April 21, 2009

பொழிலன் கலக்கல் டைம்ஸ்!

இந்த பொழில்குட்டி திருச்சி வந்ததில் இருந்து தாத்தா ஆச்சி செல்லம் ஆகிவிட்டது!
தாத்தா ஆபிஸில் இருந்து வந்தவுடனே வேகமாக தவழ்ந்து சென்று காலைக்கட்டிக் கொள்வது என தொடங்கி ஒரே செல்லம் தான் :) காலை தூங்கி எழுந்ததும் ஆச்சியைப் பார்த்துவிட்டால் போதும்... ஆச்சி ஆச்சி என்று என் அம்மாவிடம் சென்று செல்லம் கொஞ்சிக் கொண்டு ஆச்சியை வம்பு இழுப்பது, அடிப்பது என்று ஒரே கலாட்டாதான் :)

இரவும் தூங்குவதற்கு 12மணி ஆக்கிவிடுகிறான். விளையாட்டு நியாபகம் வந்துவிட்ட்டால் போதும் எழுந்து உட்கார்ந்து கொண்டு செம ஆட்டம். " பொழில் குட்டிமா தூங்குடா செல்லம்.. கண்ணுல பிளீஸ்டா வாடா" என்று கெஞ்சினாலும் வந்து என்னைக் கொஞ்சிவிட்டு மறுபடியும் விளையாட ஓடிவிடுவான்.:-)பிறகு ஒருவழியாக கொஞ்சி, கெஞ்சி, கதை சொல்லி, பாட்டு பாடி தூங்கவைப்பேன் :)

காகா எங்கே என்று தினமும் என் அம்மா அவனிடம் கேட்டு கேட்டு வெளியே காகாவைக் காட்டி காட்டி இப்போது காகா என்றால் அவனே வெளியே சென்று பார்ப்பான்!
அப்படிதான் டோராவும் :) டிவியில் டோராவைக் காட்டி அவனுக்கு டோரா பேசுவது புரியவில்லையானாலும் அடிக்கடி பாடுவது பிடிக்கிறது... அதிலும் டோராவின் மேப் பாடும் பாடல் " நான் தான் மேப்..." நானும் சேர்ந்து பாடுவதால் அவனுக்கு மிகவும் பிடிக்கும் :)
அதனாலேயே டோரா எங்கே என்று எப்போ கேட்டாலும் டிவி முன்னாடி சென்று பார்ப்பான்!

பொழிலனின் ஆடல் பாடல்களை நான் தனிப் பதிவாகவே எழுதுகிறேன்... அவனுடைய நடனத்துடன்(உட்கார்ந்தவாறே)! :)

ஒரு நாள் நாங்கள் கோவிலுக்கு செல்வதற்காக ரெடி ஆகிட்டிருந்தோம் அதற்குள் இந்த பொழில் அவனுடைய மை டப்பாவை எடுத்து திறந்து மை எல்லாம் முகம், கை, கால் என பூசி அழகாக காட்சி தந்தான் :) குட்டி அழகு பூச்சாண்டி! இப்போது நான் இந்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கப்பவே பாருங்க UPS Off பண்ண வந்துட்டாரு எப்போதும் போல!




மேக்கப் அவரே போட்டுகிட்டு அவர் குடுத்த போஸ்! :)

13 comments:

ஆகாய நதி said...

இது தமிழ்மணத்துல தெரியலயே :(

Karthik said...

ஹா..ஹா. கமல் மாதிரியா? மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு! :)

Suresh said...

பொழில்குட்டி திருச்சியா நானும் எல்லா வாரமும் அங்கே தான் அழ்காய் தான் போஸ் கொடுக்குறாரு மக்கா ;) சூப்பர்

Suresh said...

உங்க பொழிலனின் ஆடல் பாடல்களை நான் தனிப் பதிவாகவே எழுதுங்க ப்டிக்க அவலாய் இருக்கோம்

அப்புறம் பொழிலனை பத்தி அழகாய் சொல்லிருக்கிங்க

ஆகாய நதி said...

வாங்க கார்த்திக்... கமல் மாதிரியா?! ஹா ஹா ஹா! நன்றி!

ஆகாய நதி said...

//
பொழில்குட்டி திருச்சியா நானும் எல்லா வாரமும் அங்கே தான் அழ்காய் தான் போஸ் கொடுக்குறாரு மக்கா ;) சூப்பர்

//

ஆமாங்க... பொழிலனின் அம்மாச்சியும் தாத்தாவும் இங்கே திருச்சிதான்! எனக்கு சொந்த ஊர் :)
பிறந்த வீடு.

ஆகாய நதி said...

//
உங்க பொழிலனின் ஆடல் பாடல்களை நான் தனிப் பதிவாகவே எழுதுங்க ப்டிக்க அவலாய் இருக்கோம்
//

நிச்சயமாக... :)

//
அப்புறம் பொழிலனை பத்தி அழகாய் சொல்லிருக்கிங்க
//

உண்மையாகவா?!! ரொம்ப நன்றி! :)

Guru said...

கடந்த சில நாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன், மிக அழகாக எழுதி வருகிரீர்கள். உங்கள் வளைப்பதிவை பார்த்து என் மனைவியையும் எழுத சொல்லி இருக்கிறேன்.

