April 30, 2009

என்னதான் நடக்குது நம்ம நாட்டு இரயில்வே துறையில?

( இந்த வியாசர்பாடி இரயில் விபத்து சதில உயிர்விட்ட நல்ல உள்ளங்களுக்கு மட்டும் எனது ஆழ்ந்த இரங்கலை சம்ர்ப்பிக்கிறேன்... அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். :( )

என்னதான் நடக்குது நம்ம நாட்டு இரயில்வே துறையில?

இந்த வியாசர்பாடி இரயில் விபத்துக்கு இரயில்வே துறை அதிகாரிகள் சொல்லும் கதைய பாருங்க...

இந்த விபத்த ஆராயுறோம்னு சொன்னாங்க.. சரி..

அடுத்து இது விபத்து இல்ல... யாரோ இரயில சொல்லாம எடுத்துட்டு போயிருக்காங்கனு சொன்னாங்க...

அப்புறம் அது ஆந்திரா ஆளுனு சொன்னாங்க...

இப்போ அது தீவிரவாதியா இருக்கலாம்னு சொல்றாங்க...

இது எல்லாமே சரி... ஆனால் எனக்கு சில சந்தேகம்... மக்கள்ஸ் இது உங்களுக்கும் இருக்குனு நினைக்கிறேன் :(

******

இரயில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கிளம்பியப்போ அதோட உண்மையான டிரைவர் என்ன பண்ணிட்டிருந்தாரு?

******

அப்படியே அவரு காபி, டீ சாப்பிட்டுகிட்டு கவனிக்கலனாலும் வண்டி கிளம்பினது தெரிந்ததும் ஏன் புகார் கொடுக்கல?

******

அவர் தான் கடமையை ஒழுங்கா செய்யல... சரி விட்டுருவோம்... இந்த டைம் கீப்பர் என்ன பண்ணிட்டு இருந்தாரு? ஒரு வண்டி கிளம்பும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்புதேனு ஏன் கவனிக்கல?

******

சிக்னல் இன்சார்ஜ் என்ன பண்ணிட்டிருந்தாரு? வண்டி ஸ்டேஷன விட்டு அவர் சிக்னல் இல்லாம வெளிய வர முடியாதே... அப்படி வருதுனா அப்போ இவரு புகார் கொடுக்காம என்ன பண்ணிட்டிருந்தாரு?

******

சரி இவுங்க எல்லாரும் வண்டி கிளம்பும் நேரத்துல கோட்டை விட்டாலும் வண்டி கிளம்பியதும் அடுத்த சிக்னல்/ஸ்டேஷன்ல பிடிச்சுருக்கலாமே? ஏன் அப்படி செய்யல?

******
இப்படி பல பல சந்தேகங்கள்... :(

எல்லாருமே சேர்ந்து தெரிந்தே ஒரு வண்டிய அதில உள்ள உயிர்களை மரணப் பாதைக்கு அனுப்பி வேடிக்கைப் பார்த்துட்டு இன்னைக்கு வந்து மைக் கைக்கு வந்துட்டா என்ன கதை வேணாலும் சொல்லலாம்னு சொல்றாங்களா?

என்ன சொன்னாலும் மக்கள் நம்புவாங்கனு சொல்றாங்களா?

இது தீவிரவாதிகள் செயல்னா இதுக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போன இரயில்வே நிர்வாகம், ஓட்டுனர், சிக்னல் மேன், டைம் கீப்பர் உட்பட எல்லாரும் தீவிரவாதிங்கதான்.

இதுக்கு சரியான நியாயம் கிடைக்கனும். உயிரோட மதிப்பு அவ்வளவு தானா??? :(:(


" யாரோ அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வண்டிய கிளப்பிட்டு போய்ட்டிருக்காங்கனு" சொல்றாரே? அந்த யாரோவ கவனிக்காம அந்த நேரத்துல கடமை தவறின அத்துணை பேரையும் அதே டிராக்ல நிக்கவெச்சு வண்டிய ஏத்தலாம்னு சொன்னா அப்போ தெரியும் மரண வலி என்னனு... அப்போ தான் உணருவாங்க அவங்க தவறை... இப்போ மைக் புடிச்சு பேச எல்லாம் எளிதாதான் இருக்கும்.

