூ மற்றும் குடும்பத்தாரை இங்கே தான் பார்த்தேன்...

இங்கே காஃபிடே மிக பிரபலம்.... பல கிளைகள் இருந்தாலும் இந்த கிளை மிக பிரபலம்! எனக்கும் காஃபிக்கும் வெகு தூரம் அதுனால் இந்த பக்கம் ஒதுங்கினது இல்ல....

இது நம்ம ஏரியா:
*******************

ஹி ஹி அதாங்க திநகர்! இதைப்பற்றி உங்களுக்கு சொல்லனுமா என்ன?

சரவணா ஸ்டோர் போயி சுற்றிப்பார்த்துட்டு, சென்னை சில்க்ஸ்ல, குமரன்ல, போத்தீஸ்ல ஏதாவது ஒரு கடைல டிரெஸ் எடுத்துட்டு, அப்புறம் இரயிவேஸ்டேஷன் பக்கத்துலயே ஒரு வளையல் கடை இருக்கு அங்கே போனா எல்லாவிதமான ஃபேன்ஸீ பொருட்களும் கி்டைக்கும்... அங்கே போயி காதுக்கு வளையல், காதுக்கு செயின்(கி கி கி) எல்லாம் வாங்குவோம்!
ஆங் அப்புறம் என் கணவர் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு பின் என்னை அழைத்துச் சென்ற முதல் இடமும் இது தான்! அங்கே தான் எனக்கு விலையுயர்ந்த அழகான பரிசும் கொடுத்தார்! சோ சென்டிமென்டலாவும் எனக்குப் பிடித்த இடம்!

நுங்கம்பாக்கம்:
****************

இதுவும் என்னால் மறக்க முடியாத இரயிவே நிலையம்.... பின்னே என்னங்க காலைல 6மணி இரயிலைப் பிடித்து 7மணிக்கு நுங்கம்பாக்கம் வந்திறங்கி அங்கே இருக்கும் ஒரு பிளாட்பாரக் கடையில் சூடான சுவையான இட்லி, வடை சாப்பிட்டுவிட்டு பரபரப்பா வெளியே போயி பிடிட்ஜ தாண்டினதும் ஷேர் ஆட்டோ பிடித்து ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்படி எங்கே அவசரமா போவோம் தெரியுமா.... ஜப்பனீஸ் மொழி கற்றுக் கொள்ள வகுப்பிற்கு தான்!
அதுக்காக நான் ஜப்பானீஸ் மொழில பேசுவேனானுலாம் கேட்கப்படாது! அது பரம இரகசியம்! :)

இதுதான் எங்களோட ஃபேவரிட் ஊற் சுற்றும் இடங்கள்! :)

இது இல்லாமல் நான் சென்று மகிழ்ந்த அழகான எனக்கும் பிடித்தமான இடங்கள் பெசண்ட் நகர் வழியே நாங்க போன முருகன் இட்லி கடை, பிட்ஸா ஹட், மேரி பிரவுன், சரவண பவன், மெரினா பீச், திநகர், அண்ணா நகர் முழுவதும், சத்யம் தியேட்டர் (இது மட்டும் போனதில்ல) , மாயாஜால், மைலாப்பூர் கோயில், தாம்பரம் கோயில், நுங்கம்பாக்கம் இட்லி கடை, தாம்பரம் வஸந்தபவன் இப்படிப் பல இடங்கள்.... (என்ன ஒரே ஹோட்டல்களாக இருக்கேனு என் சாப்பாட்டு விஷயத்தை பற்றிலாம் யோசிக்கப்பிடாது ஆமாம் சொல்லிட்டேன்) !

அப்புறம் எங்கள் கல்லூரியை சுற்றி இருக்கும் கடைகளுக்கு போவோம்... ஜூஸ் குடிப்போம்....

இப்படியாக எழும்பூர் இரயில் நிலையமும் அங்கு தொடங்கிய என் சென்னைக் காதலும் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது! இப்படி என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான தருணங்களை அதிகம் பார்த்த சென்னையின் பிறந்தநாளுக்கு என்னுடைய காலம் தாழ்ந்த வாழ்த்தும், நன்றி கூர்ந்து பதிவிட இந்த மொக்கை பதிவும்! :)

சென்னை வாழ்க!மெரினா பீச் வாழ்க!

11 comments:

குப்பன்.யாஹூ said...

post is good, but still there are more places like Central railway station, Koyambedu bus stand, st thomas mount church, Triplicane, Higinsbothams Mount road, Kanemara library etc.

கார்த்திக் பிரபு said...

nalla vandhruku valthukal

எம்.எம்.அப்துல்லா said...

நீங்க சொன்ன அதே இடங்கள்லதான் நாங்களும் சுத்துனோம். காரணம்....
ஹி...ஹி...ஹி....

இந்த இடங்களுக்கெல்லாம் அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ஸ்னோ பவுலிங் பின்பக்கம் ஓரு பெரிய ஓப்பன் பார் இருந்துச்சு. எல்லா பிரைவேட் ஷாப்பும் டாஸ்மாக் ஆக்குன அப்புறம் அதை மூடிட்டாங்க.

:)

jothi said...

சென்னைல இருக்கவுஙகல விட நீங்க நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க,..

ஆகாய நதி said...

நன்றி ராம்ஜி.... ஆகா எனக்குப் பிடித்தமான சில இடங்களை சொல்ல மறந்துட்டேனே....

நினைவு படுத்தியதற்கு நன்றி! :)

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக் பிரபு :)

ஆகாய நதி said...

நன்றி அப்துல்லா...

பார் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாதே :)

ஸ்னோ பவுலிங் போயிருக்கிறேன் :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! ஹி ஹி ஹி! இன்னும் நான் சொல்லாமல் விட்டது சில இருக்கு... ஹிக்கின்பாதம்ஸ், மீனாட்சி கல்லூரி, பின் சில கல்லூரிகள் போட்டிக்காக சென்றது பின் மத்திய இரயில் நிலையம் இப்படி ஏராளம் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது நம்ம ஏரியா:
*******************


hee நமக்கும் தாங்க

சூப்பர் போஸ்ட்

ஆகாய நதி said...

நன்றி அமித்து அம்மா! :)

Dhiyana said...

பதிவு நல்லாயிருந்திச்சு ஆகாயநதி.. ஆனால் சென்னைப் பத்தின அறிவு எனக்குக் கம்மி..