April 14, 2009

என் குழப்பங்களுக்கு விடை கூறுங்களேன் அறிந்தவர்கள்

நம் பழம் பெரும் காப்பியமான இராமாயணத்தில் எனக்கு பல கேள்விகள் உண்டு!
நான் என் சந்தேகங்களை கேள்வியாக அடுக்குகிறேன்... தயவு செய்து இது பற்றி அறிந்தவர்கள் பதில் கூறுங்களேன்...

நான் சிறு வயதில் தொலைக்காட்சி மூலமாகவும், கோயில் பிரசங்கம் மூலமாகவும், இராமகிருஷ்ண தபோவனப் புத்தகங்கள் மூலமாகவும் இறுதியாக கம்ப இராமாயணம் மூலமாகவும் இராமாயண்த்தை அறிந்துள்ளேன்.

எனக்கும் என் கணவருக்கும் இடையே இது பற்றி பல விவாதங்கள் நடந்ததுண்டு... எனினும் எனக்குள்ளேயே பல சந்தேகங்கள் உண்டு... நான் வேறு சில நூல்கள் மூலம் வேறு மாதிரியாகவும் இராமாயணக்கதையைப் படித்துள்ளேன்... அதில் தான் குழப்பமே!

இதோ என்னுடைய கேள்விகள்... உங்கள் பதில் மூலம் என் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் மக்களே!

சிறந்த விளக்கத்துக்கு எதிர்பாராத சிறந்த பரிசு உண்டு! :)(சத்தியமாங்க)

1. இராவணன் சீதைக்குத் தந்தையா?

2. அது உண்மையெனில் எதற்காக சீதையைக் கடத்தி சிறை படுத்த வேண்டும்

3. சீதையாக உரு மாறி இராவணனுடன் சென்றது வேதவல்லியா?

4. அது உண்மையெனில் வேதவல்லி தான் பத்மாவதி தாயாரா?

5. சீதையை இராமன் ஏன் தீக்குளிக்கச் செய்ய வேண்டும்? அக்னி தேவனிடம் இருந்து
சீதையைப் பெற்று வேதவல்லியை அவரிடம் ஒப்படைக்கவா?

6. கம்பர் கூற்றுப்படி இராவணன் ஒரு சிறந்த அரசன் எனில் அவனைக் கொல்ல வேண்டி திருமால் அவதரிக்கக் காரணம் என்ன?

7. இராமாயண்க்கதை உண்மை நிகழ்வா அல்லது கற்பனையா?

35 comments:

Tech Shankar said...

இலங்கேஷ்வரன் அப்படின்னு ஒரு படத்திலே இந்த மாதிரிக் காண்பித்திருப்பார்கள்

அந்தப்படத்தை ஒரு முறை பாருங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்க்
1. இராவணன் சீதைக்குத் தந்தையா?

Tech Shankar said...

I added this post in Tamilish.com

Anonymous said...

எல்லாம் பொய்

ஆகாய நதி said...

//
இலங்கேஷ்வரன் அப்படின்னு ஒரு படத்திலே இந்த மாதிரிக் காண்பித்திருப்பார்கள்

//

இராவணன் பற்றிய படம் ஒன்று பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பெயர் நினைவில் இல்லை... அந்த நடிகர்கள் பெயரை தாங்கள் கூறினால் நான் பார்த்ததும் நீங்கள் கூறுவதும் ஒன்றா என தெரிந்துவிடும்...

நன்றி என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு :)

ஆகாய நதி said...

//
I added this post in Tamilish.com

//

நன்றிங்க! :)

ஆகாய நதி said...

//எல்லாம் பொய் //

பொய் என்பதற்கும் எனக்கு போதிய விளக்கம் மற்றும் ஆதாரம் தேவை அனானி அவர்களே!

நன்றி!

கோவி.கண்ணன் said...

//1. இராவணன் சீதைக்குத் தந்தையா? //

அப்படித்தான் சொல்லுவார்கள், ஜனகன் நிலத்திற்கு பூசை செய்யும் போது சீதையைக் கண்டு எடுத்தானாம். சீதைக்கு இராவணன் சொந்தப்பா :)

//2. அது உண்மையெனில் எதற்காக சீதையைக் கடத்தி சிறை படுத்த வேண்டும்//
அது அவனுக்கே தெரியாது, சூர்பனகையை மூக்கறுத்த அவமானத்தால் கோபமுற்று சீதையை சிறையெடுத்துச் சென்றான்

//3. சீதையாக உரு மாறி இராவணனுடன் சென்றது வேதவல்லியா?

