எனக்கு பிரசவ விடுமுறை முடியப் போகிறது... எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் எங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை... என் அம்மா மற்றும் மாமியார் இருவருமே தனியாக இங்கு வந்து அதிக நாட்கள் இருக்க முடியாது ஏனென்றால் என் அப்பா மற்றும் மாமனாருக்கு சர்க்கரை நோய் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.... எங்கள் உறவினர்களில் வேறு யாரும் இங்கு வந்து இருக்கும் நிலையில் இல்லை... குழந்தைகள் காப்பகமும் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை... அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.... அதனால் இப்போது பொழிலனை எப்படிப் பார்த்துக் கொள்வது என்றே புரியவிலை....
என்னுடைய அத்தை(மாமியார்) பொழிலனை அவர்களுடன் புதுச்சேரியில் விடுமாறு கேட்கிறார் ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன.... வார விடுமுறையில் மட்டுமே நாங்கள் பெற்ற பிள்ளையை பார்க்க முடியும்.... அதிலும் எல்லா வாரமும் அலைவது சற்று சிரமம் எங்கள் குழந்தைக்காக என்றாலும் அதிகப் படியான அலைச்சல் விரைவில் உடல் நிலையை பாதிக்கும்... அவனுக்காகத்தானே உழைக்கிறோம் ஆனால் அவனை தினமும் பார்த்து அவன் செய்யும் குறும்புத் தனங்களை ரசிக்க முடியாமல் அவனுக்கு கதைகளை சொல்லி மகிழ முடியாமல் அவனை ஊரில் விட்டுவிட்டு பின் எங்கள் வீடே வெறித்துப் போய்விடும் :( அவனை ஒரு நாள் பிரிவதும் எனக்கு மிகவும் சங்கடமான ஒன்று..... குழந்தைகள் மனதில் அது எவ்வளவு பேரிய ஏக்கத்தை ஏற்படுத்தும்... பாவம் வாய் விட்டுக் கூறக் கூடத் தெரியாது...
என் கணவர் என் வேலையை விடுவதே சரியான தீர்வு என்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.... ஏனென்றால் நான் மிகவும் விரும்பும் பணி அதில் இன்னும் நான் எந்த சாதனையும் செய்யவில்லை.... நன்கு படித்து கேம்பஸ் தேர்வினால் பெற்ற பணி அதுவுமில்லாமல் நான் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது.... அதற்குள் அதனை எப்படி விடுவது என்றே புரியவில்லை...
நான் கர்ப்பமாக இருக்கும் போது என் அலுவலகம் HCL எனக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்து என்னை நன்கு பார்த்துக் கொண்டது... வேலையை விட்டுவிட்டால் அப்படிப் பட்ட நிறுவனத்திற்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன் என உறுத்துகிறது.... உங்களுக்கு ஏதேனும் தீர்வு தோன்றினால் கூறுங்களேன்.... என் குழந்தை எனக்கு அதை விட முக்கியம்.... என்ன செய்வது?
வணக்கம்
2 weeks ago
35 comments:
உங்கள் கணவர் சொல்வதுதான் சரி
என்று தோன்றுகிறது. குழந்தை பிறந்து
அந்த குழந்தையுடன் முதல் ஐந்து
வருடம் கூடவே இருப்பதுதான்
வாழ்க்கையின் பொற்காலம்.
இப்போது நீங்கள் வேலையை விட்டு விட்டாலும்
அதனால் பெரிய பாதிப்பு உங்களுக்கு ஏற்படுவதாக
தெரியவில்லை. அதனால்தான் உங்கள் கணவர்
வேலையை விட்டுவிட சொல்லுகிறார்.
ஆனால் சிலர் வேலையை விடவே முடியாத
சூழ்நிலையில் இருப்பார்கள் அவர்கள் நிலையை
எண்ணிப்பாருங்கள் அவர்களின் நிலைதான்
மிக கொடியது.வேலையை இன்னும் சிலவருடங்கள்
கழித்துகூட தொடரலாம்.அல்லது வேறு வேலைக்கு
போகலாம்.பொழிலனுடன் சந்தோசமாக பொழுதை
கழியுங்கள் அதுதான் பொழிலனுக்கும் தேவைப்படும்.
