April 20, 2009

ஐயோ என் பொண்ணுக்கு தன்னம்பிக்கையே போயிடுமே :(





நான் என் பொண்ன பத்தி சொல்லலங்க... எனக்கு ஒரே பையன் தான்.. இது ஹமாம் சோப் விளம்பரத்துல வர ஒரு கேவலமான டயலாக்...

இந்த ஹமாம் சோப் கம்பெனிக்காரங்க வீடு தரேனு சொன்னாங்க சரி... தரமான சோப்புனு சொன்னாங்க சரி... இதெல்லாம் விளம்பர யுத்தி!

ஆனால் இப்போ வருதே ஒரு விளம்பரம்... ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல... அந்த அம்மா தன் மகளை சோப் வாங்கிட்டு வா அப்படினு சொல்லி அனுப்புறாங்க; அந்த பொண்ணும் உடனே சோப் வாங்க ஓடுது. அதற்குள்ள இங்க அந்த அம்மா " ஐயோ என் பொண்ணுகிட்ட எந்த சோப்புனு சொல்லலியே... வேற எதாவது வாங்கிடப் போறா.. அப்புறம் ஐயோ அவளுக்கு முகமெல்லாம் பரு வந்துடும்... " அப்படினு சொல்றாங்க... இது வரைக்கும் அந்த அம்மா சொல்வது சரிதான்; ஆனால் அப்புறம் இரண்டு டயலாக் சொல்லும் பாருங்க...
"ஐயோ பரு வந்து அவ அழகே போயிடும்... அப்புறம் அவளுக்கு தன்னம்பிக்கையே போயிடும்" இது தாங்க தவறான ஒரு கற்பனை :(

விளம்பரம் செய்யுறேனு சொல்லி அழகு மட்டும் தான் தன்னம்பிக்கைக்குக் காரணம்னு ஒரு கேவலமான கருத்தை மக்களுக்குக் கொண்டு போகிற இந்த ஊடகங்களை என்ன சொல்றது?

அழகு இல்லாத யாரும் இந்த உலகத்தில சாதிக்களையா? ஒரு முறை நான் மக்கள் தொலைக்காட்சியில பார்த்த ஒரு நிகழ்ச்சி... அதுல ஒரு பெண் தீ விபத்துல தன்னோட முகம், உடல் முழுவது கருகி உயிர் மட்டும் இருந்த நிலையினிலேயும் படித்து சாதித்து தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி மூலமா ஓரளவு முக அமைப்போட இருக்காங்க... இதுவும் கொஞ்சம் பார்க்க தீக்காயம்னு நல்லா தெரிந்தாலும் அதையும் தாண்டி அந்த பெண்மணி முகத்தில அவங்களோட தன்னம்பிக்கைதாங்க அழகா ஜொலித்தது...

இந்த மாதிரி எத்துணையோ பேர் அழகு இல்லைனாலும் அறிவு, தன்னம்பிக்கை, உதவும் தன்மை, அன்போடு பழகுதல், அழகாக பேசுதல் அப்படினு ஏதோ ஒரு வகைல அழகாதானே இருக்காங்க... தன்னம்பிக்கையோட தானே இருக்காங்க :) பிறகு ஏன் இப்படி ஒரு கருத்து அந்த விளம்பரத்தில?

அதுவும் இல்லாம என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாமே அழகுதான்! (கொஞ்சம் ஓவரா தெரிந்தாலும் அது தான் உண்மை!) ஒரு பெண் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக, ஆசிரியையாக, காதலியாக இவை அனைத்திற்கும் மேலாக தாயாக மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்! என்ன நான் சொல்றது? :)

40 comments:

ஒரு காசு said...

நீங்க சொல்றது சரிதான் பாஸ், அதப் பத்தி இங்கே எழுதுறதுக்கு பதிலா அந்த சோப்பு கம்பனிக்கு விளக்கம் கேட்டு எழுதி இருக்கலாமே ?

Anonymous said...

S U R CORRECT...........

நிகழ்காலத்தில்... said...

நல்ல கருத்து..

வாழ்த்துக்கள்..

Anonymous said...

முற்றிலும் உண்மை, சில நாட்களுக்கு முன் இந்த விளம்பரத்தை எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்ததாக படித்த ஞாபகம்

ஆகாய நதி said...

@ ஒரு காசு**************

எழுதலாம்... ஆனால் ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது... அதனால் தான் என் ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்தி கூட்டணி சேர்த்தால் நாம் ஒரு முடிவெடுத்து செயலில் இறங்கலாமே!

ஆகாய நதி said...

நன்றி அனானி அவர்களே! :)

ஆகாய நதி said...

