April 27, 2009

காதலில் உளறல் - மாதிரிக் கவுஜ மாதிரி






காலச் சுவடியில் நம் பெயர்கள்

காதல் நினைவாய் அழியா கோலங்கள்


கடற்கரையில் நாம் தடம் பதித்தால்

காதல்தேவதை நம் தடம் பற்றும்


கோல விழியாள் உன் நினைவினிலே

காளை என் மனம் கூத்தாடும்


காலைக் கதிரவன் உதிக்கையிலே

கன்னி உன் முகம் தான் தெரியும்


கானக் குயில் வந்து கூவுகையில்

கண்மனி உன் குரல் ஒலிக்கும்


காலை பனியாய் நம் காதல்

காற்றில் இசையாய் இசைந் தாடும்!

22 comments:

ஆகாய நதி said...

தயவு செய்து கவிஞர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்துராதீங்க...

ஏதோ ஒரு கொலவெறில எழுதிட்டேன்...

ஆயில்யன் said...

உளறல் என்றெல்லாம் சொல்லிப்புட்டு கவிஞர்கள் கோஷ்டியில, கவிதை போட்டு இடம்புடிச்சிடீங்க வாழ்த்துக்கள்!

கவிஞர்கள் அப்படின்னு சொன்னாலே தன்னடக்கம் நொம்ப்பா சாஸ்தியாம்ல :))

ஆயில்யன் said...

//காலைக் கதிரவன் உதிக்கையிலே

கன்னி உன் முகம் தான் தெரியும்//


இப்ப புரியுதா கிழக்கு பக்கம் கண்ணாடியை வைக்ககூடாதுன்னு :)))))

ஆயில்யன் said...

கவிதை நல்லா இருக்கு!

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ! :)))

ஆயில்யன் said...

முதல் கவிதை நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஜூப்பரேய்ய்ய்ய்ய்!

அன்புடன்
ஆயில்யன்
ஏப்ரல் 27 - 2005 :)

ஆகாய நதி said...

//
உளறல் என்றெல்லாம் சொல்லிப்புட்டு கவிஞர்கள் கோஷ்டியில, கவிதை போட்டு இடம்புடிச்சிடீங்க வாழ்த்துக்கள்!
//

அப்படியா!!! நன்றி ஆயில்ஸ்! :)

வந்து பின்னூட்டம்ல் கலக்கிட்டீங்க :)

ஆகாய நதி said...

//
அன்புடன்
ஆயில்யன்
ஏப்ரல் 27 - 2005 :)
//

இது என்ன தேதியெல்லாம் போட்டுருக்கீங்க?!!

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான உளறல்கள்

ஆகாய நதி said...

மிக்க நன்றி அண்ணன் வணங்காமுடி அவர்களே! :)

சந்தனமுல்லை said...

ஆகா..கலக்கறீங்களே ஆகாயநதி! தொடர்ந்து எழுதுங்கள்!

ஆகாய நதி said...

நன்றி முல்லை :)

Karthik said...

//கோல விழியாள் உன் நினைவினிலே
காளை என் மனம் கூத்தாடும்

பொழிலன் எழுதினதா? ;)

நிஜமாவே சிம்பிள் அன்ட் ஸ்விட். :)

Karthik said...

//தயவு செய்து கவிஞர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்துராதீங்க...

Note this point all ilaikiyavaathis out there...

Dhiyana said...

நல்லா எழுதியிருக்கீங்க ஆகாயநதி.. தொடர்ந்து எழுதுங்க.

DHANS said...

kavithaikkum namakkum rompa thooram

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்!

ஹி ஹி ஹி!பொழிலன் எழுத இன்னும் சில வருடங்கள் இருக்கு :)

//
Note this point all ilaikiyavaathis out there...
//

:)

ஆகாய நதி said...

நன்றி தீஷூ!:)

ஆகாய நதி said...

நன்றி தன்ஸ்! :) எனக்கும் தான்... கவிதைகளை ரொம்ப நல்லா ரசிச்சு படிப்பேன்... அவ்வளவுதான் :)

கவிதா | Kavitha said...

காலைக் கதிரவன் உதிக்கையிலே

கன்னி உன் முகம் தான் தெரியும்


கானக் குயில் வந்து கூவுகையில்

கண்மனி உன் குரல் ஒலிக்கும்
//

:) நல்லாயிருக்குங்க.. :)

ஆகாய நதி said...

நன்றி கவிதா :)

ஜெட்லி... said...

உங்கள் கவிதை நன்றாக உள்ளது.....
என் பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கான பதில்
" நீங்க சொல்றது வாஸ்தவம் தான், ஆனா எல்லாம்
ஒரு டைம் பாஸ்க்கு தானே. வரும் காலங்களில் சூர்யாவை கிண்டல்
பண்ணுவதை குறைத்து கொள்கிறேன்". நீங்க கதையை படித்து
சிரித்தால் அதுவே எனக்கு போதும்.

ஆகாய நதி said...

நன்றி ஜெட்லி :)

பின்னூட்டத்திற்கான பதிலுக்கு நன்றி :)

உங்கள் பதிவு நகைச்சுவையாக தான் இருந்தது... :)