April 14, 2009

பொழிலன் அப்டேட்ஸ்

பொழில்குட்டி ஒரு புத்திசாலிகுட்டியாக வளர்கிறான் :)
வர வர அவனுடைய சேட்டைகளும் அதிகமாகவும் அழகாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது! :) அதில் புத்திசாலிதனமும் தெரிகிறது!

இப்போதெல்லாம் இரவு உணவு என்றால் அவராகவே தான் தட்டில் வைத்து சாப்பிட வேண்டுமாம்! அதை சொல்லத் தெரியாததால் ஊட்டிவிடும் போது உண்ணாமல் ஒரே அடம் :(
என் தட்டில் வைத்திருப்பதை பிய்த்து உண்ண துவங்கினான்...

ஆனால் இதில் சிக்கல் என்னனா அப்படி அவனாகவே சாப்பிடும் போது 3,4 வாய்களே சாப்பிடுகிறான்! சரி எப்படியோ அவனாகவே சாப்பிடுவது நல்ல விஷயம் தானே என்று நானும் அவனுக்கு தனியே வைத்துக் கொடுக்கிறேன்.

என் தங்கைக்கும் பொழிலனை விட 14நாட்கள் பெரியவனான குழந்தை இருக்கிறான் :)
அவன் பெயர் "கார்த்திக் நாராயணன்"... அவன் வயதில் மட்டுமல்ல சேட்டையிலும் இவனுக்கு அண்ணன்.... யாராவது வெளியே வண்டில போறத பார்த்துட்டா போதும்... இவரை கூட்டிட்டு போகலனு தரைல படுத்து புரண்டு புரண்டு அழுவார் :) எனக்கு சிரிப்பா இருக்கும்! 9மாத குழந்தைதான் இரண்டும் ஆனால் இதுங்க பண்ற சேட்டைகள பாருங்க! ஸ்ஸ்ஸ்ஸ்... ஹப்பா!

இந்த பொழில்குட்டி இப்போது எழுந்து நின்று பொருட்களின் உதவியுடன் நடக்கத் துவங்கியிருக்கிறார்... எல்லா பொருட்களையும் இழுத்து போடுவது என எப்போது சேட்டை தான்... கிச்சன் பக்கம் தூக்கிக் கொண்டு போனால் கையில் கண்டிப்பாக ஏதாவது தட்டு/டம்ளர்/கரண்டியுடன் தான் வருவார்... என் இடுப்பில் இருந்து கொண்டே அவன் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள பாத்திர செல்ப் தான் இந்த பொருட்களின் உபயம் :)

ஒரு நாள் குட்டிமா கை முகம் முழுக்க வெள்ளையா பவுடர் பூசிருந்தது என்னனு போயி பார்த்த கோலபொடியை எடுத்து கொட்டி அதில் விளையாடிட்டு வந்துருக்கு! :)

இன்னொரு நாள் இப்படிதான் சாந்தி அக்கா(வீட்டு வேலைக்கு வருபவர்) வைத்திருந்த கூடையை எடுத்து அதில் உள்ள குழம்பு டப்பாவை கொட்டிவிட்டு அதன் மீது உட்கார்ந்து அதை வாயில் வேறு வைத்து ஒரே அழுகை பாவம் :( நாங்கள் சிறிது வேறுபக்கம் கவனம் செலுத்துகையில் இப்படி சேட்டைகள் நிகழும்! :)

இவனுக்கு மிகவும் பிடித்த ஒரு வேளை என் கணினியின் UPS switch-ஐ அழுத்திவிடுவான் நான் கணிணியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே! :) ஒரு வேளை என்னை கவனிக்காமல் ஏன் அதனுடன் இருக்கிறாய் என்று அப்படி செய்கிறானோ என்னவோ :-)

எப்படியோ அவனுடைய சேட்டைகள் என்னை மகிழ்ச்சியாக்கவே செய்கின்றன! :) ஒரு போதும் கோபம் வந்ததே இல்லை! இது தான் அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! நான் எளிதில் கோபப் பட்டு பயங்கரமாக கத்திவிடுவேன் எனக்கு மிகவும் நெருங்கிய உறவுகளுடன்...
(பொழிலன் அப்பாவைக் கேட்டால் தெரியும்) ஆனால் பொழிலனிடம் மட்டும் எனக்கு கோபம் வருவதே இல்லை. எப்போதுமே அவனிடம் கோபம் வராமல் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் :)

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) எப்போதும் கோவம் வராம இருக்க நானும் வாழ்த்துகிறேன்..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

குட்டீஸ்னாலே.. இப்படிதான்..