இது தேர்தல் நேர சதியா?

அரசியல் சதியா?

சைக்கோ சதியா?

தீவிரவாத சதியா?

இல்ல கவனக்குறைவினால் ஏற்பட்ட விபத்தா?

எது எப்படி இருப்பினும் தவறு மேலே நான் சொன்னவர்களையும் சார்ந்தது தான். நீங்க என்ன சொல்றீங்க?

April 27, 2009

காதலில் உளறல் - மாதிரிக் கவுஜ மாதிரி


காலச் சுவடியில் நம் பெயர்கள்

காதல் நினைவாய் அழியா கோலங்கள்


கடற்கரையில் நாம் தடம் பதித்தால்

காதல்தேவதை நம் தடம் பற்றும்


கோல விழியாள் உன் நினைவினிலே

காளை என் மனம் கூத்தாடும்


காலைக் கதிரவன் உதிக்கையிலே

கன்னி உன் முகம் தான் தெரியும்


கானக் குயில் வந்து கூவுகையில்

கண்மனி உன் குரல் ஒலிக்கும்


காலை பனியாய் நம் காதல்

காற்றில் இசையாய் இசைந் தாடும்!

April 21, 2009

நன்றி இப்படிக்கு - மொக்கை 51

என்னங்க தலைப்பு ஒன்னும் புரியாம எப்படியும் இது என்ன மொக்கைனு பார்க்க வந்தீங்களா? வேறு ஒன்னும் இல்ல... இது என்னோட 51வது மொக்கை மற்றும் இந்த ஏப்ரலுடன் நான் உங்களை பதிவு எழுதி டர்ர்ர்ர்ர் ஆக்க ஆரம்பிச்சு ஒரு வருடம் முடிகிறது! அதுக்குதாங்க... இந்த பதிவு :)

கார்த்திக் மாதிரி ஸ்வீட்லாம் சாப்பிட சொல்லமாட்டேன்.... பொழிலனே உங்களுக்கு ஒரு ஸ்வீட் பாய் தானே! :)உங்களுக்காக....
நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க... நான் என்னைக்காவது மொக்கை இல்லாம எழுதுவேனானு எதிர்பார்த்து படிச்சி படிச்சி என்னை இன்னும் அடிக்காம இருக்கீங்களே! :)

என் பதிவுகளைப் படித்தும், எனக்கு மறுமொழிகள் எழுதி ஊக்கப்படுத்தியும் வரும் என் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்! :) பொழில் குட்டியின் மீது பாசத்துடன் அவனைப் பற்றி படிப்பதற்காகவே வரும் அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல!

என்னை எங்கள் பொழிலனைப் பின் தொடரும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

எல்லாவற்றிற்கும் மேலாக 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த, என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்தி எழுத வைத்த என் கணவருக்கும் என் நன்றிகள் பல!

என்னை அம்மாக்கள் வலைப்பூவிற்கு அழைத்த மற்றும் முதன் முதலில் டேக் செய்த சந்தனமுல்லை அவர்களுக்கும் என் நன்றி!

மொத்தத்தில் அனைவருக்கும் நன்றி!நன்றி!நன்றி!நன்றி!:-):-)

பொழிலன் கலக்கல் டைம்ஸ்!