4. அது உண்மையெனில் வேதவல்லி தான் பத்மாவதி தாயாரா?

5. சீதையை இராமன் ஏன் தீக்குளிக்கச் செய்ய வேண்டும்? அக்னி தேவனிடம் இருந்து
சீதையைப் பெற்று வேதவல்லியை அவரிடம் ஒப்படைக்கவா?//

தெரியல்ல, சீதையை தீக்குளிக்கச் சொன்னது 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என்பது போன்றது

//6. கம்பர் கூற்றுப்படி இராவணன் ஒரு சிறந்த அரசன் எனில் அவனைக் கொல்ல வேண்டி திருமால் அவதரிக்கக் காரணம் என்ன?//

அது ஒரு சாபத்தின் விளைவு. கம்சன், இரண்யகசிபு, இராவணன் மூவரும் ஒருவரே என்பார்கள்

//7. இராமாயண்க்கதை உண்மை நிகழ்வா அல்லது கற்பனையா?//

இன்றைக்கும் இருக்கும் கோவில் தல புராணங்கள் போலவே அமெரிக்காவில் கட்டப்படும் இந்துக்கோவில்கள் இறைவன் கனவில் வந்து தோன்றி கட்டச் சொன்னதாகச் சொன்னால் நம்புவீர்களா ?

Raju said...

\\கம்பர் கூற்றுப்படி இராவணன் ஒரு சிறந்த அரசன் எனில் அவனைக் கொல்ல வேண்டி திருமால் அவதரிக்கக் காரணம் என்ன?\\

ஆம்..இராவணன் சிறந்த அரசன்தான். ஏன் ஒரு சிறந்த அரசனைக் கொல்வது ஒன்றும் தகாத செயல் இல்லையே..
(அந்த காலத்தில்). இந்த காலத்தில் நாம் ஒட்டு போடாமல் த்ண்டிப்பது இல்லையா..?
முதலில் தாங்கள் "கொலை" என்றே சொல்லியிருக்கக் கூடாது.யுத்தத்தில் செய்வது "வதம்".
வதம் என்பது கொலையிலிருந்து தனித்து நிற்கும்...

இராமன் நல்லவன், வல்லவன்...ஆனால் இராவணன் வல்லவன் மட்டுமே..பல வருடங்கள் தவமிருந்து வரம்
பெற்றவன்.மாற்றான் பெண்ணாசை கொண்ட ஒரே காரணத்தாலாயே அவன் வதம் செய்யப்படுகிறான்.
இதே கதைதான் வாலி,சுக்ரீவன் கதையும். அதிலும் இராமனின் பங்கு உண்டு.

நான் இராமாயணம் படித்ததில்லை..ஏன் பார்த்தது கூட இல்லை..ஏதேனும் தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்.

Raju said...

வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!
மண்டோதரி தான இராவணனோட ஆளு...!
முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள்.

Raju said...

\\7. இராமாயண்க்கதை உண்மை நிகழ்வா அல்லது கற்பனையா? \\

ஆன்மீகவாதிகளுக்கு உண்மை நிகழ்வு..!
நாத்திகவாதிகளுக்கு கற்பனை, பொய் அல்லது பினாத்தல்...!
சந்தர்ப்பவாதிகளுக்கு சில நேரம் பொய்..சில நேரம் உண்மை.!
எல்லாமே ஒரு நம்பிக்கைதான்!

ஆகாய நதி said...

//
அது அவனுக்கே தெரியாது, சூர்பனகையை மூக்கறுத்த அவமானத்தால் கோபமுற்று சீதையை சிறையெடுத்துச் சென்றான்
//

தங்கைக்காக பெற்ற பிள்ளையைக் கஷ்டப்படுத்துவதா? அதுவும் அன்றி சூர்ப்பநகை உண்மையில் சீதைக்கு அத்தையானால் அந்தக் கதைப்படி அவள் இராமனை சோதிக்கவே அப்படி செய்து மூக்கறுபட்டாள்.. அவள் சக்தியால் அறுபட்ட மூக்கை சரிசெய்து கொள்ளலாம் அதற்காக யுத்தம் நிகழ வேண்டியிருக்காதல்லவா!

