July 20, 2009

ஒன்றாவது வயதில் பொழிலன்!

ஒரு வழியாக பொழில்குட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிவுற்றது! :)

பொழிலனின் வளர்ச்சியில் இந்த ஜூலை மாதம் அசுரவேக மாறுதல்களை உள்ளடக்கியது என்றே கூறலாம் :)

ஜூலை முதல் வாரத்தில் முளைக்க ஆரம்பித்த பல் இப்போது அவன் சிரிக்கும் போது அழகாகத் தெரிகிறது!

பல் முளைக்கிறது என்பதை எப்போது கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து அவர் ஒரு அழகு அழுகை அழுவாரே பார்க்கனும் அழகாக முகத்தையும் மூக்கையும் சுழித்து மேல் உதட்டை சற்று தூக்கி பல் தெரியும்படி ஒரு அழுகை... :) என் கண்ணே பட்டுவிடும்!

இப்போது நாம் பேசுவது மிக நன்றாகப் புரிகிறது... அவனும் ஒரு சில வார்த்தைகள் பேசுகிறான் தெளிவாக! எல்லாரையும் ஏய், இந்தா என்று அழைக்கிறான்.... வா, தா, தோசை மற்றும் விலங்குகளில் சிலவற்றின் ஆங்கிலப் பெயர்களை அரைகுறையாகக் கூறூகிறான்! மழலை இன்பம் மகத்தானது! இறைவனுக்கு நன்றி!

பொழிலம் பிறந்த நாள் பரிசுப் பொருட்களில் அவன் சித்தப்பா பரிசளித்த காரில் அமர்ந்து கொண்டு அதனை பின்னோக்கி ஓட்டிச் செல்வது காண கொள்ளை அழகு!

வீடெங்கிளும் ஒரு குட்டி அழகு செல்லம் ஓடிக் கொண்டும் நடமாடிக் கொண்டும் இருப்பது அந்த குழந்தை கிருஷ்ணனே வீட்டிற்குள் வந்தது போல மகிழ்ச்சியாக இருக்கு! :)

ஆனால் இவரோட சேட்டைகள் அபாரம்.... முடியல... கோவமும் எங்களுக்கு விழும் புரியாத மழலை திட்டும் ஹி ஹி ஹி! என்ன சொல்ல...

ரொம்ப பக்திமான் ஆகிட்டாரு பொழிலன்... எப்போது எங்கு சாமி படம் பார்த்தாலும் அப்படி சாமி கும்பிடுறான் அழகாக அந்த பிஞ்சுக் கைகளைக் கூப்பி! :)

பால் பாட்டில் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை திறந்து மூடக் கற்றுக் கொண்டபடியால் அதைப் பார்த்தாலே அந்த வேலையில் மூழ்கிவிடுகிறான்!

ஆனால் என் கைப்பேசி அவன் கையில் படும் பாடு இருக்கிறதே! :(
பல நாட்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து கிடக்கும் என் கைப்பேசி ஒரு நாள் சாப்பாட்டிற்கு அரிசி எடுத்து ஊற வைத்திருந்த குக்கரில்... :( நல்ல வேளை கைப்பேசி சோறு சமைக்காமல் போனோம்! :)

ஆனால் பொழிலன் வளர வளர மகிழ்ச்சியும் வளருகிறது! :)))

19 comments:

சந்தனமுல்லை said...

கலக்கல் அப்டேட்ஸ் ஆகாயநதி! மிக்க மகிழ்ச்சி! மூன்று வயது வரை மிகவும் ரசிப்பீர்கள்...பாருங்கள்!! :-) அப்புறம் செல்போன், டீவி ரிமோட் எல்லாம் பார்ட் பார்டா கழட்டிடுவாங்க...பொழில் குட்டிக்கு வாழ்த்துகள்!!

jothi said...

நல்லாயிருக்கு

அபி அப்பா said...

சூப்பர் சூப்பர்

யுவகிருஷ்ணா said...

பொழிலனுக்கு அன்பு முத்தங்களோடு பிறந்தநாள் வாழ்த்துகளும்!

ஆகாய நதி said...

ஹி ஹி ஹி முல்லை செல்ஃபோன் ரிமோட் இரண்டுமே பல மாதங்களாவே பார்ட் பார்ட்டா தான் கிடக்குது கீழே அதையும் தாண்டி தண்ணீல வேற போட்டுவிடுறான் :)

அதற்கு மட்டும் வாயிருந்தா ஐயோ என்ன விடேன் பொழில்னு அழுதுடும் :)

ரொம்ப நன்றி முல்லை! :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! :)

ஆகாய நதி said...

நன்றி அபிஅப்பா! :)

ஆகாய நதி said...

நன்றி லக்கிலுக்... :)

ஆகாய நதி said...

உங்கள் குட்டி தேவதை நலமா லக்கி?

யுவகிருஷ்ணா said...

//உங்கள் குட்டி தேவதை நலமா லக்கி?//

நலமாக இருக்கிறாள். பகல் முழுக்க தூங்கிவிட்டு, அவளுடைய அப்பாவை தான் இரவுகளில் தூங்கவிடாமல் அலைக்கழிக்கிறாள். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் இப்போது தூங்கினாலே அதிசயமாக இருக்கிறது! :-(

தீஷு said...

பொழிலனுக்கு வாழ்த்துகள்!!!. சூப்பர் அப்டேட்ஸ் ஆகாயநதி.. குழந்தைகள் அழகு, அவர்கள் சேட்டைகள் அழகு, அவர்கள் மழலை மொழி அழகு..

ஆகாய நதி said...

நன்றி தீஷு அம்மா! நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை :)

ஆகாய நதி said...

வாழ்த்துகள் லக்கி... மூன்று மணி நேர துக்கம் பறந்து போயி ஓவர் நைட் டியூட்டிகு! :)))

Karthik said...

பெரியாளு ஆயிட்ட பொழிலன் க்கு வாழ்த்துக்கள். :)

துபாய் ராஜா said...

பொழிலுக்கு எழிலான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பல நாட்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து கிடக்கும் என் கைப்பேசி ஒரு நாள் சாப்பாட்டிற்கு அரிசி எடுத்து ஊற வைத்திருந்த குக்கரில் //

கெளம்பிட்டாரா பொழிலன். :)))))))

தாமதமான முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! :)

ஆகாய நதி said...

நன்றி துபாய்ராஜா! :)

ஆகாய நதி said...

ஆமாம் அமித்துஅம்மா! ரொம்ப நன்றி! அமித்து நலமா? :)