இந்த பொழில்குட்டி திருச்சி வந்ததில் இருந்து தாத்தா ஆச்சி செல்லம் ஆகிவிட்டது!
தாத்தா ஆபிஸில் இருந்து வந்தவுடனே வேகமாக தவழ்ந்து சென்று காலைக்கட்டிக் கொள்வது என தொடங்கி ஒரே செல்லம் தான் :) காலை தூங்கி எழுந்ததும் ஆச்சியைப் பார்த்துவிட்டால் போதும்... ஆச்சி ஆச்சி என்று என் அம்மாவிடம் சென்று செல்லம் கொஞ்சிக் கொண்டு ஆச்சியை வம்பு இழுப்பது, அடிப்பது என்று ஒரே கலாட்டாதான் :)

இரவும் தூங்குவதற்கு 12மணி ஆக்கிவிடுகிறான். விளையாட்டு நியாபகம் வந்துவிட்ட்டால் போதும் எழுந்து உட்கார்ந்து கொண்டு செம ஆட்டம். " பொழில் குட்டிமா தூங்குடா செல்லம்.. கண்ணுல பிளீஸ்டா வாடா" என்று கெஞ்சினாலும் வந்து என்னைக் கொஞ்சிவிட்டு மறுபடியும் விளையாட ஓடிவிடுவான்.:-)பிறகு ஒருவழியாக கொஞ்சி, கெஞ்சி, கதை சொல்லி, பாட்டு பாடி தூங்கவைப்பேன் :)

காகா எங்கே என்று தினமும் என் அம்மா அவனிடம் கேட்டு கேட்டு வெளியே காகாவைக் காட்டி காட்டி இப்போது காகா என்றால் அவனே வெளியே சென்று பார்ப்பான்!
அப்படிதான் டோராவும் :) டிவியில் டோராவைக் காட்டி அவனுக்கு டோரா பேசுவது புரியவில்லையானாலும் அடிக்கடி பாடுவது பிடிக்கிறது... அதிலும் டோராவின் மேப் பாடும் பாடல் " நான் தான் மேப்..." நானும் சேர்ந்து பாடுவதால் அவனுக்கு மிகவும் பிடிக்கும் :)
அதனாலேயே டோரா எங்கே என்று எப்போ கேட்டாலும் டிவி முன்னாடி சென்று பார்ப்பான்!

பொழிலனின் ஆடல் பாடல்களை நான் தனிப் பதிவாகவே எழுதுகிறேன்... அவனுடைய நடனத்துடன்(உட்கார்ந்தவாறே)! :)

ஒரு நாள் நாங்கள் கோவிலுக்கு செல்வதற்காக ரெடி ஆகிட்டிருந்தோம் அதற்குள் இந்த பொழில் அவனுடைய மை டப்பாவை எடுத்து திறந்து மை எல்லாம் முகம், கை, கால் என பூசி அழகாக காட்சி தந்தான் :) குட்டி அழகு பூச்சாண்டி! இப்போது நான் இந்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கப்பவே பாருங்க UPS Off பண்ண வந்துட்டாரு எப்போதும் போல!
மேக்கப் அவரே போட்டுகிட்டு அவர் குடுத்த போஸ்! :)

April 20, 2009

ஐயோ என் பொண்ணுக்கு தன்னம்பிக்கையே போயிடுமே :(

நான் என் பொண்ன பத்தி சொல்லலங்க... எனக்கு ஒரே பையன் தான்.. இது ஹமாம் சோப் விளம்பரத்துல வர ஒரு கேவலமான டயலாக்...

இந்த ஹமாம் சோப் கம்பெனிக்காரங்க வீடு தரேனு சொன்னாங்க சரி... தரமான சோப்புனு சொன்னாங்க சரி... இதெல்லாம் விளம்பர யுத்தி!

ஆனால் இப்போ வருதே ஒரு விளம்பரம்... ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல... அந்த அம்மா தன் மகளை சோப் வாங்கிட்டு வா அப்படினு சொல்லி அனுப்புறாங்க; அந்த பொண்ணும் உடனே சோப் வாங்க ஓடுது. அதற்குள்ள இங்க அந்த அம்மா " ஐயோ என் பொண்ணுகிட்ட எந்த சோப்புனு சொல்லலியே... வேற எதாவது வாங்கிடப் போறா.. அப்புறம் ஐயோ அவளுக்கு முகமெல்லாம் பரு வந்துடும்... " அப்படினு சொல்றாங்க... இது வரைக்கும் அந்த அம்மா சொல்வது சரிதான்; ஆனால் அப்புறம் இரண்டு டயலாக் சொல்லும் பாருங்க...
"ஐயோ பரு வந்து அவ அழகே போயிடும்... அப்புறம் அவளுக்கு தன்னம்பிக்கையே போயிடும்" இது தாங்க தவறான ஒரு கற்பனை :(

