என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்... ஜூகுனு என்னும் கோர மிருகம் பணத்துக்காக 2வயது ஆண் குழந்தையை அடித்தேக் கொன்று இரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறான்.
அந்த மிருகம் எப்படியெல்லாம் தப்பித்தான் என்று விளக்கினார் கோபி அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை அந்த கொலைகாரனின் கைப்பேசி எண்ணைக் கொண்டு அவனை காவல்துறை பின் தொடர்ந்ததையும் அவன் அதை அறிந்து வேறு எண் மாற்றினாலும் அவன் எப்படி காவல்துறையினரால் பின் தொடரப்பட்டு பிடிபட்டான் என்பதையும் "தெளிவாக" விளக்கினார்கள்.
அதாவது... " அவன் கொலை செய்ததும் தன்னை காவலர்கள் அடையாளம் காணாதபடி மொட்டையடித்து, சவரம் செய்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளான் பின் அவன் கேரளாவிற்குத் தப்பிச் சென்றுள்ளான் அங்கிருந்து தனது பாசமிகு தந்தைக்கும், தோழனுக்கும் கைப்பேசி மூலம் தினமும் பேசவேண்டியது இதை மோப்பம் பிடித்த காவல்துறை அவனது கைப்பேசி எண்ணைக் கொண்டு அவன் இருக்கும் இடத்தை தெளிவாகக் கண்டுபிடித்தனர் ஆனால் இங்கு காவல்துறையின் செயல்பாடுகளை அவனது தோழன் அவனுக்கு அறிவித்து வர அந்த மிருகம் கேரளாவிலிருந்து வேறு கைப்பேசி எண் மாற்றிக் கொண்டு தப்பித்துவிட்டான் ஆனால் அவனது கைப்பேசியில் உள்ள அந்த கைப்பேசி சாதனத்தின் உருவாக்கத்தின் போது அதற்கு அளிக்கப்படும் எண்ணைக் கொண்டு அந்த கைப்பேசி இருக்குமிடத்தைத் தெளிவகக் கண்டுபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவன் இருக்குமிடத்தை அறிந்து காவலர்கள் அங்கு மாறுவேடத்தில் சென்றுள்ளனர் இதற்கிடையே இங்கு அவனது தந்தையையும் தோழனையும் பிடித்துவிட்டனர் அவர்கள் மூலம் அவனை ஓரிடத்திற்கு வரவழைத்து காவலர்கள் கையும் களவுமாக சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இதில் இந்த விளக்கம் போதாதென்று கைப்பேசி எண்ணைக் கொண்டு எவ்வாறு ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும் என்று புலனாய்வு துறையினர் மற்றும் கைப்பேசி சேவைத் து்றையினரின் அறிவியல் ரீதியான விளக்கம் வேறு அது தான் பிரச்சினையே
இப்படி எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினால் அதனைப் பார்க்கும் குற்றவாளிகள் இனி இந்த யுத்திகளை தவிர்த்து வேறு விதமாகத் தப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் இது மேலும் குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் ஒரு விளக்கமே....
இதனால் ஏற்படும் குற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் சேனல்
பொறுப்பேற்குமா?
இந்த குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் கொடூர செயலும்
சட்டப்படிக் குற்றமே!
இதற்கு அந்த சேனல் என்ன பதில் கூறும்?
மக்களுக்கு உதவி செய்வதாக எண்ணி அறிந்தோ அறியாமலோ தீய
செயல்களுக்கு துணை போகும் இந்தச் செயலுக்கு மக்களின் பதில்
என்ன?
இதில் விளக்கம் தருகிறோம் என்று குற்றவாளிகளைக்
கண்டறியும் யுத்திகளை விளக்கி இரகசியம் காக்கத்தவறிய காவல்
துறையினரை என்ன சொல்வது?
இந்தக் கேள்விகளை எல்லா மக்கள் முன்னிலையிலும் கேட்க
இயலாததால் இப்படி பதிவின் மூலமாவது மக்களுக்கு போய் சேரட்டும்
என்று என் ஆத்திரத்தைப் பதிவிடுகிறேன்।
10 comments:
நான் இதை பார்க்கவில்லை. வெளியே சொல்லக் கூடாத அளவு முக்கியமானதை சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
Cool!