உங்கள் அலுவலகத்தை நீங்கள் நேசிப்பது புரிகிறது
இதுபோன்ற சமயங்களில் மனதை திட படுத்திகொண்டு
சில விசயங்களை தியாகம் செய்துதான் ஆகவேண்டும்.
//என் கணவர் என் வேலையை விடுவதே சரியான தீர்வு என்கிறார்... //
அது சரிங்க.... உங்க கணவர் தான் உங்கள வேலைய விடச் சொன்னாரான்னு எல்லாரும் துக்கம் விசாரிக்கப் போறாங்க. பெண்ணீயவாதிகள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினாலும் அனுப்பலாம்.
இப்போ கூட சொல்றேன்... வேலைய விட்டுட்டு வீட்டில பொழிலனப் பாத்துக்க நான் தயார்... தயார்.... தயார் :)
unga kanavarai velai vida sollitiitu , neega velaiku pogalamay ..
vivek.j
Get a fulltime trained caretaker whom you could trust and leave the kid with her.
Is there any possibility of work from home available in your office.
We have also faced the same problem.
ஆகா..
//வேலைய விட்டுட்டு வீட்டில பொழிலனப் பாத்துக்க நான் தயார்... தயார்.... தயார் :)
//
அந்தப் பயம இருக்கட்டும்!!
ஆகாயநதி,
இது எனக்கும் ஒரு பெரிய பிரச்சினை..இப்போது இருக்கிறது. இதுக்கு நிரந்தர தீர்வுன்னு கிடையாது! ஆனா சமாளிக்கலாம்....கொஞ்சநாள், அவங்க ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா, அப்போ உங்களுக்கு போர் அடிக்கும். அதுவுமில்லாம, திரும்ப ஜாயின் பண்றது பத்தியும் சொல்ல முடியாது.
என்ன சொல்ல வர்றேன்னா,கொஞ்சம் கஷ்டம்தான், ஆனா மேனேஜ் பண்ணக் கூடிய ப்ராப்ளம் தான். உங்க ஆபிஸில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இருக்கா? அப்புறம் ஒரு பேபி சிட்டர் இருந்தா பிரச்சினை இல்லை. க்ரெச் ஆப்ஷன் கடைசியா வ்ச்சிக்கோங்க! btw, உங்களுக்கு/பிரேமுக்கு பாட்டி இருக்காங்களா? ;-)
//ஆகா..
//வேலைய விட்டுட்டு வீட்டில பொழிலனப் பாத்துக்க நான் தயார்... தயார்.... தயார் :)
//
அந்தப் பயம இருக்கட்டும்!!
//
என்ன கொலவெறி... :)
//unga kanavarai velai vida sollitiitu , neega velaiku pogalamay ..
vivek.j
//
விவேக், I like you :)
Oh, this is really difficult.
//Is there any possibility of work from home available in your office.
I think you can do this if possible.
//இப்போ கூட சொல்றேன்... வேலைய விட்டுட்டு வீட்டில பொழிலனப் பாத்துக்க நான் தயார்... தயார்.... தயார் :)
@Prem
:)
ஆகாய நதி வேலையை விடறதுங்கறது நிச்சயம் பெரிய வலிதான். ஆனா பொழிலனுக்கு நீங்க நீங்க மட்டும்தான் முக்கியம். அப்பா கூட ரெண்டாம் பட்சம்தான்.
என்னதான் தாத்தா பாட்டி பாத்துகிட்டாலும் நீங்க அவர் சிரிப்பு, அவர் குறும்பு இது எல்லாம் மிஸ் பண்ணிவிங்க இல்லையா. அதனால வேலையை கொஞ்ச நாளைக்கு தள்ளி வையுங்க.
உங்களுக்கு படிச்ச படிப்பு வீணா போகுதேன்னு தோணுச்சுன்னா இப்பதான் ஆன்லைன்ல செய்யற மாதிரி நிறைய வேலைங்க இருக்கே. அது ஏதாவதை முயற்சி செய்யுங்க. இல்லாட்டி திரும்ப மேற்படிப்பு ஏதாவது படிக்கலாம்.
எனக்கு தோணின வரை பொழிலனுக்கு உங்க அரவணைப்பு ரொம்பவே முக்கியம்.