விளம்பரம் செய்யுறேனு சொல்லி அழகு மட்டும் தான் தன்னம்பிக்கைக்குக் காரணம்னு ஒரு கேவலமான கருத்தை மக்களுக்குக் கொண்டு போகிற இந்த ஊடகங்களை என்ன சொல்றது?

அழகு இல்லாத யாரும் இந்த உலகத்தில சாதிக்களையா? ஒரு முறை நான் மக்கள் தொலைக்காட்சியில பார்த்த ஒரு நிகழ்ச்சி... அதுல ஒரு பெண் தீ விபத்துல தன்னோட முகம், உடல் முழுவது கருகி உயிர் மட்டும் இருந்த நிலையினிலேயும் படித்து சாதித்து தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி மூலமா ஓரளவு முக அமைப்போட இருக்காங்க... இதுவும் கொஞ்சம் பார்க்க தீக்காயம்னு நல்லா தெரிந்தாலும் அதையும் தாண்டி அந்த பெண்மணி முகத்தில அவங்களோட தன்னம்பிக்கைதாங்க அழகா ஜொலித்தது...

இந்த மாதிரி எத்துணையோ பேர் அழகு இல்லைனாலும் அறிவு, தன்னம்பிக்கை, உதவும் தன்மை, அன்போடு பழகுதல், அழகாக பேசுதல் அப்படினு ஏதோ ஒரு வகைல அழகாதானே இருக்காங்க... தன்னம்பிக்கையோட தானே இருக்காங்க :) பிறகு ஏன் இப்படி ஒரு கருத்து அந்த விளம்பரத்தில?

அதுவும் இல்லாம என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாமே அழகுதான்! (கொஞ்சம் ஓவரா தெரிந்தாலும் அது தான் உண்மை!) ஒரு பெண் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக, ஆசிரியையாக, காதலியாக இவை அனைத்திற்கும் மேலாக தாயாக மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்! என்ன நான் சொல்றது? :)

April 14, 2009

பொழிலன் அப்டேட்ஸ்

பொழில்குட்டி ஒரு புத்திசாலிகுட்டியாக வளர்கிறான் :)
வர வர அவனுடைய சேட்டைகளும் அதிகமாகவும் அழகாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது! :) அதில் புத்திசாலிதனமும் தெரிகிறது!

இப்போதெல்லாம் இரவு உணவு என்றால் அவராகவே தான் தட்டில் வைத்து சாப்பிட வேண்டுமாம்! அதை சொல்லத் தெரியாததால் ஊட்டிவிடும் போது உண்ணாமல் ஒரே அடம் :(
என் தட்டில் வைத்திருப்பதை பிய்த்து உண்ண துவங்கினான்...

ஆனால் இதில் சிக்கல் என்னனா அப்படி அவனாகவே சாப்பிடும் போது 3,4 வாய்களே சாப்பிடுகிறான்! சரி எப்படியோ அவனாகவே சாப்பிடுவது நல்ல விஷயம் தானே என்று நானும் அவனுக்கு தனியே வைத்துக் கொடுக்கிறேன்.

என் தங்கைக்கும் பொழிலனை விட 14நாட்கள் பெரியவனான குழந்தை இருக்கிறான் :)
அவன் பெயர் "கார்த்திக் நாராயணன்"... அவன் வயதில் மட்டுமல்ல சேட்டையிலும் இவனுக்கு அண்ணன்.... யாராவது வெளியே வண்டில போறத பார்த்துட்டா போதும்... இவரை கூட்டிட்டு போகலனு தரைல படுத்து புரண்டு புரண்டு அழுவார் :) எனக்கு சிரிப்பா இருக்கும்! 9மாத குழந்தைதான் இரண்டும் ஆனால் இதுங்க பண்ற சேட்டைகள பாருங்க! ஸ்ஸ்ஸ்ஸ்... ஹப்பா!

