July 24, 2009

மீண்டும் பள்ளிக்கு போகலாம் - தொடர் பதிவு!

"எதைச்சொல்ல" என்னும் பதிவில் தன்னுடைய பள்ளி அனுபவங்களை ஒரு அழகான கவிதையாக வடித்த "ஜோதி" அவர்களின் அழைப்பினை ஏற்று நானும் என் பள்ளி அனுபவங்களை ரொம்ப மொக்கை போடாமல் சுருக்கமாக சொல்கிறேன்! ஹி ஹி ஹி அவர் மாதிரி கவிதையெல்லாம் இல்லை வழக்கம் போல நம்ம ஸ்டைல் தான்!


******************************************

என்னுடையா பள்ளி வாழ்க்கை மிகவும் அருமையானது தான் பெரும்பாலானோரைப் போலவே! பாலர் பள்ளியில் படிக்கும்(??!! விளையாடும்) போதே ஞாயிறுகளில் கூட அம்மா கூலுக்கு அம்மா கூலுக்கு என்று என் பிஸ்கட் பாக்ஸ் எடுத்துக் கொண்டு கிளம்புவேனாம்! என் அம்மா இன்றும் கூறி சிலாகித்துக் கொள்வார்!உண்மையில் எனக்கு பள்ளி செல்வதும் சரி கல்லூரி செல்வதும் சரி மிகவும் பிடித்தமானதாக இருந்தது! திருச்சியில் தான் பள்ளிக் கல்வி எனக்கு! படிப்பதற்கு ஏற்ற அருமையான நகரத்தில் அருமையான பள்ளியில் துவங்கிய என் அறிவுத் தேடல் இன்றும் கூகுளில் தொடர்கிறது! பின்ன மண்டையில அறிவு எங்கே ஏறுது! ஹி ஹி ஹி!

******************************************

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரில் சிலரை இன்றும் நன்றியுணர்ச்சியோடு மனதில் வணங்கிக் கொள்கிறேன்! ஆனால் ஒன்று நன்கு பாடம் நடத்தி எங்களையும் அன்போடு காணும் ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு என் மனதில் மதிப்பு உண்டோ அந்த அளவுக்கு ஒன்றும் சொல்லித் தராத(தெரிந்தால் தானே?) ஆசிரியர்கள் மீது வெறுப்பும் இருக்கும் எனக்கு!என்னுடைய நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியவர்! என்னுடைய முதலாம் வகுப்பிலிருந்தே வருடந்தோறும் முதல் மாணவியாக பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வாங்கும் நான் ஆறாம் வகுப்பில் தான் கொஞ்சம் பின் தங்கி்னேன்! புதிய பள்ளி... புதிய சூழல், புதிய நட்பு என எல்லாமே புதுசு!பின் ஏழாம் வகுப்பில் விட்டதைப் பிடித்துவிட்டேன்! 7ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து மீண்டும் முதல்/இரண்டாவது/மூன்றாவது மாணவிப் பரிசை வாங்கத் துவங்கிவிட்டேன் வருடந்தோறும்!

*****************************************

எங்கள் பள்ளியில் எப்போதும் போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்!
என் சொந்த விருப்பத்தினால் முடிந்த வரை அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுத்து அதிக பல்புகளும் சில பரிசுகளும் வாங்குவேன்!


பல்பு பொதுவாக தனி நடிப்பு, பாட்டுப் போட்டி இரண்டிலும் ரெடியாக இருக்கும் எனக்கென! பரிசும் தமிழ், ஆங்கில மொழிகள் இரண்டிலும் கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு தயாராக இருக்கும்! மற்றபடி பல பல பல்புகள் போட்டி மற்றும் போட்டியாளர்களைப் பொறுத்து சூப்பரா கிடைக்கும்! அரசியல்னா இதெல்லாம் ஜகஜம்! பல்புக்கெல்லாம் கவலைப் பட்டா எப்புடி?

ஆனால் பொதுஅறிவு வினாடிவினா, அறிவியல் வினாடிவினா, அறிவியல் ஆய்வுக்களம் மற்றுமாய்வுக் கட்டுரை போட்டிகளில் படிப்படியாக முன்னேறி தொடர்ந்து மூன்று வருடங்கள் மாநில அளவில் எங்கள் குழு பரிசுகள் வாங்கினோம்! அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று!

அறிவியல் வினாடிவினா தான் அருமை.... சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி? புத்தகத்தில் இருப்பது போன்ற கேள்விகள் தான் வரும்.... சுஜாதா போன்று பலர் அத்தகைய அறிவியல் விளக்க கேள்வி பதில் புத்தகங்களை எழுதியுள்ளனர்.... அவையெல்லாம் தான் கைகொடுத்துதவின! இவை குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமான புத்தகங்கள்! (நான் இப்போ ஒரு அம்மா எனும் நினைவு வந்துவிட்டதோ??)