உண்மைதான் ஆகாயநதி! தங்களின் ஆதங்கமே எனதும்!:-(
எல்லாமே சொல்லிட்டாங்க கார்த்திக்....
ரொம்ப துல்லியமா.....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனமுல்லை....
நண்பரே,
உங்கள் பதிவு சரியானதாக இல்லை. எந்தவொரு குற்றவியல் சம்பவமும் கண்டுபிடிக்கப்பட்டு எல்லாச் சடங்குகளும் முடிந்த பிறகு அதைப் பற்றி விலாவரியாக சொல்வது வழக்கமானதொன்றுதான். இதன் மூலம் என்ன தெரிந்து கொண்டோம் என்பதுதான் முக்கியம். இதன் மூலம் கொலைகாரர்கள் உஷாராகி விடுவார்கள் என்று நீங்கள் நம்புவது அறீவீனமாக இருக்கிறது.
'கொலைக்குற்றவாளி கர்நாடகாவிற்கு தப்பி ஓடியிருப்பதாக தெரிகிறது' என்று காவல்துறை சொல்வதாக பத்திரிகைச் செய்தி வந்தால், அய்யய்யோ கொலைகாரன் உஷாராகி விடுவானே என்று பதறுவது போல் உள்ளது.
தங்களின் வருத்தத்தை தெளிவான எழுத்துக்களில் சொல்லி இருக்கீங்க.. அந்த ப்ரொக்ராமை பார்த்த பொழுது நானும் இவ்வாறு தான் ஃபீல் பண்ணினேன்.
////
எந்தவொரு குற்றவியல் சம்பவமும் கண்டுபிடிக்கப்பட்டு எல்லாச் சடங்குகளும் முடிந்த பிறகு அதைப் பற்றி விலாவரியாக சொல்வது வழக்கமானதொன்றுதான். இதன் மூலம் என்ன தெரிந்து கொண்டோம் என்பதுதான் முக்கியம். இதன் மூலம் கொலைகாரர்கள் உஷாராகி விடுவார்கள் என்று நீங்கள் நம்புவது அறீவீனமாக இருக்கிறது.
/////
நடந்தவற்றை விலாவரியாக கூறுவது வேறு... தடயவியல் மற்றும் போலிசாரின் இரகசிய முறை புலனாய்வுகளைக் கூறுவது வேறு,... தடயவியல் மற்றும் போலிசாரின் விசாரணை முறையைக் கூறலாம் ஆனால் நவீன அறிவியல் துறை வளர்ச்சியின் மூலம் செல்பேசி எண் எவ்வாறு கண்டறியப்பட்டது..... அவனது செல்பேசி சாதனம் மூலமே அவனுடைய இருப்பிடம் எவ்வாறு கணிக்கப்பட்டது போன்ற செய்திகளை கூறுவது சரியா என ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் நண்பரே.... எது அறிவீனம் என்று உங்களுக்கே புரியும்....
கொலைகாரன்கள் அடுத்து என்ன செய்வார்கள் செல்பேசி சாதனத்தையே மாற்றுவார்கள்.
நமக்கு அவர்களை கண்டறிய இருந்த புதிய உத்தியும் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது...
இது சரியா?
//
'கொலைக்குற்றவாளி கர்நாடகாவிற்கு தப்பி ஓடியிருப்பதாக தெரிகிறது' என்று காவல்துறை சொல்வதாக பத்திரிகைச் செய்தி வந்தால், அய்யய்யோ கொலைகாரன் உஷாராகி விடுவானே என்று பதறுவது போல் உள்ளது
//
அது வேறு நான் கூறுவது வேறு... முதலில் நான் சொல்லியிருப்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்..... நான் "INVESTIGATION TECHNOLOGY " கூறுவது தவறு என்றே கூறினேன்... மீண்டும் ஒரு முறை என் பதிவினையும் நான் உங்களுக்கிட்ட பதில் பின்னூட்டத்தினையும் படித்துப் பாருங்கள்
//தங்களின் வருத்தத்தை தெளிவான எழுத்துக்களில் சொல்லி இருக்கீங்க.. அந்த ப்ரொக்ராமை பார்த்த பொழுது நானும் இவ்வாறு தான் ஃபீல் பண்ணினேன்.
//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
Post a Comment