//
ஆகாய நதி வேலையை விடறதுங்கறது நிச்சயம் பெரிய வலிதான். ஆனா பொழிலனுக்கு நீங்க நீங்க மட்டும்தான் முக்கியம். அப்பா கூட ரெண்டாம் பட்சம்தான்.
என்னதான் தாத்தா பாட்டி பாத்துகிட்டாலும் நீங்க அவர் சிரிப்பு, அவர் குறும்பு இது எல்லாம் மிஸ் பண்ணிவிங்க இல்லையா. அதனால வேலையை கொஞ்ச நாளைக்கு தள்ளி வையுங்க.
//
எல்லாமே உண்மை தான்....
//
பொழிலனுடன் சந்தோசமாக பொழுதை
கழியுங்கள் அதுதான் பொழிலனுக்கும் தேவைப்படும்.
//
அது தான் என் விருப்பமும்... ஆனால் அலுவலகம் பற்றிய சிந்தனை என்னைக் குழப்பிக்கொண்டிருக்கிறது :(
//
அப்புறம் ஒரு பேபி சிட்டர் இருந்தா பிரச்சினை இல்லை.
//
அப்படி யாரும் எங்கள் நெருங்கிய உறவினர்களில் இல்லை என்பது தான் பிரச்சனையே :(
மூன்றாம் நபரை நம்பி விட மனமில்லை எங்களுக்கு...
//
உங்கள் அலுவலகத்தை நீங்கள் நேசிப்பது புரிகிறது
இதுபோன்ற சமயங்களில் மனதை திட படுத்திகொண்டு
சில விசயங்களை தியாகம் செய்துதான் ஆகவேண்டும்.
//
:|
//
உங்களுக்கு/பிரேமுக்கு பாட்டி இருக்காங்களா? ;-)
//
இல்லை :(
வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு எங்கள் அலுவலகத்தில் உண்டு ஆனால் login செய்ததும் தம்பிக் குட்டி அழுதால் என்ன செய்வது? நான் மட்டுமே வீட்டிலிருப்பேன்.... இதற்கு எதாவது யோசனை கூறுங்களேன்...
ஆகாய நதி said...
வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு எங்கள் அலுவலகத்தில் உண்டு ஆனால் login செய்ததும் தம்பிக் குட்டி அழுதால் என்ன செய்வது? நான் மட்டுமே வீட்டிலிருப்பேன்.... இதற்கு எதாவது யோசனை கூறுங்களேன்...
அட்ரா சக்கை, இது போதுமே, முல்லை சொன்னா மாதிரி ஒரு பேபி சிட்டர் போட்டுக்கோங்க. பசிக்காக அழும்போது பக்கத்துல இருங்க, மத்த நேரத்துல அவங்க கிட்ட இருக்கட்டும்.
பொழிலனையும் பார்த்தா மாதிரி இருக்கும், உங்களுக்கு பிடிச்ச வேலையும் செய்தா மாதிரி இருக்கும்.
//ஆனால் சிலர் வேலையை விடவே முடியாத
சூழ்நிலையில் இருப்பார்கள் அவர்கள் நிலையை எண்ணிப்பாருங்கள் அவர்களின் நிலைதான்
மிக கொடியது///
ம். இந்த வகையில் பார்த்தால் நான் பாதிப்படைந்தவள், மூன்று மாத குழந்தையை மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றேன்.
ஒரு வருசம் ஆகிடுச்சு, அப்படி இப்படின்னு.
இப்படியே போகிடுமா........ காலம், ம் பார்க்கலாம்.
ஆனால் என்னை விடவும் பின் தங்கியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், மாமியார் இல்லாதவர்கள் கேர் டேக்கர், பேபி சிட்டர் இப்படித்தானே போயாக வேண்டும
/*வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு எங்கள் அலுவலகத்தில் உண்டு */
இது உண்மையில் மிகப் பயனுள்ள விஷயம் நீங்கள் வேலையைத் தொடர விருப்பப்பட்டால். நிச்சயமாக ஒரு caretaker வேண்டும். ஆனால் உங்கள் மேற்பார்வையில் குழந்தை இருக்கும் பொழுது தாராளமாக ஒரு நல்ல caretaker வைத்துக் கொள்ளலாம். எப்பொழுதும் நாமே குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வேலை செய்ய முடியாது. நம் மேற்பார்வையில் குழந்தையை வைத்துக் கொண்டு, தேவைப்படும் பொழுது மட்டும் செய்வது என்றால் வேலை செய்யலாம். நாம் கொஞ்சம் ப்ளான் செய்து manage பண்ணலாம். ஒரு caretaker வைத்து , கொஞ்ச நாள் வேலை செய்வது போல் ஒரு ட்ரையல் செய்யுங்கள். உங்களுக்கே எப்படி முடியும் என்று ப்ளான் செய்ய முடியும்.
//வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு எங்கள் அலுவலகத்தில் உண்டு //
அப்ப்டியெனில் இது ஒரு பொன்னான வாய்ப்பு! ஒரு வயது வரை அதாவது நடக்க ஆரம்பிக்கும் வரை அவ்வளவாக பிரச்சினை இருக்காது. பேபி சிட்டர் அல்லது மெய்ட் வைத்துக் கொண்டு, நமது மேற்பார்வையில் அவ்ரகள் இருக்முமாறு பார்த்துக் கொள்ளலாம். இப்படி மேனேஜ் செய்த தோழிகள் எனக்குண்டு! மூன்றாம் நபரை மட்டுமே நம்பி விடுமாறு நான் சொல்லவில்லை, சொல்லவுமாட்டேன்! ஆனால், வீட்டில் யாரவது பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில், பேபி சிட்டரை/ மெய்டை வைத்துக் கொண்டால் சமாளிப்பது சுலபமாக இருக்கும்!
நதி,
நீங்கள் சொன்ன எல்லா பிரச்சனையும் எனக்கும் இருக்கிறது (same pinch. my in-laws r in pondy too:)). நான் என் வேலையை உதறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன:) என் மகனை வளர்ப்பதை விட எனக்கு வேலை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை:)
இதைப் பற்றி ஒரு பதிவு கூட எழுதி வைத்திருக்கிறேன். பதியலாமா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் draftகாவே இருக்கிறது.
\\வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு எங்கள் அலுவலகத்தில் உண்டு \\
ஒரு தந்தையாக பார்க்கும் பொழுது குழந்தையின் நலமே மிக முக்கியம்.
ஆதலால் தாங்கள் குழந்தையுடன் இருங்கள்.
உங்களை மேம்படுத்திக்கொண்டேயிருங்கள் (keep updating yourself) அது நீங்கள் மீண்டும் பனிக்கு சேருவதற்கு ஏதுவாக்கித்தரும்.
ஆனாலும் புதிதாக சேர்ந்த பனியில் ஒன்றும் இன்னும் சாதிக்கவில்லையே எனும் உங்கள் வாசங்களின் வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
எவ்வளவு தான் நீங்கள் குழப்பி குழம்பி யோசித்தாலும் - உங்களுக்கே தெரியும் இந்த நேரத்தில் உங்களின் அருகாமை அந்த குழந்தைக்கு மிக அவசியம்.
ஆண் என்ற (போலி)கவ்ரவம் விட்டு தங்கள் கணவர் வீட்டில் இருக்கின்றேன் என்று சொன்னாலும். ஒரு தந்தையால் குழந்தையின் தேவைகளை நிறைவேற்றிவிட இயலாது என்பது இங்கு அனைவருக்கும் விளங்கிய விஷயமே.
உங்களுக்கு உதவிய அலுவலகத்திற்கு என்ன கைமாறு செய்யபோகிறேன் என்ற உங்களின் வருத்தம், உங்களின் நல்லெண்னங்களை அழகாக படம் பிடித்து காட்டுகிறது. நிச்சியம் நீங்கள் சிறந்த தாயாக இருப்பீர்கள் என நம்பிக்கையுடனும், பிரார்த்தனையுடனும் மனமார வாழ்த்துகிறேன்.
தாய்மை என்பது எங்களுக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காத விஷயம், இச்சமயத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
குழந்தைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளும் தான்.
see my blog
@Vidhya
//
(same pinch. my in-laws r in pondy too:)).