இந்த பொழில்குட்டி இப்போது எழுந்து நின்று பொருட்களின் உதவியுடன் நடக்கத் துவங்கியிருக்கிறார்... எல்லா பொருட்களையும் இழுத்து போடுவது என எப்போது சேட்டை தான்... கிச்சன் பக்கம் தூக்கிக் கொண்டு போனால் கையில் கண்டிப்பாக ஏதாவது தட்டு/டம்ளர்/கரண்டியுடன் தான் வருவார்... என் இடுப்பில் இருந்து கொண்டே அவன் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள பாத்திர செல்ப் தான் இந்த பொருட்களின் உபயம் :)

ஒரு நாள் குட்டிமா கை முகம் முழுக்க வெள்ளையா பவுடர் பூசிருந்தது என்னனு போயி பார்த்த கோலபொடியை எடுத்து கொட்டி அதில் விளையாடிட்டு வந்துருக்கு! :)

இன்னொரு நாள் இப்படிதான் சாந்தி அக்கா(வீட்டு வேலைக்கு வருபவர்) வைத்திருந்த கூடையை எடுத்து அதில் உள்ள குழம்பு டப்பாவை கொட்டிவிட்டு அதன் மீது உட்கார்ந்து அதை வாயில் வேறு வைத்து ஒரே அழுகை பாவம் :( நாங்கள் சிறிது வேறுபக்கம் கவனம் செலுத்துகையில் இப்படி சேட்டைகள் நிகழும்! :)

இவனுக்கு மிகவும் பிடித்த ஒரு வேளை என் கணினியின் UPS switch-ஐ அழுத்திவிடுவான் நான் கணிணியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே! :) ஒரு வேளை என்னை கவனிக்காமல் ஏன் அதனுடன் இருக்கிறாய் என்று அப்படி செய்கிறானோ என்னவோ :-)

எப்படியோ அவனுடைய சேட்டைகள் என்னை மகிழ்ச்சியாக்கவே செய்கின்றன! :) ஒரு போதும் கோபம் வந்ததே இல்லை! இது தான் அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! நான் எளிதில் கோபப் பட்டு பயங்கரமாக கத்திவிடுவேன் எனக்கு மிகவும் நெருங்கிய உறவுகளுடன்...
(பொழிலன் அப்பாவைக் கேட்டால் தெரியும்) ஆனால் பொழிலனிடம் மட்டும் எனக்கு கோபம் வருவதே இல்லை. எப்போதுமே அவனிடம் கோபம் வராமல் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் :)

என் குழப்பங்களுக்கு விடை கூறுங்களேன் அறிந்தவர்கள்

நம் பழம் பெரும் காப்பியமான இராமாயணத்தில் எனக்கு பல கேள்விகள் உண்டு!
நான் என் சந்தேகங்களை கேள்வியாக அடுக்குகிறேன்... தயவு செய்து இது பற்றி அறிந்தவர்கள் பதில் கூறுங்களேன்...

நான் சிறு வயதில் தொலைக்காட்சி மூலமாகவும், கோயில் பிரசங்கம் மூலமாகவும், இராமகிருஷ்ண தபோவனப் புத்தகங்கள் மூலமாகவும் இறுதியாக கம்ப இராமாயணம் மூலமாகவும் இராமாயண்த்தை அறிந்துள்ளேன்.

எனக்கும் என் கணவருக்கும் இடையே இது பற்றி பல விவாதங்கள் நடந்ததுண்டு... எனினும் எனக்குள்ளேயே பல சந்தேகங்கள் உண்டு... நான் வேறு சில நூல்கள் மூலம் வேறு மாதிரியாகவும் இராமாயணக்கதையைப் படித்துள்ளேன்... அதில் தான் குழப்பமே!

