April 30, 2009

என்னதான் நடக்குது நம்ம நாட்டு இரயில்வே துறையில?

( இந்த வியாசர்பாடி இரயில் விபத்து சதில உயிர்விட்ட நல்ல உள்ளங்களுக்கு மட்டும் எனது ஆழ்ந்த இரங்கலை சம்ர்ப்பிக்கிறேன்... அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். :( )

என்னதான் நடக்குது நம்ம நாட்டு இரயில்வே துறையில?

இந்த வியாசர்பாடி இரயில் விபத்துக்கு இரயில்வே துறை அதிகாரிகள் சொல்லும் கதைய பாருங்க...

இந்த விபத்த ஆராயுறோம்னு சொன்னாங்க.. சரி..

அடுத்து இது விபத்து இல்ல... யாரோ இரயில சொல்லாம எடுத்துட்டு போயிருக்காங்கனு சொன்னாங்க...

அப்புறம் அது ஆந்திரா ஆளுனு சொன்னாங்க...

இப்போ அது தீவிரவாதியா இருக்கலாம்னு சொல்றாங்க...

இது எல்லாமே சரி... ஆனால் எனக்கு சில சந்தேகம்... மக்கள்ஸ் இது உங்களுக்கும் இருக்குனு நினைக்கிறேன் :(

******

இரயில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கிளம்பியப்போ அதோட உண்மையான டிரைவர் என்ன பண்ணிட்டிருந்தாரு?

******

அப்படியே அவரு காபி, டீ சாப்பிட்டுகிட்டு கவனிக்கலனாலும் வண்டி கிளம்பினது தெரிந்ததும் ஏன் புகார் கொடுக்கல?

******

அவர் தான் கடமையை ஒழுங்கா செய்யல... சரி விட்டுருவோம்... இந்த டைம் கீப்பர் என்ன பண்ணிட்டு இருந்தாரு? ஒரு வண்டி கிளம்பும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்புதேனு ஏன் கவனிக்கல?

******

சிக்னல் இன்சார்ஜ் என்ன பண்ணிட்டிருந்தாரு? வண்டி ஸ்டேஷன விட்டு அவர் சிக்னல் இல்லாம வெளிய வர முடியாதே... அப்படி வருதுனா அப்போ இவரு புகார் கொடுக்காம என்ன பண்ணிட்டிருந்தாரு?

******

சரி இவுங்க எல்லாரும் வண்டி கிளம்பும் நேரத்துல கோட்டை விட்டாலும் வண்டி கிளம்பியதும் அடுத்த சிக்னல்/ஸ்டேஷன்ல பிடிச்சுருக்கலாமே? ஏன் அப்படி செய்யல?

******
இப்படி பல பல சந்தேகங்கள்... :(

எல்லாருமே சேர்ந்து தெரிந்தே ஒரு வண்டிய அதில உள்ள உயிர்களை மரணப் பாதைக்கு அனுப்பி வேடிக்கைப் பார்த்துட்டு இன்னைக்கு வந்து மைக் கைக்கு வந்துட்டா என்ன கதை வேணாலும் சொல்லலாம்னு சொல்றாங்களா?

என்ன சொன்னாலும் மக்கள் நம்புவாங்கனு சொல்றாங்களா?

இது தீவிரவாதிகள் செயல்னா இதுக்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போன இரயில்வே நிர்வாகம், ஓட்டுனர், சிக்னல் மேன், டைம் கீப்பர் உட்பட எல்லாரும் தீவிரவாதிங்கதான்.

இதுக்கு சரியான நியாயம் கிடைக்கனும். உயிரோட மதிப்பு அவ்வளவு தானா??? :(:(


" யாரோ அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வண்டிய கிளப்பிட்டு போய்ட்டிருக்காங்கனு" சொல்றாரே? அந்த யாரோவ கவனிக்காம அந்த நேரத்துல கடமை தவறின அத்துணை பேரையும் அதே டிராக்ல நிக்கவெச்சு வண்டிய ஏத்தலாம்னு சொன்னா அப்போ தெரியும் மரண வலி என்னனு... அப்போ தான் உணருவாங்க அவங்க தவறை... இப்போ மைக் புடிச்சு பேச எல்லாம் எளிதாதான் இருக்கும்.

இது தேர்தல் நேர சதியா?

அரசியல் சதியா?

சைக்கோ சதியா?

தீவிரவாத சதியா?

இல்ல கவனக்குறைவினால் ஏற்பட்ட விபத்தா?