ஆகாய நதி said...

//
கடந்த சில நாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன், மிக அழகாக எழுதி வருகிரீர்கள். உங்கள் வளைப்பதிவை பார்த்து என் மனைவியையும் எழுத சொல்லி இருக்கிறேன்.
//

ரொம்ப நன்றிங்க! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :)

தங்கள் மனைவிக்கு என்னுடைய வாழ்த்துகள் பதிவுலகத்தைக் கலக்க :)

anbudan vaalu said...

பொழில் குட்டி அழகுல்ல..அதான் திருஷ்டி படக் கூடாதுன்னு மை எடுத்து ஈஷிக்கிட்டான் போல...

அடுத்த பதிவுல அவரோட டான்ஸையும் சேர்த்து போடுங்க...

ஆகாய நதி said...

//
பொழில் குட்டி அழகுல்ல..அதான் திருஷ்டி படக் கூடாதுன்னு மை எடுத்து ஈஷிக்கிட்டான் போல...

//

:-)

//
அடுத்த பதிவுல அவரோட டான்ஸையும் சேர்த்து போடுங்க...
//

கண்டிப்பாக... :-)

ஆகாய நதி said...

இங்கும் சரி அம்மாக்கள் வலைப்பூவிலும் சரி நானோ (அ) சக தோழிகளோ இடும் பதிவுகள் அனைத்தும் உபதேசிப்பதற்கு அல்ல...

ஏதோ எங்களுக்கு தெரிந்தததை பிறருக்கும் கூறி நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்ற எண்ணமே அன்றி அவை உபதேசமாகாது...

அனானியாக வந்து தான் நான் தவறு செய்வதாக கூற வேண்டும் என்று இல்லை... தான் யாரென்று கூறியே என்னிடம் கேள்வி கேட்கலாம்... என்னிடம் தவறெனில் ஒப்புக்கொள்கிறேன்... தங்கள் புரிதல் தவறெனில் விளக்கம் தருகிறேன்.. :)

ஆகாய நதி said...

அனானி ஒருவர் என்னிடம் கேட்டது

//

குழந்தைகள் 2வயது வரை டிவி பார்க்கக் கூடாது என்று கூறிய நீங்களே இப்போது டோர பார்க்கிறான் என்கிறீர்களே... யாருக்கு உபதேசம்?

//

அனானி அவர்களே... பொழிலனும் குழந்தை தான் அவனும் டிவி பார்க்கக்கூடாது தான்... குழந்தைக்கு டிவி பார்க்கக்கூடாது என்பது தெரியாது சொன்னாலும் புரியாது... ஏனென்றால் அவனுக்கு 9மாதமே... அதனால் அவன் டிவி பார்த்தால் நாங்கள் தான் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்புவோம்..

அவன் டோரா பார்ப்பதில்லை... டோரா நிகழ்ச்சியில் வரும் குழந்தைகளைக் கவரும் ஒலி அவனையும் கவருகிறது... அவன் டிவி பக்கம் திரும்பி அதைப் பார்த்துவிட்டு உடனே அவன் அவனுடைய விளையாட்டைத் தொடர்வான்...
அந்த மேப் பாடலுக்கு அவனுக்கு தெரிந்த வரை உடலை அசைத்து ஆடிக்கொண்டே விளையாடுவான்... அவ்வளவு தான்...

அவன் டிவியைப் பார்த்து தான் டோராவை ரசிக்கிறான் என்றால் நான் அந்த நிகழ்ச்சியையே வைக்கமாட்டேன்... எனக்கு அவன் டோரா பார்த்து மகிழ்வதைவிட அவனுடைய கண் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்...

ஆனால் அவனுக்கு பிடித்தமான ஒரு பாடல் அது எப்போது டிவியில் வந்தாலும் டிவியைப் பார்க்கிறான்... முதல் முறை அவன் பார்த்த போது தடுக்கவில்லை... அடுத்த முறைகளில் அந்த பாடலோ (அ) அவன் விரும்பும் விளம்பரங்களோ வந்தால் நான் சேனலை மாற்றிவிடுகிறேன்...

அவன் குரல் கேட்டு திரும்பிப் பார்க்கும் போது சேனல் மாறியிருக்கும்.. அவன் விரும்பும் ஒலி கேட்காது... அவனும் கண்டு கொள்வதில்லை... விளையாட்டை (அ) சேட்டையை தொடர்வான்...

பெரும்பாலும் அவனுக்காகவே நாங்கள் டிவி போடுவதில்லை... அப்படியிருக்க அவனை எப்படி பார்க்கவிடுவேன்?
விளம்பரம் வந்தாலே எங்கே அவன் டிவி பார்ப்பானோ என்று வேறு அறையில் ஏதேனும் வேலையாக சென்றிடுந்தாலும் வந்து சேனலை மாற்றுகிறேன்.

//
டோரா எங்கே என்று எப்போ கேட்டாலும் டிவி முன்னாடி சென்று பார்ப்பான்!
///

டோரா இங்கு தான்(டிவியில்) வரும் என்பது அவனறிந்தது... அதனால் அங்கு பார்க்கிறான்...