July 1, 2008

சிசேரியனுக்கான காரணங்கள், மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாதல் மற்றும் பிரசவ காலத்தில் கணவரின் கடமைகள்:

பிரசவ வலியின் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற ஆரம்பிக்கும். "ஷோ" என்னும் திரவமும் வெளியேறும் .அப்புறமென்ன "குவா..குவா" தான் :)
சிசேரியனுக்கான காரணங்கள் :
* சிலருக்கு வலி குறிப்பிட்டக் காலக் கெடுவுக்குள் வராமலிருக்கும்
* நீர் அளவு குறைந்தோ அதிகமாவோ இருக்கலாம்
* குழந்தை தலை பெரியதாவோ (அ) தலை மேலே கால் கீழே இருக்கலாம்
* தாய் (அ) சேய்க்கு அடிபட்டாலும்
* குழந்தையின் கழுத்து/வயிற்றுப் பகுதிகளை பிளாசென்டா இருக்காமாக(மட்டுமே) சுற்றியிருந்தால்
* பாப்பா குண்டா இருந்தால்
அறுவை சிகிச்சை செய்யனும். மருத்துவர் அறுவைசிகிச்சைனு சொன்னா கணவர் உடனே மனைவியின் உயிரைக்காக்க சரினு சொல்லாம அதுக்கான சரியான காரணத்தைக் கேட்டறிந்த பின்பே அனுமதி மற்றும் பொறுப்புக் கையேழுத்து இட வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாதல் :
நீங்க 9வது மாதம் தொடங்கினதுமே பிரசவத்துக்குச் செல்ல தயாரா கீழ இருக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து வெச்சிக்கனும்.
* பாலூட்டும் தாய்க்கான பருத்தியிலால் ஆன ஆயத்த உடைகள்.
* தூய பழைய வேட்டிகள்
* பெண்களுக்கான சில பொருட்கள்
* சோப்பு,சீப்பு,கண்ணாடி, 4(அ) 5 துண்டு,
* வருபவர்கள் கை அழுவிட்டு பாப்பாவ தூக்க தனி சோப்பு, துண்டு * தட்டு, டம்ளர்,
* பாப்பாவுக்கான சோப்பு, பவுடர், ஸ்வெட்டர் போன்ற துணி
* கூட தங்குறவங்களுக்கு துணி
பிரசவ காலத்தில் கணவரின் கடமைகள்:
கணவர் பிரசவ‌ நேரத்தில் மனைவிக்கு சிறத்த உறுதுணையாவார். அவர் தான் முதலில் தைரியமா இருக்கனும்.
அவருடைய காதல், நம்பிக்கை நிறைந்த பார்வையும், அவருடைய அருகாமையும் மனைவிக்கு ரொம்ப முக்கியம்.
பிரசவ நேரத்தில் கணவர் மனைவியுடன் இருப்பதும் இல்லாதிருப்பதும் அவருடைய மன வலிமையைப் பொறுத்தது.
பிரசவ அறைக்குச் செல்லும் முன் மனைவியின் கரம் பற்றி உண்மையான அன்பினை உணர்த்த நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி வழியனுப்பினாலே போதும்.
இரத்த வங்கிலருந்து இரத்தம் ரெடி பண்ணி வெச்சிக்கனும்.
மனைவியிடமிருந்து காதல் பரிசாக வரும் "குழந்தை" என்னும் பூங்கொத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.:)

6 comments:

ஆகாய நதி said...

நமக்கு நாமே திட்டம் :) ஹி ஹி ஹி....:)

Selerines said...

Hi friend.... Nice blog....

Do you need Anna University Model Question papers and related informations? - Visit Anna University World

For interesting international/national debates and controversies - Visit Selerines World

Please refer Anna University blog to your friends, so that it will help them a lot...

If you feel my blog is informative then comment there and keep in touch....

Take care....

Naresh Kumar said...

உங்கள் வலைப்பூவை தற்செயலாகத்தான் பார்க்க நேரிட்டது. ஆனால் உங்களுடைய அனுபவத்திலிருந்து பல பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களே, அது மிகப் பெரிய விஷயம்!!
தொடர்ந்து எழுதுங்கள்!!

//நமக்கு நாமே திட்டம் :) ஹி ஹி ஹி....:)//

பிரேம்கிட்ட இருக்கற அதே நையாண்டி :)

ஆகாய நதி said...

//உங்கள் வலைப்பூவை தற்செயலாகத்தான் பார்க்க நேரிட்டது. ஆனால் உங்களுடைய அனுபவத்திலிருந்து பல பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களே, அது மிகப் பெரிய விஷயம்!!
தொடர்ந்து எழுதுங்கள்!!
//

ரொம்ப நன்றி... :) மீண்டும் வருவேன் விரைவில்.... :)

ஆகாய நதி said...

//
பிரேம்கிட்ட இருக்கற அதே
நையாண்டி :)
//

:) :)

ஆகாய நதி said...

test comment