February 3, 2009

அம்மாக்கள் கவனத்திற்கு....

நானும் ஒரு குழந்தைக்குத் தாய் என்னும் முறையில் நான் இது நாள் வரை குழப்பத்திலேயே செய்து வந்த சில பழக்கங்களுக்கு சரியான தீர்வு கிடைத்துவிட்டது :)

நான் கூறுவது குழந்தைகள் பராமரிப்புப் பற்றியது. பொழிலன் பிறந்ததும் பெரியவர்கள் ஒவ்வொருவரும் பொதுவான சில பழக்கங்கள் மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்களை குழந்தைக்கு செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் தற்கால மருத்துவர்கள் கூற்றையே அதிகம் நம்புவேன். அக்கால தட்பவெப்ப நிலை, உணவுப் பழக்கங்கள் எல்லாம் இப்போதையவற்றை விட மாறுபட்டவை.
அதனாலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அதுவும் நல்லாதாய் போனது.
மருத்துவர்கள் சில பழக்கங்களை ஆதரித்தாலும் பல பழக்கங்கள் தேவையற்றவை ஆபத்தானவை என்றே கூறுகிறார்கள். அதன் படி நான் கற்றுக்கொண்டவற்றை உங்களுக்கும் கூறுகிறேன்.
வருமுன் காப்பதும், எச்சரிக்கையும் குழந்தைகள் விஷயத்தில் அதிகம் தேவை.

* குழந்தைகள் கண்களில் எண்ணை விடுதல் கூடாது. இன்னமும் பலர் அவ்வாறு செய்வதை
நேரிலேயே கண்டிருக்கிறேன்.

* வாயினுள் கைவிட்டு சளி எடுத்தல் தவறான சுகாதாரமற்ற செயல்

* குளித்தபின் காதுகளை குழந்தைகளுக்கென்றே விற்கப்படும் தரமான காது துடைப்பான்
கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். காதினையும் மூக்கையும் ஊதிவிடுதல் நல்லதல்ல.

* 3,4 மாதத்தில் திட உணவு தருதல் கூடாது; பால் போதாது என்று எண்ணினால் தாய்மார்கள்
உணவின் அளவினை அதிகப்படுத்தினாலே போதும். போதிய அளவு தாய்பால் கிடைக்கும்.

* முடிந்தவரை பிஸ்கட்டுகளை தவிர்க்க வேண்டும்.

* 6 மாதம் வரை கிரைப் வாட்டர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு மேலும்
தேவைப்பட்டால் மட்டுமே தரலாம்(அ) மருத்துவரின் ஆலோசனைப்படி தரலாம்;
நாள்தோறும் கொடுக்கவேண்டியதில்லை.

* விரல் சப்புவதை குழந்தை தானே மறந்துவிடும், அதற்காக நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க
தேவையில்லை, அதைத் தடுக்கும் போதுதான் அதிகமாகிறது. அதற்கு பதில் டீதர் போன்ற
பொருட்களை அவர்கள் கையில் கொடுக்கலாம்(அ) வேறு விளையாட்டுகளில் அவர்கள்
கவனத்தை மாற்றலாம்.

* வாரம் 1முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டலாம்.

* குழந்தைக்கு மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் 3நாட்கள் வரை காத்திருக்கலாம். அதற்கு
மேலும் போகவில்லயெனில் வெது நீர் கொடுத்துப் பார்க்கலாம் பின் மருத்துவரை அணுகலாம்.
அதை விடுத்து சோப்புவிடுதல், வெற்றிலைக் காம்பு விடுதல் போன்ற தவறான செயல்களை
தவிர்க்க வேண்டும்.

* குழந்தைக்கு தாயின் அரவனைப்பு அதிகம் தேவை, ஆதலால் முடிந்தவரை உங்கள்
கைக்குழந்தையை நீங்களே பார்த்துக்கொள்வது அவசியம்.

* 2 வயது வரை தொலைக்காட்சி காண்பிப்பது கூடவே கூடாது.


இந்த விஷயங்களில் தாய்மார்களான நாம் கவனமாக இருப்பது நலம்.

5 comments:

sollarasan said...

அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்களும் அறிய வேண்டியது

ராம்.CM said...

நல்ல தகவல்களை தந்துள்ளமைக்கு மிகுந்த மகிழ்ச்சி!.

என் மனைவிக்கு உடனடியாக போன் செய்து சொல்லிவிட்டேன். அவர்களும் நன்றி சொன்னார்கள்.!

ஆகாய நதி said...

இரு விஷயங்கள் விடுபட்டுள்ளன...

உரம் எடுத்தல் ஒரு முரட்டுத்தனமான காரியம். தசைப் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலே அப்படி உரம் விழும். அதற்கு மருத்துவரை உடனே அணுகுதல் நலம்.

அடுத்ததாக சுக்கு உரசி தருதல் என்பது 6மாதத்திற்கு மேல் செய்யலாம் அதுவும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தைக்கு புகட்ட வேண்டும்.

ஆகாய நதி said...

//
அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்களும் அறிய வேண்டியது//

உண்மைதான்... நன்றி :)

ஆகாய நதி said...

//
என் மனைவிக்கு உடனடியாக போன் செய்து சொல்லிவிட்டேன். அவர்களும் நன்றி சொன்னார்கள்.!
//

உடனடி நடவடிக்கைக்கு நன்றி!