ஆகாய நதி said...

//
குட்டீஸ்னாலே.. இப்படிதான்
//

இதை விட வேறு என்ன சந்தோஷம்? :)

ஆகாய நதி said...

//
:) எப்போதும் கோவம் வராம இருக்க நானும் வாழ்த்துகிறேன்..

//

நன்றி!

Karthik said...

சூப்பர்ப்..! :)

பொழிலனோட சேட்டைகள்லாம் படிக்கும்போதே சூப்பரா இருக்கே!

//பொழிலன் அப்பாவைக் கேட்டால் தெரியும்

பிரேம், :)))))

//அவன் பெயர் "கார்த்திக் நாராயணன்"...

வாவ், நிஜமா?!

பிரேம் சொன்னபோது ச்சும்மா சொல்றார்னு நினைச்சேன். :)

ஆகாய நதி said...

//
சூப்பர்ப்..! :)

பொழிலனோட சேட்டைகள்லாம் படிக்கும்போதே சூப்பரா இருக்கே!
//

நன்றி! :)

//
பிரேம், :)))))

//

ஹி ஹி ஹி! ஐய்யோ! சும்மானாச்சுக்கும் கத்தமாட்டேன் சேட்டை பண்ணாதான்...

//
பிரேம் சொன்னபோது ச்சும்மா சொல்றார்னு நினைச்சேன். :)
//

:) நிஜமாதான்.. அது ரெட்டை வாலு...

Dhiyana said...

//எப்போதுமே அவனிடம் கோபம் வராமல் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் //

ரொம்ப நல்ல எண்ணம் ஆகாயநதி. நானும் அப்படி தான் நினைப்பேன். ஆனால் தீஷு அடம்பிடிக்கும் பொழுது கோபம் வந்து விடுகிறது. ஆனா அடிக்கக் கூடாதுனு முடிவு செய்து இருக்கேன்.

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா..சோ க்யூட்! பொழில் அப்டேட்ஸ் கலக்கலா இருக்கு! பொழில் இன்னும் சேட்டைகள் செய்ய வாழ்த்துகள்..;-)

ஆகாய நதி said...

நன்றி தீஷு அம்மா!

உங்கள் முடிவும் நல்ல முடிவு தான்! நானும் அடிப்பதில்லை என்றே இருக்கிறேன் :)

ஆகாய நதி said...

நன்றி முல்லை... தங்கள் வாழ்த்துகளுக்கும் முத்துலட்சுமி அவர்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி! :)

தேவன் மாயம் said...

இப்போதெல்லாம் இரவு உணவு என்றால் அவராகவே தான் தட்டில் வைத்து சாப்பிட வேண்டுமாம்! அதை சொல்லத் தெரியாததால் ஊட்டிவிடும் போது உண்ணாமல் ஒரே அடம் :(
என் தட்டில் வைத்திருப்பதை பிய்த்து உண்ண துவங்கினான்...
///
தலைவருக்கு தனித்தன்மை வளருதுங்கோ!!

anbudan vaalu said...

குழந்தைகளின் சேட்டைகள் இம்சிக்கவும் செய்யும் ரசிக்க வைக்கவும் செய்யும்....

ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் பதிவு செய்தும் வைத்துக் கொள்ளுங்கள்..வளர்ந்த பின் அவனும் பார்த்து ரசிப்பான்

ஆகாய நதி said...

//
தலைவருக்கு தனித்தன்மை வளருதுங்கோ!!
//

ஆமாம்... அது ரொம்ப சந்தொஷமா இருக்கு எங்களுக்கு :)

ஆகாய நதி said...

//
ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் பதிவு செய்தும் வைத்துக் கொள்ளுங்கள்..வளர்ந்த பின் அவனும் பார்த்து ரசிப்பான்
//

நிறைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறேன் :)