Showing posts with label தமிழ்க் காப்பியம். Show all posts
Showing posts with label தமிழ்க் காப்பியம். Show all posts

April 14, 2009

என் குழப்பங்களுக்கு விடை கூறுங்களேன் அறிந்தவர்கள்

நம் பழம் பெரும் காப்பியமான இராமாயணத்தில் எனக்கு பல கேள்விகள் உண்டு!
நான் என் சந்தேகங்களை கேள்வியாக அடுக்குகிறேன்... தயவு செய்து இது பற்றி அறிந்தவர்கள் பதில் கூறுங்களேன்...

நான் சிறு வயதில் தொலைக்காட்சி மூலமாகவும், கோயில் பிரசங்கம் மூலமாகவும், இராமகிருஷ்ண தபோவனப் புத்தகங்கள் மூலமாகவும் இறுதியாக கம்ப இராமாயணம் மூலமாகவும் இராமாயண்த்தை அறிந்துள்ளேன்.

எனக்கும் என் கணவருக்கும் இடையே இது பற்றி பல விவாதங்கள் நடந்ததுண்டு... எனினும் எனக்குள்ளேயே பல சந்தேகங்கள் உண்டு... நான் வேறு சில நூல்கள் மூலம் வேறு மாதிரியாகவும் இராமாயணக்கதையைப் படித்துள்ளேன்... அதில் தான் குழப்பமே!

இதோ என்னுடைய கேள்விகள்... உங்கள் பதில் மூலம் என் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் மக்களே!

சிறந்த விளக்கத்துக்கு எதிர்பாராத சிறந்த பரிசு உண்டு! :)(சத்தியமாங்க)

1. இராவணன் சீதைக்குத் தந்தையா?

2. அது உண்மையெனில் எதற்காக சீதையைக் கடத்தி சிறை படுத்த வேண்டும்

3. சீதையாக உரு மாறி இராவணனுடன் சென்றது வேதவல்லியா?

4. அது உண்மையெனில் வேதவல்லி தான் பத்மாவதி தாயாரா?

5. சீதையை இராமன் ஏன் தீக்குளிக்கச் செய்ய வேண்டும்? அக்னி தேவனிடம் இருந்து
சீதையைப் பெற்று வேதவல்லியை அவரிடம் ஒப்படைக்கவா?

6. கம்பர் கூற்றுப்படி இராவணன் ஒரு சிறந்த அரசன் எனில் அவனைக் கொல்ல வேண்டி திருமால் அவதரிக்கக் காரணம் என்ன?

7. இராமாயண்க்கதை உண்மை நிகழ்வா அல்லது கற்பனையா?