
என் கையில் உனை ஏந்தி
உன்னில் என் உயிர் ஏத்தி
உன்
வாசமே சுவாசமாக
சுவாசமே நீயாக
உன்னையே நேசித்து
உன்னையே வாசித்து
உனக்கான எதிர்காலம்
என் கனவுகளாய்
என்றும் வேண்டுகிறேன்
இறைவனை உன் நலனுக்காக
என் அன்பு மகனே
உன் அம்மாவின் வாழ்த்துகள்
என்றும் உனதாகுக!!!
பிறந்த நாள் வாழ்த்துகள் பொழிலன்!