//
நீங்க சொல்றது சரிதான் பாஸ், அதப் பத்தி இங்கே எழுதுறதுக்கு பதிலா அந்த சோப்பு கம்பனிக்கு விளக்கம் கேட்டு எழுதி இருக்கலாமே ?

//

நன்றி தங்கள் கருத்திற்கு... செயல் படுத்துவோம் :)

ஆகாய நதி said...

//
நல்ல கருத்து..

வாழ்த்துக்கள்..
//

நன்றி! :)

ஆகாய நதி said...

அப்படியா? ரொம்ப நல்லது... ஆனால் இன்னும் மாறவில்லை... நாம் வேண்டுமானால் ஆட்கள் ஒருங்கிணைந்து அந்த கம்பெனிக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பலாம்... ஒரு காசு அவர்கள் கூறுவது போல்...

கைப்புள்ள said...

இதாச்சும் பரவால்லை. கொஞ்ச நாளுக்கு முன்னாடி(ஒரு ரெண்டு வருஷம் இருக்கலாம்) "குளிக்காதே"ன்னு கத்திக்கிட்டே ஒரு அம்மா பொண்ணைத் தொறத்திட்டுப் போற மாதிரி ஒரு விளம்பரம் வந்திருக்கே...பாத்துருக்கீங்களா?

The Advertising Standards Council of Indiaவில் இத்தகைய விளம்பரங்களை எதிர்த்து இணையம் மூலமாவே புகார் கொடுக்கலாம்.

http://www.ascionline.org/regulation/howtocomplain.htm

Dhiyana said...

சில விளம்பரங்களைப் பார்த்துக் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று என் தோழி வருத்தப்படுகிறாள். வியாபார உத்தி.

ஆகாய நதி said...

வாங்க கைப்புள்ள சார்!
நானும் பார்த்திருக்கேன் :(

நன்றி நீங்கள் தந்த இணைய முகவரிக்கு :)

ஆகாய நதி said...

//சில விளம்பரங்களைப் பார்த்துக் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று என் தோழி வருத்தப்படுகிறாள். வியாபார உத்தி.
//

உண்மை தான் தீஷு :( என் அண்ணியின் மகன் கூட இப்படிதான் விளம்பரங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறான்...

கிரி said...

//Anonymous said...
முற்றிலும் உண்மை, சில நாட்களுக்கு முன் இந்த விளம்பரத்தை எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்ததாக படித்த ஞாபகம்//

அது fair&lovely என்று நினைக்கிறேன்.... கறுப்பாக இருப்பதால் வேலை கிடைக்காமல் போவதை போலவும் ..சிகப்பானால் மட்டுமே கிடைப்பதை போலவும் காட்டி இருந்தார்கள்.

அதை எதிர்த்து படித்ததாக நினைவு..

இந்த ஹமாம் சோப்பு விளம்பரமும் ஒரு கேவலமான விளம்பரம்

ஆகாய நதி said...

வாங்க கிரி... நீங்க சொல்வது சரிதான்... இது கேவலமான விளம்பரம் :(

இது மட்டுமல்ல... இது வெறும் உதாரணமே... இது போல் பல விளம்பரங்கள் உள்ளன...

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..அந்த் விளம்பரம் கொஞ்சம் ஓவர்தான்! நல்ல பதிவு!

ஆகாய நதி said...

ஆமாம் முல்லை... நன்றி!

DHANS said...

naan paarthathileye mosamaana vilamparam ithuvaagatthaan irukkum

Karthik said...

ஆமாங்க. ரொம்பவும் கேவலமா இருக்கு அந்த விளம்பரம். :(

சீனு said...

//"ஐயோ பரு வந்து அவ அழகே போயிடும்... அப்புறம் அவளுக்கு தன்னம்பிக்கையே போயிடும்"//

அட! நீங்க வேற. முதலில் வந்தது "ஐயோ பரு வந்து அவ அழகே போயிடும்... அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது"னு தான். எதனாலோ(!) அதை போனா போகுதுனு "அப்புறம் அவளுக்கு தன்னம்பிக்கையே போயிடும்" மாத்திட்டாங்க.

இந்த விளம்பரம் பார்த்ததுல இருந்து இந்த சோப்பை வாங்குவதை நிறுத்திவிட்டேன் (ஏதோ, நம்மால முடிஞ்ச எதிர்ப்பு).

ஆகாய நதி said...

நன்றி தன்ஸ்!

நன்றி கார்த்திக்!

ஆகாய நதி said...