//
:)
//
என் மகனை வளர்ப்பதை விட எனக்கு வேலை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை:)
//
எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது வித்யா... அவன் தான் என் முதல் உலகம்
//
அப்ப்டியெனில் இது ஒரு பொன்னான வாய்ப்பு! ஒரு வயது வரை அதாவது நடக்க ஆரம்பிக்கும் வரை அவ்வளவாக பிரச்சினை இருக்காது. பேபி சிட்டர் அல்லது மெய்ட் வைத்துக் கொண்டு, நமது மேற்பார்வையில் அவ்ரகள் இருக்முமாறு பார்த்துக் கொள்ளலாம். இப்படி மேனேஜ் செய்த தோழிகள் எனக்குண்டு! மூன்றாம் நபரை மட்டுமே நம்பி விடுமாறு நான் சொல்லவில்லை, சொல்லவுமாட்டேன்! ஆனால், வீட்டில் யாரவது பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில், பேபி சிட்டரை/ மெய்டை வைத்துக் கொண்டால் சமாளிப்பது சுலபமாக இருக்கும்!
//
அப்படியொரு நம்பகமானவரை எங்கு தேடுவது :(
மிக்க நன்றி அதிரை ஜமால்.... :) அப்படி செய்வதாகவே உத்தேசம் :)அவன் தான் என் முதல் உலகம் :)
http://parentsclub08.blogspot.com/2008/01/blog-post_25.html//
இங்க ஒரு முறை படிச்சு பாருங்க
வீட்டிலிருந்து வேலைப் பார்க்க முடிந்தால், ஒரு maid வைத்துக் கொண்டு வேலைப் பார்க்கலாம்.
அதுவும் பிடிக்கவில்லை என்றால்,
உங்களால் உங்கள் லீவை extend பண்ண முடிந்தால், extend பண்ணுங்கள். நான் அப்படி தான் செய்தேன். இரண்டு வயதுக்கு அப்புறம் குழந்தை ஸ்கூலுக்கு போன பின் சேர்ந்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் இரண்டு வயதான பொழுது, வீட்டிலிருந்து வேலைப் பார்க்க முடியாமல், ஆபிஸ் போகும் நிலை ஏற்பட்டது. ஆகையால் திரும்பவும் எட்டு மாதங்கள் extend செய்தேன். ஆனால் extension (12/31/2008) முடியும் முன்னால், வேறு சில காரணத்தால், திரும்பவும் (01/01/2009) வேலையில் சேர முடியாது என்ற காரணத்தால் வேலையை விட்டு விட்டேன்.
நீங்கள் லீவை extend செய்யும் பொழுது, வேற options யோசிப்பதற்கு நேரம் கிடைக்கும். உங்கள் குழந்தையும் வளர்ந்து விடும். இதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை Promotion தவிர்த்து.
எனக்கு யாரையும் disturb பண்ணப் பிடிக்கவில்லை. நம்மை பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோரிடம், அடுத்து நம் குழந்தையை வளர்க்கும் responsibility கொடுக்க மனது வரவில்லை. Let them enjoy their life.
Incase நீங்கள் வேலை விட நேர்ந்தால், கவலை வேண்டாம். வீட்டிலிருந்துப் பார்க்கும் வேலைகள் இப்பொழுது நிறையா இருக்கின்றன. ஸ்கூலுக்கு போகும் பொழுது வீட்டிலிருந்து வேலைப் பார்க்கலாம். இல்லாவிட்டால் அப்பொழுது ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்து விடலாம்.
எந்த முடிவையை எடுத்தாலும் குழந்தைக்காகத் தான் என நினைத்துக் கொள்ளுங்கள். All the very best.
நன்றி புதுகைத் தென்றல் உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் இந்த பதிவையும் வாசித்ததன் தாக்கம் தான் நான் என் குழந்தையை வேறு யாரிடமும் விடாமல் நானே வைத்துக் கொள்வேன் என்றது :)நான் இப்பொழுது Official break for long term or resign என்று முடிவெடுத்து விட்டேன் :)
ஆகாய நதி said...
நன்றி புதுகைத் தென்றல் உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் இந்த பதிவையும் வாசித்ததன் தாக்கம் தான் நான் என் குழந்தையை வேறு யாரிடமும் விடாமல் நானே வைத்துக் கொள்வேன் என்றது :)நான் இப்பொழுது Official break for long term or resign என்று முடிவெடுத்து விட்டேன் :)
தாயுள்ளம்
வாழ்த்துக்கள் பொழிலனோடு உங்கள் பொழுதுகளை நன்றாக செலவிடுங்கள், அவர் செய்யும் குறும்ம்புகளை எங்களுக்கு உடனுக்குடன் சொல்லிவிடுங்கள்
ஒரு ஆறு மாசம் எக்ஸ்ட்ரா லீவ் டேமேஜர்க்கிட்ட கேளுங்களேன்...