இதோ என்னுடைய கேள்விகள்... உங்கள் பதில் மூலம் என் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் மக்களே!

சிறந்த விளக்கத்துக்கு எதிர்பாராத சிறந்த பரிசு உண்டு! :)(சத்தியமாங்க)

1. இராவணன் சீதைக்குத் தந்தையா?

2. அது உண்மையெனில் எதற்காக சீதையைக் கடத்தி சிறை படுத்த வேண்டும்

3. சீதையாக உரு மாறி இராவணனுடன் சென்றது வேதவல்லியா?

4. அது உண்மையெனில் வேதவல்லி தான் பத்மாவதி தாயாரா?

5. சீதையை இராமன் ஏன் தீக்குளிக்கச் செய்ய வேண்டும்? அக்னி தேவனிடம் இருந்து
சீதையைப் பெற்று வேதவல்லியை அவரிடம் ஒப்படைக்கவா?

6. கம்பர் கூற்றுப்படி இராவணன் ஒரு சிறந்த அரசன் எனில் அவனைக் கொல்ல வேண்டி திருமால் அவதரிக்கக் காரணம் என்ன?

7. இராமாயண்க்கதை உண்மை நிகழ்வா அல்லது கற்பனையா?

சிவக்குமார் அவர்களின் கம்பன் என் காதலன்

இந்த புத்தாண்டு நாள் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நடிகர் சிவக்குமாரின் "கம்பன் என் காதலன்" நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது!

அவர் இக்கால மக்களுக்கு ஏற்றவாறு தமிழ் அறியாதவர்களும் கூட கம்பனின் காப்பியத்தை புரிந்துகொள்ளும் விதம் மிக எளிமையாக பல செய்யுள் பாடல்களையும் முழு கதையையும் கூறினார்.

அங்கு அமர்ந்திருந்த அத்துணை மாணவிகளும் முகம் சுளிக்காது அவருடைய உரையை கேட்டவிதம் நம் தமிழை அதை அவர் பயன்படுத்திய விதத்தை கம்பரை இராமனை இராவணனை சீதையை எண்ணி பெருமை பட வைத்தது!

அவர் சொற்களை கையாண்ட விதம் தற்கால தமிழ் கொண்டு அக்கால காப்பியத்தை விளக்கிய விதம் நன்றாக இருந்தது :)

இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரையில் தமிழ் புத்தாண்டு நாளின் சிறப்பான நிகழ்ச்சியாகும் :)உங்கள் கருத்துகளை நீங்கள் கூறுங்கள்...

காணொளிக்கு சுட்டி : http://tamil.techsatish.net/file/ramayanam/

April 13, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


வணக்கம் மக்களே! இன்று தமிழ் புத்தாண்டு துவக்கம் என்பதில் எனக்கு பல ஐயப்பாடுகள் இருப்பினும், அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிவைக்கிறேன்! :)

ஏனென்றால்... இந்த தமிழ் மாதங்களாகக் கூறப்படும் மாதங்கள் அனைத்தும் வடமொழி மாதங்கள் அதாவது சமஸ்கிருத மாதங்கள். எது எப்படியானாலும் நாம் ஆங்கில வருடம் மற்றும் இந்த தமிழ்( என்று கூறப் படும்) வருடம் இரண்டையும் பயன்படுத்துவதால் நாம் அந்த வருடங்களுக்கு நன்றி கூறியாக வேண்டும் :)

அதற்காகவேனும் புத்தாண்டு நாளை கொண்டாட வேண்டும்! தமிழ் ஆண்டு அது என்று தெளிவாக தெரியாத போது நாம் இந்த இரு புத்தாண்டுகளையும் நன்கு கொண்டாடலாம் :)

ஆதலினால் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும் பெற்று புத்தாண்டு பல கண்டு வாழ்வில் இன்பமும் சிறப்பும் பெற எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உங்களை வாழ்த்துகிறோம்! :)

April 1, 2009

பொழிலனும்... பொழிலன் அப்பாவும்

பொழிலன் என்னை மாதிரியா அல்லது அவன் அப்பா மாதிரியா என்று எப்போதுமே எனக்கும் பொழில்குட்டி அப்பாவுக்கும் விவாதம் வரும். ஆனால் அவன் எப்போதும் எங்கள் இருவரையும் பிரதிபலிப்பவனாகவே இருக்கிறான். அவன் எங்களின் கண்ணாடி!