ஆகாய நதி said...

//
சீதையை தீக்குளிக்கச் சொன்னது 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என்பது போன்றது
//

ஆனாலும் சந்தேகம் தீரவில்லைதானே அதனால்தானே மீண்டும் சீதையை காட்டில் விட்டுவிட்டான் இராமன்

//
அது ஒரு சாபத்தின் விளைவு. கம்சன், இரண்யகசிபு, இராவணன் மூவரும் ஒருவரே என்பார்கள்
//

ஆம் நானும் படித்திருக்கிறேன்!

//
இன்றைக்கும் இருக்கும் கோவில் தல புராணங்கள் போலவே அமெரிக்காவில் கட்டப்படும் இந்துக்கோவில்கள் இறைவன் கனவில் வந்து தோன்றி கட்டச் சொன்னதாகச் சொன்னால் நம்புவீர்களா ?
//

நிச்சயமாக நம்பமாட்டேன் :)

நீங்கள் எப்படி புத்திசாலித்தானமாக பதில் கூறுகிறீர்கள் :)

ஆகாய நதி said...

//
நான் இராமாயணம் படித்ததில்லை..ஏன் பார்த்தது கூட இல்லை..ஏதேனும் தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்.
//

தவறில்லை நீங்கள் கூறியது தான் பொதுவாக இராமாயணம் என்று எல்லோராலும் அறீயப்பட்டது... அதையும் தாண்டி சிலக் கிளைக் கதைகள் தான் அடிப்படைக் கதையையே மாற்றுகின்றது :)

ஆகாய நதி said...

//ஆன்மீகவாதிகளுக்கு உண்மை நிகழ்வு..!
நாத்திகவாதிகளுக்கு கற்பனை, பொய் அல்லது பினாத்தல்...!
சந்தர்ப்பவாதிகளுக்கு சில நேரம் பொய்..சில நேரம் உண்மை.!
எல்லாமே ஒரு நம்பிக்கைதான்//

சரியான பதில்! :)

நான் சந்தர்ப்பவாதியும் இல்லை நாத்திகவாதியும் இல்லை ஆனால் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்பும் ஆத்திகவாதியும் இல்லை... அதனால் தான் இத்தணை கேள்விகளும் :(

கைப்புள்ள said...

//வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!//

அருணாச்சலம் படத்துல "மாத்தாடு மாத்தாடு மல்லிகே..."ன்னு டான்ஸ் போட்டவங்க.
:)

ஆகாயநதி...ப்ளீஸ் என்னை அடிக்க வந்துடாதீங்க. நீங்க கேட்டிருக்கிற கேள்விகள் எல்லாமே புதுசா இருக்கு. ஓரமா நின்னு வேடிக்கை பாத்துக்கிறேன்.

Suresh said...

Enakku GK romba weak :-)

Suresh said...

pirantha cinna kulanthai photova profile la irunthu eduthuranga, also from side.. in ur blog, its not good all may see and kanu potuduvanga... please dont put..

ஆகாய நதி said...

//
ஆகாயநதி...ப்ளீஸ் என்னை அடிக்க வந்துடாதீங்க. நீங்க கேட்டிருக்கிற கேள்விகள் எல்லாமே புதுசா இருக்கு. ஓரமா நின்னு வேடிக்கை பாத்துக்கிறேன்.
//

வாங்க கைப்புள்ள சார்! நீங்க வந்ததே மகிழ்ச்சி! :) நான் உங்க வலைப்பூவை என் குழந்தை வயிற்றில் இருந்த போதிருந்தே படிக்கிறேன்... சைலண்ட் ரீடர்னு வெச்சிக்கோங்களேன் :)

ஆகாய நதி said...

//
Enakku GK romba weak :-)

//

பரவாயில்ல :)

ஆகாய நதி said...

//
pirantha cinna kulanthai photova profile la irunthu eduthuranga, also from side.. in ur blog, its not good all may see and kanu potuduvanga... please dont put..