எது எப்படி இருப்பினும் தவறு மேலே நான் சொன்னவர்களையும் சார்ந்தது தான். நீங்க என்ன சொல்றீங்க?

11 comments:

Karthik said...

பாம்பே சிஎஸ்டி ல தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அப்புறம் எதோ பாதுகாப்பு அதிகப் படுத்தியிருக்கோம் அப்படி இப்படின்னாங்க.. ஆனா ஒண்ணும் இல்லை போலிருக்கே. :(

நான் மறுபடியும் சொல்றேன். நமக்கு தீவிரவாதிகள் வெளியே இருந்து வரவேண்டியதில்லை. :(

ஆகாய நதி said...

உண்மை தான் கார்த்திக் :( நமக்குள்ளேயே தான் தீவிரவாதிகள் உள்ளனர்.

நம்ம போலிசு குற்றம் நடந்து முடிந்த இடத்துக்கு தானே பலத்த பாதுகாப்பு போடுவாங்க.

Guru said...

அத்தனை சம்பவமும் சில நொடிப்பொழுதில் நடந்துள்ளது. அந்த ஒட்டுனர் உடனடியாக புகார்செய்துள்ளார். வண்டியின் உண்மையான பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையினர் துரிதமாக செயல்படாமல் இருந்திருந்தால் அது நீலகிரி எக்ஸ்பிரஸ் மீது மோதி மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்கும், இரயில்வே மற்றும் காவல் துறையில் பணிபுரிபவரும் மனிதர்களே, தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நடந்த சம்பவம் மிகவும் வருத்தமானதே. அதற்காக ஒட்டுமொத்த துறையை குறைசொல்ல முடியாது.

சகாதேவன் said...

அரியலூர் ரயில் விபத்து (வருஷம் நினைவில்லை) நடந்ததும் தன் நிர்வாகத்தில் இப்படி ஒரு குறையா என்று ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.
இப்போது அடிக்கடி விபத்து நடப்பதுடன் ரயிலையே ஒருவன் திருடிச் செல்ல முடியும் என்றாலும் அமைச்சர் லல்லு என்ன செய்யப் போகிறார்
சகாதேவன்

ஆகாய நதி said...

நன்றி முல்லை!

ஆகாய நதி said...

வாங்க குரு... நீங்க கூறும் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்...
அதுவும் சரிதான்...

ஆனால் இப்படியெல்லாம் செய்தும் தடம் மாறி ஓடிய வண்டியை ஏன் அடுத்த அடுத்த சிக்னல்களில் தடுக்கவில்லை?

வண்டி ஸ்டேஷன்களில் நின்று சென்றிருக்கும் அல்லவா? நிற்கவில்லையெனில் மக்கள் சந்தேகத்தில் வண்டியை நிறுத்தும் செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தியிருப்பரே? :(

ஆகாய நதி said...

வாங்க சகாதேவன்...

//
தன் நிர்வாகத்தில் இப்படி ஒரு குறையா என்று ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.
//

அது சுயநலம், சுரண்டல் இல்லாத மக்களுக்காக மக்களாட்சி நடந்த காலம்.

ஆனால் இது சுயநலமும் சுரண்டலும் நிறைந்த மக்கள் மீதுள்ள அக்கறை குறைந்த மக்களாட்சி காலம் :(

அதிலும் லல்லுவைப் பற்றி பேசுவதே வீண்...

Arivazhagan said...

It seems the mechanic, who brings the unit from the shed to the station has to retain the keys(4 keys) and personally hand them over to the driver. Instead he had left all keys in the train, facilitating mr.X to move the train. The driver was also not at the proper reporting point. Gross negligence of responsibilities by every one involved. Fortunately the number of passengers were low.
But one thing, once they found out that the train has been hijacked, couldnt they just stop the train by cutting off the power? why this was not done?. As I come to know the train passed atleast one station, without stopping(basin bridge).
Atrocious. what else can one say.

Anonymous said...

The entire thing happened in 3 and half minutes. Reaction time was very low before the power cable to be switched off.

Railways had option: The driver has to switch of one speed controller key which they normally do not do and GPRS should be enabled.Once it is done, it will automatically connect to the station and can be stopped

ஆகாய நதி said...

நன்றி அறிவழகன்! டெக்னிகலா சொல்லிருக்கீங்க...

ஆகாய நதி said...

நன்றி அனானி!

நீங்களூம் டெக்னிகலா விளக்கியிருக்கீங்க...