June 2, 2009

திருமணச் சடங்குகள் தமிழில் நடந்தால் என்ன?
இந்த உலகத்தில் எந்த மதத்தினரானாலும் திருமணத்தின் போது பல உறுதிமொழிகளுடன் தான் தன் வாழ்க்கைத் துணையைக் கைபிடிக்கின்றனர்!

அப்படிபட்ட திருமணத்தில் நிகழ்த்தப் ப்டும் உறுதிமொழிகள் அதுவும் குறிப்பாக நம் இந்து மத முறைப்படி நிகழும் திருமணங்களில் சொல்லப்படும் உறுதிமொழிகள் மிக அதிகம்.... ஆனால் இவை யாவும் வட மொழியிலேயே சொல்லப்படுகின்றன!

அதிலும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு என்னவென்றால் இந்த வடமொழியில் ஏற்கப்படும் உறுதிமொழியில் ஒரு கணவன் மட்டுமே கூற வேண்டிய உறுதிமொழி அந்த ஐயர் வாய் வழியாக சொல்லிக் கேட்டுப் பின் அந்த மாப்பிள்ளைக் கூற வேண்டி உள்ளது...

இதன் பொருள் முழுமையாகத் தெரிந்த ஆண் நிச்சயம் இதை ஏற்கமாட்டார்....... "எனக்கு எழுதிக் கொடுங்கள் நான் வேண்டுமானால் வாசிக்கிறேன், அவள் எனக்கு தான் மனைவி ஆகப் போகிறாள் ஆதலால் தாங்கள் இதைக் கூறுவது சரியல்ல" என்றே கூறுவார்!

எனக்கு முழுமையாக மந்திரத்தின் பொருள் தெரியாது என்றாலும் ஏதோ ஒரு வலைப்பூவில் படித்த நியாபகத்தை வைத்துக் கூறுகிறேன்....

"இன்று முதல் .... ஆகிய நான் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு சாட்சியாக கைப்பிடிக்கப் போகும் பெண்ணின் வாழ்வில் நிகழும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதோடு நானும் அவளோடு இணைந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வேன்.... என்னோடு சரி பாதியாக இணையும் அவளுக்கு என் மனம்,உடல், உடைமை என அனைத்திலும் உரிமை கொடுத்து, அவளுக்குக் கணவனாகவும், தோழனாகவும், தாய் மற்றும் தந்தையாகவும் இருந்து அவளைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்! "

இப்படி தான் வரும் அந்த உருதி மொழி.... நான் கூறியதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.... நான் தான் முழுமையாக என்ன இருந்தது என்று மறந்துவிட்டேனே :( ஆனால் இன்னும் சில ஆழ்ந்த அன்பிற்கான வரிகளும் உண்டு.... இதையெல்லாமா அவர் வாய்வழி கேட்டுக் கூறுவது?

இப்படியே பெண்ணுக்கும் உறுதிமொழி இருக்கும்! பின் இதை எதற்காக ஐயர் வாய்வழி கேட்டுக் கூற வேண்டும்? நம்மிடம் தமிழில்/ வடமொழியில் எழுதிக் கொடுத்தால் நாமே கூறுவோமே!

இந்த திருமண முறை மாறவேண்டும்.... அனைத்தும் தமிழில் கூறி நிகழ வேண்டும்.... இன்று பல திருமணங்கள் அவ்வாறு நிகழத் தொடங்கிவிட்டன... ஆனால் நான் சடங்குகள் இன்றி திருமணம் நடக்க வேண்டும் என்று கூறவில்லை.... மந்திரங்கள் தமிழில் ஓதப் பட வேண்டும் அதுவும் பெண்/மாப்பிள்ளையால் மட்டுமே ஓதப் படவேண்டும்!


திருமணத்தில் வைக்கப் படும் சடங்குகளுக்கும் அழகான அர்த்தங்கள் உண்டு அதனால் பகுத்தறிவு பேசுகிறேன் என்று அதையெல்லாம் நான் வேண்டாம் என்று கூற மாட்டேன்... எந்த ஒரு பகுத்தறிவுவாதியும் வாழைமரம், அக்னி குண்டம், அரிசிக் கலசம், நீரக் கலசம், தேங்காய், பழங்கள் என்று திருமணத்தில் வைக்கப் படும் பொருட்களின் காரணம் தெரிந்தால் அதையெல்லாம் வேண்டாம் என்று கூறவே மாட்டார்!

துணிகளைக் கட்டி அக்னி வலம், மங்கல நாண் என னைத்திற்கும் காரணங்கள் உண்டு!

அதனால் இந்த மந்திரங்கள் தமிழில் நம் வாயாலேயே சொல்லப்படனும் என்பது தான் என் கருத்து!

