பொழில் குட்டியின் சேட்டை வர வர அதிகமாகிக் கொண்டே வருகிறது!
வீட்டில் உள்ள எல்லா பொருளும் அவருடைய விளையாட்டு சாமான்கள் தான் :)
அதிலும் நாங்கள் உபயோகப் படுத்தும் மொபைல், ரிமோட், தண்ணீர் பாட்டில், டம்ளர், தட்டு இந்த பொருட்களின் மேல் தான் அதிக கவனம்!
அந்த ரிமோட் நம் ஐயா கையில் படும் பாடு இருக்கிறதே! அவராகவே எதாவது பட்டனை அழுத்தி விளைவு டிவியில் தெரியும் :) இப்போது ரிமோட் உடைந்தே விட்டது. அவருடைய மேளம் அடிக்கும் யானை பொம்மையையும் உடைத்தாகிவிட்டது.
அவனுடைய பாய் தான் அவனுக்கு சரியான பொழுது போக்கு!
அதைப் பிறாண்டி ஒவ்வொரு குச்சியாகப் பிய்த்துப் போடுவதை ஒரு தலையாய கடமையாக ஆற்று ஆற்றுனு ஆற்றிக்கொண்டிருப்பார்! :) அவங்க அப்பாவும் சித்தப்பாவும் இவருக்கு பாய் பிறாண்டினே பெயர் வைத்தாயிற்று! :)
இப்போது அத்தை, தாத்தா, பாப்பா எல்லாம் சொல்ல வருவதால் எப்போதும் அவற்றையே சொல்லிக் கொண்டிருப்பார் :)
அவர் கையில இருக்க எதையும் நாங்க வாங்கிடவே கூடாது... அவ்வளவு தான் போச்சு!
ஒரே கூச்சல்...ஆர்ப்பாட்டம் தான் :( இந்த பிடிவாத குணத்தை எப்படி சரி செய்வதுனே தெரியல.
குளிக்கிறதுனா கொள்ளை பிரியம்... அந்த குட்டி பாப்பா குளத்துல உக்கார வெச்சா ஒரே குஷி தான் சாருக்கு! :) கைய, கால உள்ள ஆட்டிகிட்டே ஜாலியா குளிப்பாரு! :)
அவர் சிரிப்பு இருக்கே அப்பப்பா.... அந்த சிரிப்புக்கே எத்தன தடவ வேணும்னாலும் பொழிலனுக்கு அம்மாவா பிறக்கலாம்! அந்த கன்னக் குழி அழகுக்கே எல்லாரும் மயங்கிடுவாங்க :) ஆனால் வீட்டிற்கு வரும் கடைக்காரர், கேஸ் காரர், தண்ணீர் காரர் எல்லாரையும் பார்த்து சிரிக்குது இந்த குட்டி! :)
ஒவ்வொரு முறை அவர் அம்மா என்றழைத்து என்னிடம் வரும்போதும் எனக்கு மனதில் ஏற்படு உணர்வு மகிழ்ச்சியின் உச்சகட்ட்மாகவே இருக்கிறது! இப்போதெல்லாம் இரவில் என் மீது கால் போட்டு தான் உறங்குகிறார்! :) சிறு வயதில் நான் செய்ததுதான் நினைவிற்கு வருகிறது.:)
எப்படியோ எங்கள் வாழ்க்கையின் பொருள் தினம் தினம் நன்கு புலப்படுகிறது :) கொஞ்சம் பயமும் வருகிறது :( எங்களை நம்பி கடவுள் ஒப்படைத்த எங்கள் ஜீவனை நல்லபடியாக வளர்க்க வேண்டும். எங்களுக்குப் பூரண நம்பிக்கை உள்ளது! :)
வணக்கம்
2 weeks ago
12 comments:
இது ஒரு அருமையான நேரம். நானும் இதையே அனுபவிக்கிறேன்.
அவர்கள் விருப்பம் போல் விடுவது தான் நல்லது.
அவர் மன அமைதியே அவர் எதிர்காலத்தை முடிவு செய்கிறது.
வாழ்த்துக்கள் பொழில் இன்னும் குறும்பு செய்யவும், சேட்டை செய்யவும் வாழ்த்துக்கள். இதை எல்லாம் பார்க்கும்போதுதான் பிறவி பயனை அடைந்துவிட்ட எண்ணம் தோன்றும் :)
//
அவர் மன அமைதியே அவர் எதிர்காலத்தை முடிவு செய்கிறது
//
அவர் விருப்பத்திற்கு மறுப்பு ஏது? :)
ஆனால் அவர் வாயில் வைக்கும் முரட்டுத்தனமான பொருட்களை மட்டும் அவர் விருப்பமின்றியே வாங்கிவிடுகிறோம்... :)
//
இதை எல்லாம் பார்க்கும்போதுதான் பிறவி பயனை அடைந்துவிட்ட எண்ணம் தோன்றும் :)
//
நன்றி தாரணி பிரியா..:)
நீங்கள் கூறுவது உண்மை தான்! :)
எப்படியோ எங்கள் வாழ்க்கையின் பொருள் தினம் தினம் நன்கு புலப்படுகிறது :)
உண்மைதான் நதி
நானும் இதை தினம் தினம் ரசித்து ருசித்து அனுபவிக்கிறேன் என் அமித்துவின் மூலம்.
பிறந்த பயனை நான் அடைந்தேன் என்று தினம் தினம் கடவுளுக்கு நன்றி சொல்லத்தோன்றுகிறது.
அவர் சிரிப்பு இருக்கே அப்பப்பா.... அந்த சிரிப்புக்கே எத்தன தடவ வேணும்னாலும் பொழிலனுக்கு அம்மாவா பிறக்கலாம்!
:)-
வாழ்த்துக்கள்
//அவர் சிரிப்பு இருக்கே அப்பப்பா.... அந்த சிரிப்புக்கே எத்தன தடவ வேணும்னாலும் பொழிலனுக்கு அம்மாவா பிறக்கலாம்! //
:-) பொழிலைக் கேட்டதாக் கூறவும்!
எப்படியோ எங்கள் வாழ்க்கையின் பொருள் தினம் தினம் நன்கு புலப்படுகிறது :
நானும் இதை தினம் தினம் ரசித்து ருசித்து அனுபவிக்கிறேன்.
//அதிலும் நாங்கள் உபயோகப் படுத்தும் மொபைல், ரிமோட்//
பல சமயம், இதெலலாம் பெரியவங்க கையிலதான் பயங்கர பாடுபடும்...
அந்த வகையில குட்டியோட சேட்டை பராவாயில்லை!!!
நன்றி அமித்து அம்மா! நானும் தான் ஒவ்வொரு சமயங்களில் கடவுளை நினைத்து வியந்ததுண்டு :) அவருக்கு நன்றிகளை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டே இருக்கிறேன் :)
நன்றி முல்லை! பொழிலன் நலமாக இருக்கிறார் :)
நன்றி ராம் அவர்களே! :) இப்போது தான் அனுபவிக்க முடியும் :) பிறகு தந்தைக்கான பொறுப்பும் அதிகரித்துவிடும் ரசனையுடன் சேர்ந்து :)
@ நரேஷ்
ஹி ஹி ஹி! நன்றி நரேஷ்!
எங்க கையில அது படுற பாட்டைப் பார்த்து தான் இரக்கப் பட்டு அவர் வாங்கி வெச்சிக்கிட்டாரோ என்னவோ! :)
Post a Comment