சில நேரங்களில் அவன் அப்பாவைப் போல சில செயல்கள் செய்யும் போது காண இன்பமாகவே இருக்கிறது!

நடு இரவில் அப்பாவின் கையைத் தேடி அதன் மீது தன் தலை வைத்து தூங்கும் பொழிலனை நான் பல நேரங்களில் ரசித்திருக்கிறேன்! :)

இரவில் பொழிலன் அப்பா வலையுலகை வாசித்துவிட்டு வரும் வரையில் விழித்திருக்கும் பொழிலன் இருவரும் உறங்க வந்த பின்புதான் ஒரு கலக்கு கலக்கிவிட்டு உறங்க ஆரம்பிப்பார்! :)

காலையில் அப்பா கிளம்பும் நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தாலும் விழித்திருக்கும் நாட்களில் அப்பா அவர் கண்ணுக்கு தெரியும் வரை அவன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருப்பான்!

பிறகென்ன அப்பா கிளம்பியதிலிருந்து ஒரு மணி நேரம் வரை "அப்பா..அப்பா" என்று தனக்குத் தானே பாடிக்கொண்டிருப்பான்.

அதிலும் மாலை சரியாக ஏழு மணிக்கெல்லாம் கடிகாரம் கூட மணியடிக்க மறக்கலாம் பொழிலன் மறூபடியும் அப்பாவின் வருகையை எதிர்பார்த்து அப்பா பாட்டு பாட மறக்கமாட்டான்.:)

வந்ததும் அப்பா வந்து அவர்கிட்ட பேசலையோ அவ்வளவுதான் உடனே செல்ல சிணுங்கல் குடுப்பாரு! அவங்களை அவர்கிட்ட கூப்பிடுறதுக்கான சிக்னல் தான் அது!

அவங்க அவருக்காக ஒரு பாட்டு பாடுவாங்க எப்பவும்... அது தான் " ஆயர் பாடி மாளிகையில்" அந்த பாட்டுக்கு நல்ல சுகமா தூங்குவாரு! அவர் அப்பா பாடுறது நல்லாதான் இருக்கும்; நான் பாடுற பாட்டையே கேட்பவன் அவங்க நல்லா பாடுறதயா கேட்காம போவான்!:)

அவங்களுக்கு அவனுக்கு ஊட்டிவிடனும்னு ஆசை... ஆனால் அதுக்குதான் பல டெக்குனிக்குகள் இருக்கே பாவம் அவங்க அதுக்குதான் சிரமப்பட்டாங்க!

அவனோட குட்டி குளிக்கும் குளத்துக்குள்ள அவனை வைச்சு நல்லாவே குளிப்பாட்டுவாங்க வார இறுதியில! அதுக்காக பொழிலன் வார இறுதில தான் குளிப்பானு நினைச்சுடாதீங்க மக்களே!

ஆனால் ஒரு மேட்டர் என்னனா நான் அதிக நேரம் எடுத்துக்குவேன் அவனை தூங்க வைக்க... நான் மட்டும் இல்ல... யாருனாலும் அப்படித்தான்... ஆனால் அவங்க மட்டும் தான் அவனை ரொம்ப எளிதில தூங்க வைச்சுடுவாங்க! இப்படி பல சமயங்களில் குழந்தை வளர்ப்புல அவங்களும் பங்கெடுத்துக்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம். அந்த காலங்களில் அப்படி அப்பாக்களை பார்க்குறது அரிது. இப்போ அப்படியில்ல உலகம் மாறிருக்குனு நினைக்குறப்போ மகிழ்ச்சியாவே இருக்கு! :)