அதிலும் கிறித்துவத் திருமணங்களிலும் நான் பார்த்த வரை பாதிரியார் தமிழில்/ஆங்கிலத்தில் நம் ஐயர் கூறும் அதே வரிகளை சில சிறிய மாற்றங்களுடன் கூறுவார்! இதுவும் தவறுதான் :( அந்த மாப்பிள்ளை/ பெண்ணே நேரடியாக சொல்வது சாலச் சிறந்தது!

இப்போது சில திருமணங்கள் புதுமையாக நிகழ்த்தப்படுவதும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்... வழக்கமாக திருமணங்களில் வைக்கப்படும் பொருட்கள் புத்தகங்களாக மாறியிருப்பதும் நல்ல விஷயமே! புத்தகமும் காலத்தால் அழியாதக் கருத்துகள் நிறைந்திருக்கும் ஒரு மங்கலமான பொருளே! :)

வேண்டுகோள்:

யாராவது இந்த திருமணச் சடங்கு பற்றி விரிவாக எழுதியிருக்கும் அந்த வலைப்பூவின் தொடுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் நம் எல்லாருக்கும் நான் கூறுவது தெளிவாகப் புரியும்! :)

20 comments:

வித்யா said...

நல்லாதான் இருக்கும்:)

ஆகாய நதி said...

வாங்க வித்யா... நன்றி! :)

jothi said...

நச் படைப்பு ஆகாய நதி. உங்கள் படைப்புகளில் இது தனித்து நிற்கிறது. உயர்ந்த சிந்தனை, தெளிந்த எழுத்துக்கள். உண்மையிலேயே ஒரு நல்ல படைப்பு படித்த திருப்தி.

முதல்வருக்கு அனுப்பி வையுங்கள், ஏற்கனவே எப்படிடா ஆரிய திராவிட பிரச்சனையை கிளப்பலாம்னு இருக்கார்,.. இது ஒரு நல்ல வாய்ப்பு.

தீஷு said...

வெளிநாட்டில் திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் இருவரும் மாற்றி மாற்றி தன் துணையிடம் தனக்குப் பிடித்தவற்றைக் கூறிவர். படத்தில் பார்த்திருக்கிறேன் :-)

ஆகாய நதி said...

//
நச் படைப்பு ஆகாய நதி. உங்கள் படைப்புகளில் இது தனித்து நிற்கிறது. உயர்ந்த சிந்தனை, தெளிந்த எழுத்துக்கள். உண்மையிலேயே ஒரு நல்ல படைப்பு படித்த திருப்தி.
//

நன்றி ஜோதி! :)

என்னை நீங்கள் கிண்டல் செய்யவில்லையே??!!! :)))

ஆகாய நதி said...

//
முதல்வருக்கு அனுப்பி வையுங்கள், ஏற்கனவே எப்படிடா ஆரிய திராவிட பிரச்சனையை கிளப்பலாம்னு இருக்கார்,.. இது ஒரு நல்ல வாய்ப்பு.
//

ஐயோ ஆளை விடுங்க எனக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்கும் சம்பந்தம் இல்லைபா.... :)))))

ஆகாய நதி said...

//
வெளிநாட்டில் திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் இருவரும் மாற்றி மாற்றி தன் துணையிடம் தனக்குப் பிடித்தவற்றைக் கூறிவர். படத்தில் பார்த்திருக்கிறேன் :-)

//

அதுவும் நல்ல பழக்கம் தான்... ஆனால் இப்போது தான் நிறைய மொக்கைகள் ஓட்டுறோமே திருமணத்திற்கு நிச்சயித்தவுடனே :)))

பூங்குன்றன் said...

முதலில் மக்கள் சோதிடம் பார்க்கும் பழக்கம் போனால்தான் தமிழ் திருமணம் பற்றி சிந்திக்க முடியும். எங்கள் வீட்டில் சோதிடம் பார்ப்பதில்லை.ஆனால் என் மனைவி வீட்டில் பார்த்தார்கள்.இருந்தும் கூட நாங்கள் வற்புறுத்தியதால் என் திருமணம் முற்றும் தமிழ் முறைப்படி தேவார திருமுறை ஒலிக்க நடந்த்தேறியது.மக்களிடம் முதலில் தமிழ் முறை வழிபாடு, சடங்குகள் பற்றி விழிப்புணர்வு வர வேண்டும்.

உங்களுக்கு மேலும் தமிழ் திருமண முறைகள் அறிய விருப்பமிருப்பின் இந்த poongundrangothai@gmail.com மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க.

ஆகாய நதி said...

//
முதலில் மக்கள் சோதிடம் பார்க்கும் பழக்கம் போனால்தான் தமிழ் திருமணம் பற்றி சிந்திக்க முடியும்.
//

சத்தியமான உண்மைங்க...