ஆனால் எனக்கு ஓட்டப்பந்தயம்னா எப்பவும் பயம்! எங்கள் பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் இது! அப்போதெல்லாம் எனக்கு காய்ச்சல், வயிற்று வளி, கால் வலி போன்றவை வந்துவிடும் ஒரு கொஞ்ச நேரத்திற்கு! பின்ன என்ன சிறு பிள்ளையில் ஓடி ஓடி நிறைய விழுப்புண்கள் பெற்று அப்பா டின்சர் வைத்த அனுபவம் தான்! பலர் முன் ஏற்படும் தோல்வியின் மீதிருந்த பயமும் ஒரு காரணம்!

******************************************

பத்தாம் வகுப்பு வரை எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!

பதினோராம் வகுப்பில் தான் அந்த கெமிஸ்டிரி மிஸ் :( என்ன கொடுமை கெமிஸ்டிரி இது? வகுப்பில் அந்த அம்மா செய்யும் உருப்படியான ஒரே காரியம் டெஸ்ட்! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கெமிஸ்டிரி டெஸ்ட்!!!


அப்பாடா ஒரு வழியா டியூசன் வைத்து கெமிஸ்டிரியில் தேறியாச்சு! ஆனால் கணிதம்.... ஸ்ஸ்ஸ்ஸ் முடியல அந்த மிஸ் எல்லாத்தையும் டியூசன்ல தான் சொல்லிக்குடுப்பாங்க... வகுப்பில் நாங்களே தான் அவரிடம் டியூசன் போவோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்! :( கணக்குனாலே கசப்புதான் அப்போ! அது இன்னுமற்றபடி இயற்பியல், உயிரியல் பாடங்கள் அதி அற்புதம்! தமிழும் ஆங்கிலமும் அல்வா மாதிரி இனிப்பு!

*****************************************

ஆனால் பள்ளிப் பருவத்தில் அழகான அவஸ்தை பாவாடை தாவணி!! எங்காள் பள்ளி சீருடை!


இப்படி வழக்கமான பள்ளி அனுபவம் தான் எனினும் என்னை செம்மை படுத்திய, என் மனதை ஒரு நிலைப் படுத்திய ஒரு அற்புதமான பள்ளி நான் படித்தது! ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தபோவனத்தைச் சார்ந்த பள்ளி ஆதலால் நான் விவேகானந்தர் ரசிகை!அதிக பட்ச இதிகாசக் கதைகளையும், தெய்வீகப் படைப்புகளையும் படிப்பதும் கீதை சுலோகங்களைப் பாடுவதும் எனக்கும் மிகவும் எளிதானதாக இருந்தது! பாடத சுலோகங்களும் அந்தாதிகளும் மிகக் குறைவு என்னும் அளவிற்கு எங்களுக்கு அவற்றை போதித்ததோடு, அன்பு, பண்பு, பக்தி, கடமை, ஒழுக்கம், மரியாதை, பணிவு, உதவுதல் என அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கு போதித்த அருமையான கோயில் எங்கள் பள்ளி!

ஆனால் இதையெல்லாம் நாங்க கடைப்பிடிக்கிறோமானு சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்...

இப்படி ஒரு சொர்க்க அனுபவம் வேறு ஒரு பள்ளியில் எனக்கு கிடைத்திருக்குமா தெரியவில்லை! அந்த வகையில் இறைவனுக்கு நன்றி!


*****************************************
இன்று என்னிடம் இருக்கும் தவறான பண்புகளுக்கு எப்படி நான் மட்டும் காரணமோ அப்படித்தான் என் நற்பண்புகளுக்கு என் பெற்றோரும், பள்ளியும், இறைவனும், திருக்குறளுமே காரணம்!

*****************************************

மனசாட்சி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடிச்சிட்டியா சுபா? பள்ளி பற்றி ஏதோ எழுதுனு ஒரு அப்பாவி சொன்னாருனு இப்படியா எழுதுவ... விட்ட பகுதி ஒன்று இரண்டுனு எழுதுவே போலிருக்கே?

12 comments:

துபாய் ராஜா said...

மிகவும் சுருக்கமான பதிவு.

jothi said...

//வழக்கம் போல நம்ம ஸ்டைல் தான்!//
அதுதான் அழகு

//எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரில் சிலரை இன்றும் நன்றியுணர்ச்சியோடு மனதில் வணங்கிக் கொள்கிறேன்! //
மனதில்?,.. எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்,.. பொதுவாக பெண்கள் வெளியில் வந்தால் ஆசிரியர்களை கண்டால் வெளிப்படையாக வணக்கம் சொல்வதில்லை ஏன்?. இன்றைக்கும் எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கண்டால் கை தானாக மேலே வந்து விடுகிறது. அது பயமா, மரியாதையா, நன்றியுணர்ச்சியா சொல்லத் தெரியவில்லை.

jothi said...

//7ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து மீண்டும் முதல்/இரண்டாவது/மூன்றாவது மாணவிப் பரிசை வாங்கத் துவங்கிவிட்டேன் வருடந்தோறும்!//

ஸ்ஸ்ஸ் முடியல,.. ரொம்ப பழமா இருந்திருப்பிங்க போல இருக்கே

//அதிக பல்புகளும்//

நீங்க பல்பா? நாங்க தோல்விகளை மெடல் என வர்ணிப்போம்.

