July 2, 2013

ஐந்தாம் அகவையில் பொழிலன்!!


மன்னிக்கவும் மக்களே.... காலம் கடந்து ஒரு பதிவு!

குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள்!  இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய வளர்ச்சி சற்று நிதானித்துப் பார்த்தால் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது!


எத்தனை எத்தனை கெள்விகள், எத்தனை விதமான கற்பனைகள், உருவகங்கள், திறமைகள், பழக்கவழக்கங்க்கள்.. அம்மம்மா!!

ஆனால் இந்த கவனம் ஈர்க்க பொது இடங்களில் அவன் செய்யும் நாடகங்கள் " முடியலடா சாமி" !

பெண் பிள்ளைகள் தான் இன்றைக்கு அம்மாவுக்கு உதவுவார்கள் என்றில்லை... பொழிலன் எனக்கு சமையல் வேலைக்கு அவன் பிஞ்சுக் கரங்களால் முடிந்தவரை உதவுவான்... அதுவும் நான் கேட்காமலே...

அழகாக படம் வரையும் திறன் உள்ள அவனுக்கு நானே இப்பொழுது டிராயிங் டீச்சர்!!! ( அவ்வ்வ்வ் அப்டின்னு என்னங்க சத்தம்?)

ஆனா அவன் பாட்டும் கத்துக்க விரும்புறான்!! அதுக்காக நானே பாட்டு டீச்சர்லாம் ஆக முடியாது... எனக்கு கொஞ்சம் சமுதாய அக்கறை உண்டு... அதுனால இப்போதைக்கு நடனம் மற்றும் ஸ்கேடிங் மட்டும், பாட்டுலாம் விஜயதசமிக்கு பார்த்துக்கலாம்னு இருக்கோம்!

வாயாடும் பொழிலனின் கேள்விகள்  சில ....


அம்மா நீ சாமி ஒண்ணுதான்னு சொல்ற பின்ன ஏன் விரிய சாமி படங்கள் வெச்சிருக்க... அப்போ அந்த ஒரு சாமிக்கு அம்மா சாமி அப்பா சாமிலாம் வேண்டாமா?

ஸ்கூல்ல மேம் எதுக்கு தமிழ் இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க? அப்போ மேம்க்கு இங்கலீஷ் தெரியாதா?

அம்மா அந்த அத்தை டம்மிக்குள்ள பேபி இருக்குனு சொன்னியீ ஆனா அவங்க டம்மி ஏன் குட்டியா இருக்கு? 
 
யோகா கிளாஸ்ல தொப்பை குறைய யோகா செய்ய வந்தவங்கள பார்த்து அம்மா இந்த அத்தைக்கும் பேபி இருக்கா டம்மிக்குள்ள   அவங்க  டம்மி பெருசா  இருக்கே?

அம்மா ஈ கொசுலாம் எப்படி குளிக்கும்? அதற்கு நான் அவையெல்லாம் குளிக்காது அதுனால தான் கிருமிகளைப் பரப்புது!
உடனே அவன் அப்போ கிருமிஎல்லாம்  குளிக்காதா?


அவ்வ்வ்வ்......

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் கேள்விகள்...

செல்லத்திற்கு அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

தொடர்ந்து பகிர்ந்திடவும் வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

ஐந்தாம் அகவையில் பொழிலன்!!

வாழ்த்துகள்

வெற்றிவேல் said...

அகவை ஐந்தில் அடியெடுத்து வைக்கும் அழகு குழந்தைக்கு வாழ்த்துகள்...

Anonymous said...

Hi,

Am very happy to send you a mail.Actually Am working in PUTHIYA THALAIMURAI TV CHANNEL. Am a Program Producer here. I read your blog and am impressed,am doing a show regarding parenting .So i just want to talk to you whether i could take you interview or if its possible want to interact with you about parenting.
So please do mail your email id..

தேன் நிலா said...

குழந்தைகளின் கேள்விகளும் சில சமயம் சிந்திக்க வைக்கும்.. ரசிக்க வைக்கும்.. ! பதிவை படித்து ரசித்தேன்..

பொழிலனின் புகைப்படமும் மிக அழகு...!!

பகிர்வினிற்கு மிக்க நன்றி..!!!

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்