அருமை அருமை! தேவாரத்துடன் திருமணமா? :))))

வல்லிசிம்ஹன் said...

ஆகாய நதி,
நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் உண்மை.
உணர்வு பூர்வமாகப் பார்த்தால் கூட ,திருமணக் களயபரங்களுக்கு நடுவில்
திருமணத்தை நடத்திவைக்கும்
வேதியர் சொல்லும் வார்த்தைகள் மாப்பிள்ளையின் காதில் சரியாக விழுந்து அவர் அதைச் சரியாக உச்சரித்து ,வருபவர் போகிறவர்களுக்கு வாங்க போங்க சொல்லி.....

என்னவோ நடக்கிறது. அதற்குப் பதிலாக ,கல்யாண ரிஹர்சல் என்று ஒன்று என் தோழியின் கல்யாணம்,(வெளிநாட்டில் நடந்தது)

போது நடந்தது. அவர்களே உறுதி மொழிகளை எழுதிக் கொண்டார்கள்.சொன்னார்கள் .மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்குமே நாள் கடந்த திருமணம் இருந்தும் இனிமையாக இருந்தது.
நம் நாட்டிலும் எளிமையாகச்,சத்தம் இல்லாமல் அதே நேரத்தில் அந்த நேரத்தின் புனிதத்தை உணர்ந்து தமிழிலும் நடந்தால் எப்படி இருக்கும் என்று


யோசித்துப் பார்த்தால் ஆஹா!!!! நன்றாக இருக்கிறது. இனிப்பாக இருக்கிறது.:)))))

:நல்லதொரு யோசனைக்கு நன்றிம்மா.

jothi said...

//என்னை நீங்கள் கிண்டல் செய்யவில்லையே??!!! :)))//

செ செ,.. இல்லங்க,.. உண்மையைதான் சொன்னேன். உண்மையிலேயே நான் சொன்ன வார்த்தையும் உண்மை. சிறப்பான கருத்துக்களே. " வீடு உயர கோன் உயரும்" என தமிழில் எங்கோ படித்த நினைவு. வீட்டின் ராஜா பெண்கள்தானே (இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரண்கலமாய் ஆக்கிப்ப்ப்ட்டானுங்க,.) அவர்களிடம் இந்த உயர்ந்த சிந்தனைகள் வருவது பெருமையாக உள்ளது.

jothi said...

//ஐயோ ஆளை விடுங்க எனக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்கும் சம்பந்தம் இல்லைபா.... :)))))//

தெரியும்,.. "வீர மரணத்தை கொண்டாடும் இலங்கை" வந்ததும் தெரியல, போனதும் தெரியல

ஆகாய நதி said...

//
"வீர மரணத்தை கொண்டாடும் இலங்கை" வந்ததும் தெரியல, போனதும் தெரியல
//

ஐயோ அதையும் படிச்சுட்டீங்களா?? :)))

ஆகாய நதி said...

//
(இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரண்கலமாய் ஆக்கிப்ப்ப்ட்டானுங்க,.)
//

ஹி ஹி ஹி! புரிஞ்சா சரி :)

ஆகாய நதி said...
This comment has been removed by the author.
ஆகாய நதி said...

//
அவர்களிடம் இந்த உயர்ந்த சிந்தனைகள் வருவது பெருமையாக உள்ளது.
//

நன்றி ஜோதி! :)

ஆகாய நதி said...

//
கல்யாண ரிஹர்சல் என்று ஒன்று என் தோழியின் கல்யாணம்,(வெளிநாட்டில் நடந்தது)
//

ஆஹா! அருமை....இது தான் என் விருப்பமும்... :)))

//
யோசித்துப் பார்த்தால் ஆஹா!!!! நன்றாக இருக்கிறது. இனிப்பாக இருக்கிறது.:)))))

:நல்லதொரு யோசனைக்கு நன்றிம்மா.
//

ரொம்ப நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே! :)))

பொழிலன் திருமணத்தை இப்படி செய்யலாம் :)

ak said...

Sounds Good... Hope the below link may give you more information. Pl visit http://www.hinduism.co.za/marriage.htm

ஆகாய நதி said...

நன்றி ak :)

Anonymous said...

SRM பல்கலைக் கழகத்தில் 6 மாத பட்டயப் படிப்பு தொடங்கி உள்ளார்கள். இதில் அனைத்து உறுதி மொழிகளும் மந்திரங்களும் தமிழில் கற்றுத் தரப் படுகிறது. மாதமிருமுறை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்புக்கள் வடபழனி பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப் படுகின்றன. கட்டணம் ரூ 300 மட்டும்தான். மேலும் விவரங்களுக்கு SRM பல்கலைக் கழக இணைய தளத்தினைப் பார்க்கவும்.