Showing posts with label அநியாயத்திற்கு எதிர் குரல். Show all posts
Showing posts with label அநியாயத்திற்கு எதிர் குரல். Show all posts

August 3, 2011

மார்கண்டேயனா குழந்தைகளின் நற்குணத்துக்கு எமனா?

தற்போது புதிதாக வெளிவந்துள்ள திரைப்படம் மார்கண்டேயனில் முதல் காட்சி,


" தன்னை சோறுபோட்டு அழைத்துவந்தவரின் மன உளைச்சலுக்குக் காரணமான ஒருவனை அந்த பத்து வயதோ அதை ஒட்டியோ உள்ள சிறுவன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டுகிறான்... அதே வயதை ஒத்த சிறுவர்கள் பலரும் இப்படி அரிவாள், கத்தி என்று பயங்கர ஆயுதங்களுடன் அவனை துரத்துவார்கள், ஆனால் இவன் வெட்டி வீழ்த்திவிடுவான்"


இந்தக் காட்சி தேவையா? இதை எப்படி திரைப்பட தணிக்கைக் குழு அனுமதித்தது.... இதைக் காணும் சிறுவர்களின் நிலை என்ன? அவர்கள் மனதில் நஞ்சினை விதைப்பது போலாகாதா? இத்திரைப்படத்தினை தடை செய்தே ஆக வேண்டும்... அல்லது இம்மாதிரியான காட்சியையாவது நீக்க வேண்டும்....


இதனைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

August 27, 2009

இரத்தக் கண்ணீரே வந்துவிடும் போல

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித் தாளில் படித்த செய்தி... இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே தாயால் துணியில் கட்டி பையில் போடப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு கடைசியில் துணிப் பையிலேயே.... அய்யோ சொல்லவே கண் கலங்குது.... இரண்டு பிஞ்சும் படைத்த கடவுளிடமே போய்ட்டாங்க.... பாவம் தாய் வயிற்றில் இருக்கப்போ இந்த உலகத்தைப் பற்றி எப்படியெல்லாம் நினைத்திருக்கும் இரு பிஞ்சுகளும்...

எப்படி இப்படியெல்லாம் செய்ய மனம் வருது பெற்ற தாய்க்கே? இரத்தக் கண்ணீரே வருகிறது :(

நேற்றும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விஷயம் இது போலத் தான் அசுத்த நீர் ஓடு சாக்கடையில் வீசப்பட்டக் குழந்தை.... கடவுளே குழந்தையை வேண்டம்னு முடிவு பண்ணவங்க.... அதுங்க உயிர்வாழவே முடியாதபடி ஏன் சாக்கடைகளிலும், கண்ட இடங்களிலும் வீசுறாங்க? தொட்டில் குழந்தை திட்டம், தொண்டு நிறுவனம், ஆசிரமம் இப்படி எங்கேயாவது விடலாமே?

இல்லையென்றால் குழந்தை இல்லாத எத்துணையோ பேர் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்க அவர்களிடம் கொடுக்கலாம்.... அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இப்படி?

சுய விருப்பம் இல்லாமல் நிச்சயம் கருத்தரிக்க முடியாது... தெரிந்தே கொலை செய்யும் இந்த பெண்களை என்ன செய்வது?

ஒரு ஆணிடம் ஏமாந்தவர்கள், பெண் குழந்தை என்றால் மறுக்கும் கணவன் குடும்பத்தாருக்கு பயந்தவர்கள், தகாத காதல் மற்றும் கள்ள உறவினால் கருத்தரித்தவர்கள் இப்படி பலர் இந்த வரிசையில் பிஞ்சுகளை பலியாக்கிவிட்டுச் செல்கிறார்கள் :(

இதயெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.... அந்தப் பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஓர் உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது :(

நம்மால் ஆன உதவிகளை இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யவேண்டும்...
முடிந்தால் தத்து எடுத்து வளர்ப்போம் அல்லது அவர்களை வளர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவோம்!
இது என் பல வருடக் கனவு....

ஆனால் இப்படி தொண்டு நிறுவனம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த கல் நெஞ்சம் படைத்தவர்கள் குழந்தைகளை இப்படி வீசுகிறார்கள்!

தாயன்புக்கு ஏங்கி உறவுகள் இன்றி வாழும் அந்தக் குழந்தைகள் மனதில் எத்தகைய காயம் உருவாகும் :( என்ன தான் நாம் உதவினாலும் தாய் தரும் அன்புக்கு ஈடாகுமா? என்று மாறுமோ இந்த நிலை!

