என்ன தலைப்புனு படங்கள பார்த்ததும் உங்களுக்கு புரிந்திருக்குமே!!!!
எங்க பொழிலன் எப்பவுமே சிரிச்ச முகமாதான் இருப்பான்...
அதுவும் யாராவது அவனிடம் பேசினால் போதும் அவர்களை நன்கு கவனிப்பான்.... இது மிகவும் நல்லப் பழக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது
"குறைவாகப் பேசு அதிகம் கேள்" என்ற பொன்மொழியை நன்கு புரிந்து வைத்துள்ளான்
************************************************************************************
அவனுக்குத் தெரிந்த முகம் என்றால் பார்த்ததுமே வருமே ஒரு சிரிப்பு... அப்பப்பா.... இப்போதெல்லாம் சத்தம் போட்டு சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்
************************************************************************************
நாங்கள் கதை கூறும்போது காட்சிக்குத் தகுந்த நம் முக பாவனையை ஓரளவிற்குப் பின்பற்றி அவனும் செய்வதைப் பார்க்கும் போது என் செல்லக்குட்டி வளருகிறான் என்று மகிழ்ச்சியாக உள்ளது
************************************************************************************
அவனிடம் நான் பேசினாலே போதும் கொஞ்சம் இடைவெளி விட்டாலும் "ம்ம்" என்று பதில் கூறிக் கொண்டே வருபவன் "ம்ம்ம்" என்று வேகமாகக் கூறுவது அடுத்து என்ன என்று கேட்பது போல் இருக்கும்.
************************************************************************************
வயிற்றினுள் அவன் இருந்த போது நான் எப்போதெல்லாம் சிரிப்பேனோ அப்போதெல்லாம் அவனும் குதித்து அவனுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான் இப்போது அவனே தன்னிச்சையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு அம்மாவாக எனக்கு அளவிலா மகிழ்ச்சி :)
இது எல்லா அம்மாக்களுக்குமே உள்ள உணர்வல்லவா!!!!
************************************************************************************