//
ரொம்ப நன்றிங்க! நல்ல விஷயம் தான் நீங்கள் கூறியது :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மூக்கறுத்தது என்றால் மூக்கை மட்டும் என்று நினைக்கிறீர்களா.. அவமானப் படுத்துவதற்காக எடுப்பாக இருக்கும் உறுப்பு எதையும் அறுத்தார்களோ என்னவோ.. மொத்தத்தில் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறார். அண்ணன் கொதித்து எழுந்துவிட்டார். அந்த கால கதைகளில் வில்லனைக் கொல்ல சரியான காரணம் கிடைக்கவில்லை என்றால் சாபம் என்று சொல்லிவிடுவார்கள். இங்கு வில்லன் என்பவன் ஹீரோவின் எதிரி அவ்வளவுதான். பல கதைகளில் வில்லன்கள் ஹீரோக்களைவிட நல்லவர்களாக தூய உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள். பாவம் அவர்களின் ஊழ்வினையால் வில்லனாக மாறி செத்துப் போவார்கள்

தீப்பெட்டி said...

அதான.. அந்த வேதவல்லி யாரு புது கேரக்டரா இருக்கு....

Anonymous said...

Ramayanamo, allathu Mahabharathamoh oru vagaiyana Ithigasangal, karpanai kathaigal, Ithil ulla valkkaikku yetrukkolla koodiya karuthukkalai ungalukku thevaiyana seithigalai, pakutharinthu yetrukkollungal, athil ulla karpanai kathapathirangal unmai yendru kadavul yendro nambinaal, william shakspier, Sakratees...... ippadi yellorudaiyah kathai,thathuvangalilulla katha pathirangalum kadavule, Thiruvalluvar,Ilangovadigal,nakkeerar,Mahakavi Bharathi,Kannadasan yen karunanithiyidam kooda naam katrukkolla vendiyathu irunthaal thevaiyana visayangalai mattum yeduthukkolluvom athai viduthu seethai,vethavalli, 10 thalai(head),avatharam, parivarangal ithaiyellam naan nambuvathaga illai, ivaiyellam unmaiyaga irunthaal yaro oru Kadavul Tsunamiyei munkoottiyeh solli irukkalam Ithu yenathu sontha Karuthu, ungalin Vimarsanangalai yethir parkkiren.

ஆகாய நதி said...

//
Ramayanamo, allathu Mahabharathamoh oru vagaiyana Ithigasangal.......................................//

அனானி அவர்களே தங்கள் கருத்து ஏற்புடையது தான்! :-)

ஒரு வகையில் நானும் அப்படித்தான் என்ணுகிறேன்.... ஆனால் சில நேரங்களில் சில ஆதாரங்கள் இந்த இதிகாசங்கள் உண்மை நிகழ்வே என்று கூறுவன போல் உள்ளன... அது தான் சற்று குழப்புகிறது...

Anonymous said...

pothuvaaga raamaayanam mahaabhaaratham yellaame karppanai kathaigale.. unmaiyaanavai alla..

நிகழ்காலத்தில்... said...

இவ்வளவு நுணுக்கமாக படித்தால் இது போன்ற சந்தேகங்கள் வரத்தான் செய்யும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு, ஒவ்வொரு பாத்திரங்களும், என்ன செய்கின்றன, அதன் மூலம் நம் வாழ்க்கைக்கு உதவக்கூடிய என்ன செய்திகள் சொல்கின்றனர் என
பாருங்கள்.
அதில் இல்லாத தத்துவமோ, செய்தியோ இருக்காது.
வாழ்த்துக்கள்...

agaviyan said...

//7. இராமாயண்க்கதை உண்மை நிகழ்வா அல்லது கற்பனையா?//

எனக்கும் தெரியாது ஆனால் சமிபத்தில் படித்த ஒரு ஆதாரம் இதோ :

http://www.scribd.com/doc/2468010/NASA-Shuttle-Images-of-Mysterious-ancient-Ramayan-Bridge-between-India-Srilanka

//1. இராவணன் சீதைக்குத் தந்தையா? //
சிலர் அப்படி தன் கூறுகின்றனர் : அதாவது ராவணனின் மகளால் இலங்கை அழியும் என்று சாஸ்திரம் கூறியதாகவும், மகளை கொள்ள விருப்பமில்லாமல் அவளை பெட்டியில் வைத்து கடலில் விட்டதாகவும் கூறப்படுகிறது.
//2. அது உண்மையெனில் எதற்காக சீதையைக் கடத்தி சிறை படுத்த வேண்டும்//
அது அவனுக்கே தெரியாது.

