April 1, 2009

பொழிலனும்... பொழிலன் அப்பாவும்

பொழிலன் என்னை மாதிரியா அல்லது அவன் அப்பா மாதிரியா என்று எப்போதுமே எனக்கும் பொழில்குட்டி அப்பாவுக்கும் விவாதம் வரும். ஆனால் அவன் எப்போதும் எங்கள் இருவரையும் பிரதிபலிப்பவனாகவே இருக்கிறான். அவன் எங்களின் கண்ணாடி!

சில நேரங்களில் அவன் அப்பாவைப் போல சில செயல்கள் செய்யும் போது காண இன்பமாகவே இருக்கிறது!

நடு இரவில் அப்பாவின் கையைத் தேடி அதன் மீது தன் தலை வைத்து தூங்கும் பொழிலனை நான் பல நேரங்களில் ரசித்திருக்கிறேன்! :)

இரவில் பொழிலன் அப்பா வலையுலகை வாசித்துவிட்டு வரும் வரையில் விழித்திருக்கும் பொழிலன் இருவரும் உறங்க வந்த பின்புதான் ஒரு கலக்கு கலக்கிவிட்டு உறங்க ஆரம்பிப்பார்! :)

காலையில் அப்பா கிளம்பும் நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தாலும் விழித்திருக்கும் நாட்களில் அப்பா அவர் கண்ணுக்கு தெரியும் வரை அவன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருப்பான்!

பிறகென்ன அப்பா கிளம்பியதிலிருந்து ஒரு மணி நேரம் வரை "அப்பா..அப்பா" என்று தனக்குத் தானே பாடிக்கொண்டிருப்பான்.

அதிலும் மாலை சரியாக ஏழு மணிக்கெல்லாம் கடிகாரம் கூட மணியடிக்க மறக்கலாம் பொழிலன் மறூபடியும் அப்பாவின் வருகையை எதிர்பார்த்து அப்பா பாட்டு பாட மறக்கமாட்டான்.:)

வந்ததும் அப்பா வந்து அவர்கிட்ட பேசலையோ அவ்வளவுதான் உடனே செல்ல சிணுங்கல் குடுப்பாரு! அவங்களை அவர்கிட்ட கூப்பிடுறதுக்கான சிக்னல் தான் அது!

அவங்க அவருக்காக ஒரு பாட்டு பாடுவாங்க எப்பவும்... அது தான் " ஆயர் பாடி மாளிகையில்" அந்த பாட்டுக்கு நல்ல சுகமா தூங்குவாரு! அவர் அப்பா பாடுறது நல்லாதான் இருக்கும்; நான் பாடுற பாட்டையே கேட்பவன் அவங்க நல்லா பாடுறதயா கேட்காம போவான்!:)

அவங்களுக்கு அவனுக்கு ஊட்டிவிடனும்னு ஆசை... ஆனால் அதுக்குதான் பல டெக்குனிக்குகள் இருக்கே பாவம் அவங்க அதுக்குதான் சிரமப்பட்டாங்க!

அவனோட குட்டி குளிக்கும் குளத்துக்குள்ள அவனை வைச்சு நல்லாவே குளிப்பாட்டுவாங்க வார இறுதியில! அதுக்காக பொழிலன் வார இறுதில தான் குளிப்பானு நினைச்சுடாதீங்க மக்களே!

ஆனால் ஒரு மேட்டர் என்னனா நான் அதிக நேரம் எடுத்துக்குவேன் அவனை தூங்க வைக்க... நான் மட்டும் இல்ல... யாருனாலும் அப்படித்தான்... ஆனால் அவங்க மட்டும் தான் அவனை ரொம்ப எளிதில தூங்க வைச்சுடுவாங்க! இப்படி பல சமயங்களில் குழந்தை வளர்ப்புல அவங்களும் பங்கெடுத்துக்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம். அந்த காலங்களில் அப்படி அப்பாக்களை பார்க்குறது அரிது. இப்போ அப்படியில்ல உலகம் மாறிருக்குனு நினைக்குறப்போ மகிழ்ச்சியாவே இருக்கு! :)

7 comments:

Karthik said...

ச்சோ ச்வீட்..! :)

ராம்.CM said...

நானும் இது போன்ற இதமான சுகத்தை அனுபவிக்க காத்துக்கொண்டிருக்கிறேன். என் 'சிங்கத்துக்கு' மூன்று மாதம்தான் ஆகிறது...

சந்தனமுல்லை said...

ம்ம்..நல்லா இருக்கு..பொழிலனின் அப்பாக் கணங்கள்! :-) கலக்குங்க!

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! :)

ஆகாய நதி said...

வாழ்த்துக்கள் ராம் :)
உங்கள் சிங்கக்குட்டியைக் கேட்டதாகக் கூறவும் :)

ஆகாய நதி said...

நன்றி முல்லை! :)

கைப்புள்ள said...

//ஆனால் ஒரு மேட்டர் என்னனா நான் அதிக நேரம் எடுத்துக்குவேன் அவனை தூங்க வைக்க... நான் மட்டும் இல்ல... யாருனாலும் அப்படித்தான்... ஆனால் அவங்க மட்டும் தான் அவனை ரொம்ப எளிதில தூங்க வைச்சுடுவாங்க! இப்படி பல சமயங்களில் குழந்தை வளர்ப்புல அவங்களும் பங்கெடுத்துக்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம். அந்த காலங்களில் அப்படி அப்பாக்களை பார்க்குறது அரிது. இப்போ அப்படியில்ல உலகம் மாறிருக்குனு நினைக்குறப்போ மகிழ்ச்சியாவே இருக்கு! :) //

கேக்கிறதுக்கும் மகிழ்ச்சியா இருக்கு. வாழ்த்துகள் பொழிலனுக்கும் பொழிலன் அப்பாவுக்கும்.