March 29, 2009

வழக்கொழிந்த சொற்கள்

கார்த்திக் அவர்களின் " வழக்கொழிந்த சொற்கள் " என்ற தொடர்பதிவில் என்னை அழைத்திருந்தார். அவர் அழைத்து இரண்டு மாதங்களுக்குப் பின் நான் எழுதும் பதிவு. சில சூழ்நிலைக் காரணங்களால் தாமதமாகிவிட்டது.

தோணித்துறை - படகித்துறை (பார்த்திபன் கனவு)

கழனி - விளைநிலம் (பார்த்திபன் கனவு)

மனையாள் - மனைவி (திரைபடப் பாடல் மூலம்- "நல்ல மனையாளின் இன்பம் ஒரு கோடி")

பாரியாள் - மனைவி (பள்ளிப் பருவத்தில் படித்த வரலாற்று நூல் பெயர் சரியாக நினைவில்லை)

கழுதை - அழகிய பெண் (வரலாற்று நூல்)

குழவி - குழந்தை (என் அம்மா கூறியது)

தானி - ஆட்டோ (என் அம்மா கூறியது)

ஆழிப்பேரலை - சுனாமி (என் அம்மா கூறியது மற்றும் நாயன்மார் வரலாற்றில் அப்பர்
பெருமான் கதையிலும் வரும்)

கருங்குழல் - கருமையான கூந்தல் (வரலாற்று நூல்)

சூளுரைத்தல் - சபதம் ஏற்றல்/பிரமாணம் ஏற்றல்

உப்பரிகை - பால்கனி

பேருவகை - பெரும் மகிழ்ச்சி

அகவை - வயது

கோ - அரசன்

எனக்குத் தெரிந்த, நினைவில் உள்ள சொற்களை மட்டும் எழுதியுள்ளேன். எனக்கும் நேரம் கிடைக்கும் போது மேலும் பல சொற்களை அறிந்து கூறுகிறேன். தமிழில் சொற்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது! :) நன்றி கார்த்திக்!

2 comments:

Karthik said...

நிறைய நல்ல வார்த்தைகள். சூப்பர்ப்..!

நான் தான் நன்றி சொல்லனும், நீங்க இந்த தொடர் பதிவில் எழுதினதுக்கு. தேங்க்ஸ்..! :)

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! இந்த வாய்ப்பை தந்ததுக்கு :) கருத்துக்கும் நன்றி! :)