
மாய வலையில்
சிக்கி தேடினேன்
வலையே நீயாக
சிக்கியதோ உன்னில்
தேடியதோ என்னை
கிடைத்ததோ காதல்
ஏனோ கசக்கிறது
அன்று இனித்தவை
ஏனோ இனிக்கிறது
உன்னை நினைக்கையில்
யாரோ நீ யாரோ
என்னில் ஏனோ
வந்தே புகுந்தாய்
நொடிகள் தோறும்
இம்சை ஏனோ
காதல்
இது நஞ்சோ??
நொடிகள் தோறும்
இனிமை ஏனோ
காதல்
இது அமுதோ??
கன்னம் சிவக்க
இதயம் வலிக்க
கண்கள் பேச
தனியே சிரிக்க
இரவோ நீள
விடியல் தேடி
உன்னைக் காண
நானோ காத்திருக்க
ஏனோ மாற்றம்
உன்னால் தானோ!!!!!!!!
பின் குறிப்பு:
கவிதை போன்றும் அல்லாமலும் வந்த இந்த கவுஜக்கு கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மன்னிக்கவும் :(