April 14, 2009

சிவக்குமார் அவர்களின் கம்பன் என் காதலன்

இந்த புத்தாண்டு நாள் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நடிகர் சிவக்குமாரின் "கம்பன் என் காதலன்" நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது!

அவர் இக்கால மக்களுக்கு ஏற்றவாறு தமிழ் அறியாதவர்களும் கூட கம்பனின் காப்பியத்தை புரிந்துகொள்ளும் விதம் மிக எளிமையாக பல செய்யுள் பாடல்களையும் முழு கதையையும் கூறினார்.

அங்கு அமர்ந்திருந்த அத்துணை மாணவிகளும் முகம் சுளிக்காது அவருடைய உரையை கேட்டவிதம் நம் தமிழை அதை அவர் பயன்படுத்திய விதத்தை கம்பரை இராமனை இராவணனை சீதையை எண்ணி பெருமை பட வைத்தது!

அவர் சொற்களை கையாண்ட விதம் தற்கால தமிழ் கொண்டு அக்கால காப்பியத்தை விளக்கிய விதம் நன்றாக இருந்தது :)

இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரையில் தமிழ் புத்தாண்டு நாளின் சிறப்பான நிகழ்ச்சியாகும் :)உங்கள் கருத்துகளை நீங்கள் கூறுங்கள்...

காணொளிக்கு சுட்டி : http://tamil.techsatish.net/file/ramayanam/

14 comments:

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..பவர்கட்!!

ஆகாய நதி said...

//ஹ்ம்ம்..பவர்கட்!!//

அச்சச்சோ :(

வே.நடனசபாபதி said...

நிகழ்ச்சியை நேரில் பார்த்து கேட்டு மெய்மறந்து இருந்த மாணவிகள் போல் நாங்களும் விஜய் தொலைக்காட்சியில் திரு சிவகுமார் அவர்களின் 'கம்பன் என் காதலன்' உரையை கேட்டு இடத்தைவிட்டு அசையாது இருந்து ரசித்தோம் என்பது உண்மை. திரைப்படங்களுக்கு மட்டுமே மக்கள் அதரவு தருவார்கள் என்ற மாயையை உடைத்தெறிந்த விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி

நவீன் said...

எல்லோரும் இந்த சொற்பொழிவை பற்றி கூறி இருக்கிறார்கள் ...
கொஞ்சம் இணைப்பு இருந்தால் கொடுங்களேன் ...
சிவகுமாரின் பேச்சுக்கு நான் அடிமை....
முன்பே அவர் "பெண் " என்ற தலைப்பில் பேசி உள்ளார் ...
அதையும் நான் விஜய் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தேன் ....
நான் என் நண்பர்கள் அனைவரிடமும் சதனை பற்றி சிலாகிப்பது உண்டு ...
அந்த கண்நோளியையும் தேடி வருகிறேன் ......
அதன் இணைப்பையும் கொடுங்களேன்...

ஆகாய நதி said...

//நிகழ்ச்சியை நேரில் பார்த்து கேட்டு மெய்மறந்து இருந்த மாணவிகள் போல் நாங்களும் விஜய் தொலைக்காட்சியில் திரு சிவகுமார் அவர்களின் 'கம்பன் என் காதலன்' உரையை கேட்டு இடத்தைவிட்டு அசையாது இருந்து ரசித்தோம் என்பது உண்மை.
//

மகிழ்ச்சி :)

நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! :)

ஆகாய நதி said...

//
திரைப்படங்களுக்கு மட்டுமே மக்கள் அதரவு தருவார்கள் என்ற மாயையை உடைத்தெறிந்த விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி
//

உண்மைதான் :) நானும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்!

ஆகாய நதி said...
This comment has been removed by the author.
ஆகாய நதி said...

//
சிவகுமாரின் பேச்சுக்கு நான் அடிமை....
//

நானும்தாங்க... அவர் பேச்சு நடிப்பு ஓவியம் என அனைத்திற்கும் நான் அடிமை :)

அவரைப் போல் ஒரு மாமேதையை நான் இந்த நிகழ்காலத்தில் கண்டதில்லை... தனி வாழ்விலும் அவர் ஒரு சிறந்த மனிதர் :)

ஆகாய நதி said...

//
கொஞ்சம் இணைப்பு இருந்தால் கொடுங்களேன் ...
//

நிச்சயமாக... நீங்களூம் இணைய ஒளிபரப்பு மூலம் விஜய் தொலைக்காட்சியைக் காணலாமே!
நானும் இங்கு அளிக்கிறேன் :)

ச.பிரேம்குமார் said...

நிகழ்ச்சியை இங்கு காணலாம்

http://tamil.techsatish.net/file/ramayanam/

Unknown said...

it was really nice., v enjoyed a lot.,

ஆகாய நதி said...

//
it was really nice., v enjoyed a lot.,

//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

அபி அப்பா said...

ஆஹா நான் அந்த கொங்கு தமிழ்ல அவர் பேசியதை வச்ச கண் வாங்காம கேட்டேன். நான் பெற்ற இன்பம் எல்லார்ரும் பெற வேண்டி அப்ப ஆன்லைன்ல இருந்த மிஸஸ். தேவ் கிட்ட பார்க்க சொன்னேன். இல்லை பாப்பு சுட்டி டி வி பார்க்கிறான்னு சொல்லிட்டாங்க. இன்னும் சில பேரும் அப்படி சொல்லிட்டாங்க. நானே இது போல ஒரு பதிவு போட இருந்தேன்.

சூப்பர் நிகழ்ச்சி!

ஆகாய நதி said...

நன்றி அபிஅப்பா! :) நான் முந்திக்கிட்டேனா? :)