//6. கம்பர் கூற்றுப்படி இராவணன் ஒரு சிறந்த அரசன் எனில் அவனைக் கொல்ல வேண்டி திருமால் அவதரிக்கக் காரணம் என்ன?//
நல்ல அரசன் மாற்றான் மனைவியை அடைய என்னமட்டன்.

இவை எல்லாம் நான் அறிந்த ராமாயணத்தில் இருந்து கொடுத்த பதில்கள் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

ஆகாய நதி said...

//
pothuvaaga raamaayanam mahaabhaaratham yellaame karppanai kathaigale.. unmaiyaanavai alla..

//

நன்றி அனானி! தங்கள் கருத்துக்கு :)

நன்றி அறிவே தெய்வம்... நீங்கள் கூறுவதும் சரிதான்!

ஆகாய நதி said...

நன்றி அகவியன் அவர்களே! இவை எனக்கு தெரிந்ததால் தான் எனக்கு இத்துணை சந்தேகங்களே வந்தது! தங்கள் சுட்டிக்கு மிக நன்றி... நான் அங்கு சென்று பார்க்கிறேன் :)

http://urupudaathathu.blogspot.com/ said...

////சீதையாக உரு மாறி இராவணனுடன் சென்றது வேதவல்லியா?

4. அது உண்மையெனில் வேதவல்லி தான் பத்மாவதி தாயாரா?///

எனக்கு தெரிஞ்ச ஒரே வேதவல்லி, ஏதோ ரஜினி- படத்துல நடிச்ச ஹீரோயினோட சினிமா பேரு தான்..

Anonymous said...

Ramayana and Mahabharatha are called "Kaathiagal " in tamil. Kaathigal means the one that happened. Kathigal- may be fiction or non fiction.

Let us come to your questions:
If you had gone to any perumal temple, you would have seen 'Dwarapalakas' in the entrance. Their names are jaya and vijaya. There is one story which says on the insult done by Jaya and Vijaya to the visiting sage because of which they were given 'sabam'. When they cried for mercy they were given a choice of 100 birth where they would be good or 7 birth where they would be demons and killed by Lord Vishnu. They chose 7 because they can reach Lord Vishnu early. They were born as Ravanan and Kumbakarnan and was killed by Lord Rama.(incarnation of Lord Vishnu)

there is another story why Padmavathy Thayar was to be ploughed from land and called as seetha .It is just a joke that people say Seetha piratti is daughter of Lord Ravanan. Those stories are 'thiribu' of originals and are creativity of later age poets.

Ravanan was good but due to the boon he got by worshipping Lord Shiva, he became too arrogant. Hence he had to be killed. By the by, Lord Rama was Kshatriyan and Ravanan was Brahmin.

The seetha who was asked to get into fire pot was not original one. Some say it was look alike. Original SitaPiratti comes out of fire and the look alike gets destroyed.

Suggest asking these questions to some Vaishnavite Pandits who can clarify these doubts. Please read the sub -stories and Bhagavantham also as they will give more clarity.

Please note:
1.Archeology dept confirms under sea city near Gujarat. The same is called Dwaraka in Mahabharatha
2. YOu can visit Kurushetram in Haryana and see the vast land where 'Gaurava-Pandava' war Happened. It is just flat area.
3. Tamil Kings Pandians participated in Mahabharatha war. You can refer the material there.
4. You can see few of the villages in TamilNadu where you Lord Rama passed by while going to SriLanka

ஆகாய நதி said...

