March 10, 2009

குட்டீஸ் ஸ்பெஷல்‍‍‍-அம்மாக்களை சமாளிப்பது எப்படி - பொழிலன்

எங்க அம்மா என்னோட ரொம்ப பிஸி அப்படினு சீனப்
போட்டுக்கிட்டு வலைப்பூ ப‌க்க‌ம் வ‌ராம‌ ஒரே சேட்டை
இங்க‌ வீட்டுல‌.... நானும் ரொம்ப‌ நாளா யோசிச்சு அம்மாவ‌ ச‌மாளிக்க‌
ப‌ல ஐடியாக்க‌ள‌ க‌ண்டுபுடிச்சிட்டேன்....

எப்போ பார்த்தாலும் ச‌மைக்கிறது, காய் அரியுற‌து, எழுதுற‌து, எதையாவ‌து
ப‌டிக்கிறதுனு எந்த சேட்டையாவது பண்ணிக்கிட்டு என் கூட ஒரு இடத்துல
உட்காருவதில்ல. இந்த‌ சேட்டையெல்லாம் போதாதுனு என்ன‌ அங்க‌ போக‌த‌,
இங்க உட்காராத‌, அதை நோண்டாத‌, இதை எடுக்காத‌னு வேற‌...
எதையாவ‌து நோண்டி பிச்சு ஆராய்ச்சி ப‌ண்ண‌ விடுறாங்க‌ளா...

இந்த‌ சேட்டைக்கெல்லாம் ஒரு முடிவு க‌ட்டிட்டேன்....
எப்ப‌டீனா?!! :)
அம்மா எங்க‌யாவ‌து எழுந்து போனா உட‌னே அம்மானு அழுது சீன‌ப் போட்டா
ந‌ம்ம‌க் கூட‌யே இருப்பாங்க‌ :)

இல்ல‌னா அவ‌ங்க‌ எங்க‌ போனாலும் பின்னாடியே போக‌னும்
அவ‌ங்க‌ கால புடிச்சிக்கிட்டே சுத்தினா உட‌னே ஆகா புள்ளை ந‌ம்ம‌ளையே

சுத்தி வ‌ருதேனு அவ‌ங்க‌ வேலையெல்லாம் போட்டுட்டு ந‌ம்ப கூட ஒழுங்கா
விளையாடுவாங்க!

ஆனா ந‌ம்ம‌ளோட விளையாட‌ வ‌ன்தாலும் சும்மா இருப்ப‌ங்க‌ளா கீரைய‌ நோண்டிகிட்டே
இருப்பாங்க‌.... அதை எப்ப‌டி அவ‌ங்க‌ நோண்ட‌லாம்? நான் உட‌னே போயி அம்மாக்கு
உத‌வி செய்யுறேனு எல்லா கீரையும் எடுத்து பிச்சு வாயில‌ போட்டுக்குவேன்!
இப்போ என் கூட‌ விளையாடாம‌ அந்த சேட்டையும் செய்ய‌மாட்டாங்க‌ளே!:)


ஆனால் இப்ப‌டி ந‌ம்ம‌க் கூட‌யே அவ‌ங்க‌ள‌ வெச்சி பாத்துக்கிற‌துல‌யும் ஒரு சிக்க‌ல் இருக்குபா! ஆமாம் நம்ம‌ள‌ எதையும் நோண்ட‌ எடுத்து உடைத்து ஆராய்ச்சி ப‌ண்ணி
அறிவ‌ வ‌ள்ர்க்க‌வுட‌மாட்டாங்க‌ளே :( ஆங்... ஒரு ஐடியா! நைசா அவ‌ங்க‌ பாக்காத‌ப்போ
ந‌ம்ம ஆராய்ச்சிக்கு தேவையான‌ சாமான்க‌ள‌ எடுத்துக்க‌னும்.அப்புற‌ம் அவ‌ங்க‌ அத‌ வாங்க‌ வ‌ருவாங்க‌ ஜாக்கிர‌தை! நாம‌ அத குடுக்க‌வே கூடாது... மீறி வாங்கினா ந‌ல்லா செம‌ க‌த்து க‌த்தி அழுக‌னும்.. தாயுள்ள‌ம் அழுதா தாங்காதே! உட‌னே ந‌ம‌க்கே குடுத்துடுவாங்க‌!

அப்புற‌ம் ஒளிந்து விளையாடுற‌து! :)இதுல‌ நாம‌ எதுக்க‌டில‌யாவ‌து போயி புகுந்துக்க‌னும்; அவ‌ங்க‌ க‌ண்டுபுடிக்கிறேனு சேட்டையெல்லாம் விட்டுட்டு ந‌ம்மக்கிட்ட
வ‌ந்துடுவாங்க‌! எப்ப‌டி ஐடியா?