//
அட! நீங்க வேற. முதலில் வந்தது "ஐயோ பரு வந்து அவ அழகே போயிடும்... அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது"னு தான். எதனாலோ(!) அதை போனா போகுதுனு "அப்புறம் அவளுக்கு தன்னம்பிக்கையே போயிடும்" மாத்திட்டாங்க
//

அப்படியா? சரியா கவனிக்கலயே... :( சே ரொம்ப மோசம் :(

//
இந்த விளம்பரம் பார்த்ததுல இருந்து இந்த சோப்பை வாங்குவதை நிறுத்திவிட்டேன் (ஏதோ, நம்மால முடிஞ்ச எதிர்ப்பு
//

சூப்பர் சூப்பர்! நன்றி!

Vetirmagal said...

A very offensive ad. Deserves to be condemned. You did a right thing in making us all protest.
I also tried sending a complaint to aD council.

Thanks.

ஆகாய நதி said...

மிக்க நன்றி வெற்றிமகள்! :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//அதுவும் இல்லாம என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாமே அழகுதான்! (கொஞ்சம் ஓவரா தெரிந்தாலும் அது தான் உண்மை!) ஒரு பெண் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக, ஆசிரியையாக, காதலியாக இவை அனைத்திற்கும் மேலாக தாயாக மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்!//

மிகச் சத்தியமான வரிகள்.

-ப்ரியமுடன்
சேரல்

ஆகாய நதி said...

மிக்க நன்றி சேரல்! :)

Kevin Matthews said...

இதை logic ஓடு எண்ணி பாருங்கள். அந்த பொண்ணு சோப் வாங்கிட்டு வீட்டுக்கு தானே வரும். கடையிலே குளிச்சிட்டு வருமா என்ன? என்ன ஒரு லூசு தனமான creativity?

butterfly Surya said...

சரியா சொன்னீர்கள்.

பார்க்கவே அருவருப்பா இருக்கு.

இந்த படத்தை போடுங்க..

கம்பெனிகாரங்க பார்க்க வாய்ப்பு இருக்கு.

http://www.emporiumonnet.com/images/beauty_health/soaps/150x180/herbal-soap/hamam-soap.gif

ஆகாய நதி said...

//
இதை logic ஓடு எண்ணி பாருங்கள். அந்த பொண்ணு சோப் வாங்கிட்டு வீட்டுக்கு தானே வரும். கடையிலே குளிச்சிட்டு வருமா என்ன? என்ன ஒரு லூசு தனமான creativity?

//

ha ha ha :) Good question... We should ask this to the Director of the ad...

She has to come to home for taking bath.

ஆகாய நதி said...

வண்ணத்துபூச்சியாரே! தங்கள் வரவு நல்வரவு :) நீங்கள் அளித்த சோப் படத்தை போட்டாச்சு... நன்றி :)

jothi said...

//
இதை logic ஓடு எண்ணி பாருங்கள். அந்த பொண்ணு சோப் வாங்கிட்டு வீட்டுக்கு தானே வரும். கடையிலே குளிச்சிட்டு வருமா என்ன? என்ன ஒரு லூசு தனமான creativity?

//

உக்காந்து யோசிப்பாய்ங்களா?

ஆகாய நதி said...

@jothi :)

அமுதன் said...

இந்த விளம்பரம் கேவலம் மட்டுமல்ல. சகிக்க முடியாதது கூட (Very irritating to hear). All my family members agree to this.

ஆகாய நதி said...

நன்றி அமுதன் :)
அந்த சோப்பைப் புறக்கணிப்பதன் மூலமும் நம் எதிர்ப்பைக் காட்டுவோம்!

அன்புடன் அருணா said...

ரொம்ப நாளா நான் யோசிச்சுட்டு இருந்த ஒரு விஷயம்....
அன்புடன் அருணா

ஆகாய நதி said...

நன்றி அருணா! :)

Prabhu said...

முன்னயே இந்த விள்ம்பரம் வந்திருக்கு. அப்ப கல்யாணமே நடக்காதுன்னு சொல்வாங்க. அப்புறம் எதிர்ப்பு வந்துதான். இந்த மாதிரி மாத்துனாங்க.

Anonymous said...

hmm. naanum parthen. antha Ad rombave over.

x
USA

ஆகாய நதி said...

//
முன்னயே இந்த விள்ம்பரம் வந்திருக்கு. அப்ப கல்யாணமே நடக்காதுன்னு சொல்வாங்க. அப்புறம் எதிர்ப்பு வந்துதான். இந்த மாதிரி மாத்துனாங்க.

//

ஆமாம் :( இதையும் மாற்ற வேண்டும்!

ஆகாய நதி said...

நன்றி பப்பு! நன்றி அனானி! :)