//
If you had gone to any perumal temple, you would have seen 'Dwarapalakas' in the entrance. Their names are jaya and vijaya. There is one story which says on the insult done by Jaya and Vijaya to the visiting sage because of which they were given 'sabam'. When they cried for mercy they were given a choice of 100 birth where they would be good or 7 birth where they would be demons and killed by Lord Vishnu. They chose 7 because they can reach Lord Vishnu early. They were born as Ravanan and Kumbakarnan and was killed by Lord Rama.(incarnation of Lord Vishnu)
//

இதை நானும் படித்திருக்கிறேன்...

//
It is just a joke that people say Seetha piratti is daughter of Lord Ravanan. Those stories are 'thiribu' of originals and are creativity of later age poets.
//

Is it so?... That might be...

ஆகாய நதி said...

The seetha who was asked to get into fire pot was not original one. Some say it was look alike. Original SitaPiratti comes out of fire and the look alike gets destroyed.

நான் படித்த கிளைக் கதையில் சீதாபிராட்டியை அக்னி தேவன் தன்னோடு அழைத்து சென்றுவிட்டு,

வேதவல்லி என்னும் பெண்ணை இராவணன் தூக்கிச் செல்லும் சமயம் சீதாவாக அனுப்பியதாகவும் இருந்தது.

இந்த வேதவல்லி இராமனை ஒரு தலையாக காதலித்ததாகவும் இராமன் இப்பிறவியில் ஏக பத்தினி விரதன் என்பதால் அடுத்தபிறவியில் வந்து அவளை மணப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.

அதன் படி கிருஷ்ண அவதாரம் முடிந்ததும் மரத்தில் அம்பு பட்டு கிருஷ்ணர் இறந்தார் ஆனால் அந்த செய்தியை சேவகன் சென்று கூறி அனைவரையும் அழைத்து வருவதற்குள் இராமன் மீது தாய்ப்பாசத்துடன் அவர் நினைவாக வாடிய துறவிப்பாட்டி ஒருத்தி வந்து இறந்த கிருஷ்ணனுக்கு புத்துயிர் அளித்து அவனை இராமனாக நினைத்து தன் இல்லம் கூட்டிசென்றுவிட்டாள். இப்பிறவியில் தான் பெருமாள் பத்மாவதியாக பிறந்த வேதவல்லியை காதலித்து மணம் முடித்துக் கொண்டதாக வரளாறு உள்ளது. இத்திருமணத்திற்கு தான் குபேரனிடம் கடன் வாங்கியதாகவும் கூறுவர்.

ஆகாய நதி said...

//
3. Tamil Kings Pandians participated in Mahabharatha war. You can refer the material there.
1.Archeology dept confirms under sea city near Gujarat. The same is called Dwaraka in Mahabharatha

//

அப்படியா? :) ரொம்ப நன்றி! அனானி அவர்களே.... நிறைய விஷயம் கூறிவிட்டீர்கள்... தாங்கள் யாரென்றும் கூறியிருக்கலாம் :)

ஆகாய நதி said...

//
"டக்ளஸ்....... said...

வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!
மண்டோதரி தான இராவணனோட ஆளு...!
முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள்."

வேதவல்லி என்பவர் சீதையின் முதல் பிறப்பு. வேதவல்லி தான் இராவணனை பழி வாங்க அடுத்த பிறப்பில் சீதையாகப் பிறந்ததாக இராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று சொல்கிறது.

//

இதை மொழியோடு ஒரு பயணம்ல நம்ம டக்ள்ஸ் கேட்டு விடையும் வாங்கிட்டாரு :)

ஆனால் எனக்கு குழப்பம் மறுபடியும்:(

//
நான் படித்த கிளைக் கதையில் சீதாபிராட்டியை அக்னி தேவன் தன்னோடு அழைத்து சென்றுவிட்டு,

வேதவல்லி என்னும் பெண்ணை இராவணன் தூக்கிச் செல்லும் சமயம் சீதாவாக அனுப்பியதாகவும் இருந்தது.

இந்த வேதவல்லி இராமனை ஒரு தலையாக காதலித்ததாகவும் இராமன் இப்பிறவியில் ஏக பத்தினி விரதன் என்பதால் அடுத்தபிறவியில் வந்து அவளை மணப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.
//

இப்படித்தானே நான் படித்தேன்!
கோயில் உபன்யாசத்திலும் இப்படித் தான் கூறினர்!

சுவாதி அவர்கள் கூறுவது என்ன கதை?