முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்!:)
நீங்கள் தாய்மை அடந்துள்ளீர்கள் என்பதை அறிய 5முதல் 7 வாரங்கள் வரை ஆகலாம்.இது தங்களுடைய மாத்விலக்கு சுழற்சியினைப் பொறுத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியினை அரிந்ததும் நீங்க முதல்ல செய்ய வேண்டியது உங்களுக்கான நம்பிக்கை.
ஆமாங்க தன்னம்பிக்கையும் எதையும் தாங்கும் இதயமும் இல்லாம ஆரோக்கியமான தாய்மை அப்டிங்கிறது இல்லை.
மருத்துவ ரீதியா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் சரியா முறைப்படி செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. மன ரீதியா நீங்க செய்ய வேண்டியது இதுதாங்க...
1.மனச மகிழ்ச்சியா வெச்சிக்கனும்
2।அதிகமா எதுக்கும் ஆசைப் படாதீங்க எதிர்பாக்காதீங்க ஒருவேளை உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு அதை நிறைவேற்றி வைக்க நேரம் சூழ்நிலை இல்லாம போகலாம். அது உங்களுக்கு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் கொடுத்து உங்க எல்லாருடைய மன நிம்மதியையும் கெடுத்துடும்.
3.45வது நாள் குழந்தையை ஸ்கேன் செய்யும் போது உங்க கணவரையும் கூட்டிட்டுப் போங்க. இது அவங்களுக்கும் மகிழ்ச்சியத் தரும். மேலும் உங்களவர் உங்கள நல்லா பாத்துக்க உதவும். அவங்க இல்லாம தாய்மை இல்ல.
4. மருத்துவ ஆலோசனைக்கும் முடிந்தவரை உங்களவரோட போங்க. அவரோட சூழ்நிலை காரணமா வரலனாலும் கோவப்படாதீங்க.
5.மற்றபடி மருத்துவரோர்ட ஆலோசனைகளை தவறாம பின்பற்றனும்.
6.கடினமான வேலைகளையும் பேருந்து, ஆட்டோ,இரு சக்கர வாகனப் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது. இத உங்க மருத்துவரே சொல்லிருப்பாங்க.
7. நல்லா தியானம் செய்வது நல்லது. இந்த டிவி சீரியலுக்கும் ஒரு முழுக்கு போட்டுடுங்க உங்க பாப்பாக்காக....
8.பப்பாளி, நாவல், அன்னாசி போன்ற பழங்கள தவிர்த்து மாதுளை, தர்ப்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, செவ்வாழை போன்ற பழங்களையும் கீரை, முட்டை, முட்டை கோசு, வெங்காயம், பூண்டு, கேரட், மாங்காய் போன்ற காய்களையும் நிறைய சாப்பிடுங்க.
9.மாங்காய் வாந்தி, தலை சுற்றலுக்கு அருமருந்து.
இந்த மாதத்துக்கு இது போதும்। அடுத்த மாதம் சந்திப்போம்.
"கர்ப்பிணிகளுக்கன குறிப்புகள்(3வாது மாதம்)"
வணக்கம்
1 week ago
2 comments:
தொடர்ந்து எழுதுங்கள். பயனுள்ளதாய் இருக்கிறது
//
தொடர்ந்து எழுதுங்கள். பயனுள்ளதாய் இருக்கிறது
//
ரொம்ம்ம்பப.... நன்றி :) கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன். தொடர்ந்து வாருங்கள்....
Post a Comment