May 30, 2008

ஐந்து தலை யானை முட்டைக் கதை‍(பாகம்1)

ஒரு காலத்துல (இப்டிதானே கதை சொல்ல ஆரம்பிக்கனும்) ஆனையூர் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு. அங்க ஒரு யானைக்காரன் வாழ்ந்துட்டு இருந்தான் அவன் நான்கு யானைகள வளத்துட்டு இருந்தான். அவன் ரொம்ப பேராசை புடிச்சவனா இருந்தானா...அதனால அவனோட யானைகள ரொம்ப கொடுமை படுத்தினான்.
தினமும் நாலு யானைகளும் அந்த ஊர்ல உள்ள எல்லா வீதிகளுக்கும் வித்தை காட்டி காசு சம்பாதிக்க போகனும். அந்த நாலு யானைகளில் ஒன்னு குட்டி யானை , ஒன்னு அம்மா யானை।அந்த குட்டி யானையும் வித்தைக்கு போயாகனும்।பாவம்...:(
அந்த அம்மா யானை தினமும் குட்டி யானை வித்தை காட்ட வெயிலில் அலயுறத பாத்து ரொம்ப கவலைப்படும்।(ஏனா அப்றம் குட்டி கருத்துப் போயிடும்ல !!!:)
அந்த யானைக்காரன் பேராசை புடுச்சவன்றதால அதுங்க சம்பாதிச்சுக் கொண்டுவர எல்லாக் காசையும் புடுங்கிக்கிட்டு அதுகளுக்கு சரியா சாப்பாடு போட கூட மாட்டான். நிறையா காசு கொண்டு வரலைனா ரொம்ப அடிப்பான். பாவம் அந்த யானைங்க தினமும் அரை வயிறு சாப்டுட்டு வெயிலுல வித்தைக் காட்ட போகுங்க:(
ஒரு நாள் அம்மா யானை வித்தைக் காட்ட போற வழியில ஒரு பிள்ளையார் கோயில பாத்துச்சா... உடனே உள்ள போயி சாமிகிட்ட கண்ணீர் விட்டு அழுதுட்டே யானைக்காரன் பண்ணுற கொடுமையெல்லாம் சொல்லுச்சாம்। அதையெல்லாம் கேட்ட சாமி உடனே கோவமா எழுந்துரிச்சு சாமியோட 5 தலை யானைய வானத்துல இருந்து கூப்டு அது காதுல நெறைய சொன்னாராம்
இப்போ 5 தலை யானையும் அம்மா யானை கூட யானைக்காரன் வீட்டுக்கு வந்துச்சாம் அத பார்த்த யானைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம்!!! 5 தலை வெச்ச யானை கூட இருக்குமானு ஆச்சரியம் உடனே அவனோட பேராசை புத்தி இந்த யானைய மக்கள்கிட்ட காண்பிச்சே நெறைய காசு வாங்களாம்னு யோசனை பண்ணுச்சாம். இத தெரிஞ்சிகிட்ட 5 தலை யானை அவன்கிட்ட தான் ஒரு தங்க முட்டை போட போறதாகவும் அத பாதுகாப்பா வைக்கவே அவன் வீட்டுக்கு வந்துருக்கதாவும் சொன்னுச்சு. உடனே அவனுக்கு சந்தோசம் தாங்க முடியல. எப்டியாவது அந்த தங்க முட்டைய தான் எடுத்துக்கனும்னு நெனைச்சான்.
அந்த யானையும் அவன் வீட்டுல ஓ।சி। ல தங்க ஆரம்பிச்சுது। நிறய சாப்டும் , தூங்கும் ஆனா வேலை எதுவுனம் செய்யாது.அவனும் அது இன்னைக்கு முட்டை போடும் நாளைக்கு முட்டை போடும்னு அதை ரொம்ப செல்லமா பாத்துக்கிட்டான்.

3 comments:

ஆகாய நதி said...

இது அருட்பெருங்கோ அவர்களின் ஜனனி பாப்பாவுக்காக.....
ரொம்ப மொக்கையா இருந்தா மன்னிச்சுக்கோங்க.... வேணும்னா பின்னூட்டத்தில வந்து கல்லால அடிச்சுட்டு போங்க :)

Unknown said...

ஆகா ஆகா உங்களுக்கு இவ்வளோ கற்பனையா???

நான் யானையோட தலைல அஞ்சுதலை பாம்ப உட்காரவச்சிட்டு முட்டைக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா உங்க கதை குழந்தைங்களுக்கு பிடிக்கிற மாதிரி ரொம்ப நல்லாருக்கு. நன்றி.

இது பாகம் 1 ஆஆ??? அப்போ இன்னுமிருக்கா???? ஜனனீஈஈஈஈஈஈஈஈஈஈ சீக்கிரம் தமிழ் படிக்க ஆரம்பி!!! ;)

ஆகாய நதி said...

முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருட்பெருங்கோ:) கதை நெஜமா நல்லா இருக்கா?!! நான் மொக்கையா இருக்குமோனு பயந்துட்டே இருந்தேன்.