//ஆனால் பொதுஅறிவு வினாடிவினா, அறிவியல் வினாடிவினா, அறிவியல் ஆய்வுக்களம் மற்றுமாய்வுக் கட்டுரை போட்டிகளில் படிப்படியாக முன்னேறி தொடர்ந்து மூன்று வருடங்கள் மாநில அளவில் எங்கள் குழு பரிசுகள் வாங்கினோம்!//

கண்டிப்பாக பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள். நீங்கள் மாநிலம் என்றால் பொழிலன் இந்தியா அளவில் இருக்கணும்,..

jothi said...

//சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி?//

ரொம்ப அருமையான book. one of favorite book of mine.

//பலர் முன் ஏற்படும் தோல்வியின் மீதிருந்த பயமும் ஒரு காரணம்!//

எங்கோ ஒளிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மை அப்போதுதான் நல்லா நாற்காலி போட்டு உட்காரும்.

//என்ன கொடுமை கெமிஸ்டிரி இது////ஆனால் கணிதம்.... ஸ்ஸ்ஸ்ஸ் முடியல //

வேதியலும், கணிதமும் யாருக்காச்சும் பிடிக்காம இருக்குமா?

jothi said...

//அன்பு, பண்பு, பக்தி, கடமை, ஒழுக்கம், மரியாதை, பணிவு, உதவுதல் என அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கு போதித்த அருமையான கோயில் எங்கள் பள்ளி!

ஆனால் இதையெல்லாம் நாங்க கடைப்பிடிக்கிறோமானு சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்...//

ஹா ஹா ஹா அட்டகாசம் போங்க,..அருமையா இருந்தது உங்கள் பள்ளி அனுபவங்கள்.

//இன்று என்னிடம் இருக்கும் தவறான பண்புகளுக்கு எப்படி நான் மட்டும் காரணமோ அப்படித்தான் என் நற்பண்புகளுக்கு என் பெற்றோரும், பள்ளியும், இறைவனும், திருக்குறளுமே காரணம்!//

அருமை,.அருமை அருமை

Karthik said...

நீங்க இவ்வ்வ்வ்வ்வளவு படிப்ஸ் னு எனக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் இன்ட்ரெஸ்டிங்! :)

//கணக்குனாலே கசப்புதான் அப்போ!

same pinch! :)

ஆகாய நதி said...

ஹி ஹி ஹி நன்றி துபாய்ராஜா! என் பள்ளிக் கதைகளைப் பார்க்கும்போது இது மிக மிக மிக சுருக்கமான கதை தான்!

ஆகாய நதி said...

வாங்க ஜோதி! நன்றி!

//
பொதுவாக பெண்கள் வெளியில் வந்தால் ஆசிரியர்களை கண்டால் வெளிப்படையாக வணக்கம் சொல்வதில்லை ஏன்?.
//

யாரு சொன்னா? நான் அப்படியெல்லாம் இல்லை.... இப்பவும் திருச்சியில் இருந்தபோது கோயிலில் என் பழைய ஆசிரியர்களோடு நேரம் செலவிட்டுதான் வந்தேன்! முதலில் வணக்கம் பிறகு தான் பேச்சே!

ஆகாய நதி said...

//
ஸ்ஸ்ஸ் முடியல,.. ரொம்ப பழமா இருந்திருப்பிங்க போல இருக்கே
//

ஹி ஹி ஹி! கல்லூரியில ரொம்ப பழம்லாம் இல்லை ஆனால் தங்கமெடல் என்ன செய்ய ஒரு ஃபினிஷிங் டச் குடுக்கனும்ல பரீட்சைக்கு... உட்கார்ந்து படிப்பது ரொம்ப குறைவு... வகுப்பறைல அதிகம் தூங்குவது இல்லை அது தான் இதுக்கு காரணம் (அப்படினும் சொல்லலாம் அப்பா அம்மா கடவுள் பக்கபலம்னும் சொல்லலாம்) :)

ஆகாய நதி said...

//
நீங்கள் மாநிலம் என்றால் பொழிலன் இந்தியா அளவில் இருக்கணும்,..
//

ரொம்ப நன்றி ஜோதி!

//
வேதியலும், கணிதமும் யாருக்காச்சும் பிடிக்காம இருக்குமா?
//

உண்மைதான்.... ஆனால் எனக்கு கணிதத்தைவிட உயிரியல் தான் மிக பிடித்தமானது... இன்றும் இது பற்றிதான் இணையத்தில் அதிகம் உலவுகிறேன்!

ஆகாய நதி said...

//
நீங்க இவ்வ்வ்வ்வ்வளவு படிப்ஸ் னு எனக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் இன்ட்ரெஸ்டிங்! :)

//

நன்றி கார்த்திக்! :)

Rashmi said...

Vanakkam Aakaya Nadhi Akka...I was reading most of your writings for the past 2 days...Ennaku ipdy oru akka irunthiruntha epdy irunthirukum nu thoonichu... Just wanted to share that with you...:)