April 30, 2009

என்னதான் நடக்குது நம்ம நாட்டு இரயில்வே துறையில?

( இந்த வியாசர்பாடி இரயில் விபத்து சதில உயிர்விட்ட நல்ல உள்ளங்களுக்கு மட்டும் எனது ஆழ்ந்த இரங்கலை சம்ர்ப்பிக்கிறேன்... அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். :( )

என்னதான் நடக்குது நம்ம நாட்டு இரயில்வே துறையில?

இந்த வியாசர்பாடி இரயில் விபத்துக்கு இரயில்வே துறை அதிகாரிகள் சொல்லும் கதைய பாருங்க...

இந்த விபத்த ஆராயுறோம்னு சொன்னாங்க.. சரி..

அடுத்து இது விபத்து இல்ல... யாரோ இரயில சொல்லாம எடுத்துட்டு போயிருக்காங்கனு சொன்னாங்க...

அப்புறம் அது ஆந்திரா ஆளுனு சொன்னாங்க...

இப்போ அது தீவிரவாதியா இருக்கலாம்னு சொல்றாங்க...

இது எல்லாமே சரி... ஆனால் எனக்கு சில சந்தேகம்... மக்கள்ஸ் இது உங்களுக்கும் இருக்குனு நினைக்கிறேன் :(

******

இரயில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கிளம்பியப்போ அதோட உண்மையான டிரைவர் என்ன பண்ணிட்டிருந்தாரு?

******

அப்படியே அவரு காபி, டீ சாப்பிட்டுகிட்டு கவனிக்கலனாலும் வண்டி கிளம்பினது தெரிந்ததும் ஏன் புகார் கொடுக்கல?

******

அவர் தான் கடமையை ஒழுங்கா செய்யல... சரி விட்டுருவோம்... இந்த டைம் கீப்பர் என்ன பண்ணிட்டு இருந்தாரு? ஒரு வண்டி கிளம்பும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்புதேனு ஏன் கவனிக்கல?

******

சிக்னல் இன்சார்ஜ் என்ன பண்ணிட்டிருந்தாரு? வண்டி ஸ்டேஷன விட்டு அவர் சிக்னல் இல்லாம வெளிய வர முடியாதே... அப்படி வருதுனா அப்போ இவரு புகார் கொடுக்காம என்ன பண்ணிட்டிருந்தாரு?

******

சரி இவுங்க எல்லாரும் வண்டி கிளம்பும் நேரத்துல கோட்டை விட்டாலும் வண்டி கிளம்பியதும் அடுத்த சிக்னல்/ஸ்டேஷன்ல பிடிச்சுருக்கலாமே? ஏன் அப்படி செய்யல?

******
இப்படி பல பல சந்தேகங்கள்... :(

எல்லாருமே சேர்ந்து தெரிந்தே ஒரு வண்டிய அதில உள்ள உயிர்களை மரணப் பாதைக்கு அனுப்பி வேடிக்கைப் பார்த்துட்டு இன்னைக்கு வந்து மைக் கைக்கு வந்துட்டா என்ன கதை வேணாலும் சொல்லலாம்னு சொல்றாங்களா?

என்ன சொன்னாலும் மக்கள் நம்புவாங்கனு சொல்றாங்களா?

இது தீவிரவாதிகள் செயல்னா இதுக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போன இரயில்வே நிர்வாகம், ஓட்டுனர், சிக்னல் மேன், டைம் கீப்பர் உட்பட எல்லாரும் தீவிரவாதிங்கதான்.

இதுக்கு சரியான நியாயம் கிடைக்கனும். உயிரோட மதிப்பு அவ்வளவு தானா??? :(:(


" யாரோ அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வண்டிய கிளப்பிட்டு போய்ட்டிருக்காங்கனு" சொல்றாரே? அந்த யாரோவ கவனிக்காம அந்த நேரத்துல கடமை தவறின அத்துணை பேரையும் அதே டிராக்ல நிக்கவெச்சு வண்டிய ஏத்தலாம்னு சொன்னா அப்போ தெரியும் மரண வலி என்னனு... அப்போ தான் உணருவாங்க அவங்க தவறை... இப்போ மைக் புடிச்சு பேச எல்லாம் எளிதாதான் இருக்கும்.

இது தேர்தல் நேர சதியா?

அரசியல் சதியா?

சைக்கோ சதியா?

தீவிரவாத சதியா?

இல்ல கவனக்குறைவினால் ஏற்பட்ட விபத்தா?

எது எப்படி இருப்பினும் தவறு மேலே நான் சொன்னவர்களையும் சார்ந்தது தான். நீங்க என்ன சொல்றீங்க?