எப்ப பாத்தாலும் சின்ன‌ப்புள்ள‌த் த‌ன‌மா என்னோட விளையாட்டு சாமான‌ எடுத்து அவ‌ங்க‌ விளையாடுற‌து... பின்ன‌ என்ன‌ எப்ப‌ பாத்தாலும் த‌ட்டு,ட‌ம்ள‌ர்,ரிமோட்,செல்போன், டைரி,பேனானு கையில‌ வெச்சி விளையாடுவாங்க‌... அத‌ என்கிட்ட‌ குடுத்தா நான் எவ்வ‌ள‌வு அழ‌கா விளையாடுவேன்! த‌ரைல‌ தாள‌ம் போட்டு ஒரு பெரிய‌ மியூஸிக் டைர‌க்ட‌ர் ஆகிடுவேன்ல‌... உட‌மாட்டாங்க‌ளே செல்போன் உடையும் ரிமோட் உடையும்னு வாங்கி வெச்சிக்குவாங்க‌!ம்ம்ம்... :( இதுக்குதான் என்ன‌ ப‌ண்ற‌‌துனு தெரிய‌ல.நான் கொஞ்சம் ஐடியாஸ் குடுத்தேன்ல... இதுக்கு நீங்க‌ளும் கொஞ்ச‌ம் ஐடியா குடுங்க‌!

10 comments:

ராம்.CM said...

பொழிலன்!கவலைப்படாதீங்க! அம்மாக்களே இப்படித்தான்! எதை செய்யக்கூடாதுன்னு சொல்றாங்களோ அதை செய்யுங்க...அப்பத்தான் உங்களை "கவனிச்சுகிட்டே" இருப்பாங்க!

Karthik said...

Pozhilan, keep rocking! :)

Prem, you are missing so much bro!

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா...சரியா புரிஞ்சுக்கிட்டீங்க போல உங்க அம்மாவை! வெரிகுட் பொழில்! :-)

anbudan vaalu said...

பொழிலன் சூப்பர் ஐடியாஸ்.....
நீங்க டிவி ரிமோட்ட வாங்கி அதுக்கு மேலே ஏறி உட்கார்ந்துக்குங்க.அம்மா கேட்டா குடுக்காதீங்க...மீறிக்கேட்டா சத்தமா அழுவுங்க.மறங்துடாதீங்க ரிமோட் மேலதான் புரண்டு புரண்டு அழுவனும்....அப்பதான் அம்மா இப்ப உனக்கு என்ன வேணும்னு உங்க வழிக்கு வருவாங்க.....
செல்ஃபோன அடிக்கடி ஒளிச்சு வச்சிடுங்க...இந்த விளையாட்டு சூப்பரா இருக்கும் ;)))
ட்ரை பண்ணிட்டு மறக்காம எனக்கு சொல்லனும்.....

ஆகாய நதி said...

நன்றி ராம்!

பொழிலன் said...

//
Pozhilan, keep rocking! :)
//

நன்றி!:)

பொழிலன் said...

//
ஹஹ்ஹா...சரியா புரிஞ்சுக்கிட்டீங்க போல உங்க அம்மாவை! வெரிகுட் பொழில்! :-)

//

நன்றி முல்லை அத்தை! :)

ஆகாய நதி said...
This comment has been removed by the author.
பொழிலன் said...

//
பொழிலன் சூப்பர் ஐடியாஸ்.....
நீங்க டிவி ரிமோட்ட வாங்கி அதுக்கு மேலே ஏறி உட்கார்ந்துக்குங்க.அம்மா கேட்டா குடுக்காதீங்க...மீறிக்கேட்டா சத்தமா அழுவுங்க.
//

அதெல்லாம் நான் நல்லாவே செய்யுறேன் :):)

//ரிமோட் மேலதான் புரண்டு புரண்டு அழுவனும்....//

ஆங்ங்! இதை தான் நான் செய்யுறதில்ல! இனிமே செய்துடலாம்! :)

பொழிலன் said...

//
செல்ஃபோன அடிக்கடி ஒளிச்சு வச்சிடுங்க...இந்த விளையாட்டு சூப்பரா இருக்கும் ;)))
//

ஆ! அப்படியா! இந்த விளையாட்டு கூட நல்லா தான் இருக்கும் போல நான் போயி ட்ரை பண்ணிட்டு வந்து சொல்றேன் :)