அதுக்குள்ள எல்லாம் சரியாகுதா பார்ப்போம்...
இல்லைன்னா வீட்ல ஒரு கிழவியை - அதர் தென் மாமியார் - டவுன்லோட் பண்ணி வெச்சுட்டு நீங்க ஆபீஸ் போய் வரவேண்டியது தானே ?
சமையல் வேலையும் முடிஞ்சிரும் - கொழந்தையையும் பார்த்தமாதிரி இருக்கும்...
பிக்காஸ் ஐயம் ஆல்சோ இன் திஸ் ஸினாரியோ...!!!
நன்றி அமித்து அம்மா :) நிச்சயம் பதிவிடுகிறேன்....:)
நன்றி செந்தழல் ரவி....:)
என் அத்தை அவர்கள் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து இங்கு இருக்க முடியாது...
நிறைய பேர் நிறைய சொல்லிட்டாங்க. புதுசா சொல்ல ஒண்ணும் இல்லை. என் தோழி ஒருத்தியும் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அனுமதி பெற்று செய்து கொண்டிருக்கிறாள்.
1. வீட்டிலிருந்து வேலை செய்ய முடிந்தால் உங்கள் அலுவலகத்தில் அனுமதி பெற்று சிறிது காலம் சமாளிக்கலாம்.
2. வீட்டில் ஒரு முழு நேர அல்லது நீங்கள் வேலைசெய்யும் நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்டேட்டர் அமைந்தால் நல்லது.
3. இன்னொரு தோழி பிட்ஸ் பிலானியில் மெத்த படித்தவள். அவளுக்கு வேலை விடுவது முடியாத காரியமாய் (why should I after all these qualifications, enbadhu avaL vaadham) போனது. அவள் முழு நேர (அவள் அம்மா/மாமியார் சிபாரிசு அல்லது maid agencies மூலம் வருபவர்கள்) பணிப்பெண் ஒருத்தியை அமர்த்தி 3 வருடங்கள் ஓட்டினாள்.(இப்பொழுது பையன் பள்ளி செல்கிறான்) அப்படி வருபவர்களை சமையல், குழந்தை பராமரிப்பு, என்று இருவேலைகளுக்கு ஒப்பு வந்தால் இன்னும் நலம்.
4. உங்களைப் போல் நிறைய பேர் அவதிக்குளாகிறார்கள். Dreams are made possible if we try, உங்களைப் போல் **உங்கள்** அலுவலகத்தில் குட்டிக் குழந்தைகள் உள்ளவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று கேளுங்கள். எல்லோரும் இணைந்தால், ஆஃபீசில் இன்னொரு இடத்தில் காப்பகம் அமைக்கலாமே. மகளிர் மட்டும் என்ற படத்தில் வரும் இந்த idea is really commendable. இதற்கு நிறைய பேரின் ஒத்துழைப்பு வேண்டும். IF u can manage to gather like minded ppl, it is possible. (atleast just a fire of thought kindled for long term implementation)
5. உங்கள் அலுவலகத்தின் வெகு அருகில் உள்ள காப்பகத்தில் விடலாம். மதியம் ஒரு முறை நீங்களே சென்று சந்திக்கின்றார் போல் வசதி செய்து கொள்ளலாம்.
6. இறுதியாக....
வேலையை தாற்காலிகமாக விட்டுவிடலாம் :)
:)
இந்த வலி என்ன என்று எனக்குத் தெரியும். மெத்த படித்து, அதன் அருமை உலகம் உணரும் முன், வீடு, குடும்பம், குட்டி என்று உட்கார்ந்து விடுகிறோம். இது என் மீது திணிக்கப்பட்டது. நிரம்ப வருத்தம் வழிந்தாலும், ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
Sacrifices are made at different subtler levels.
Nothing wrong in we sacrificing our pride, social recognition and worth for the sake of peace and family welfare.
உங்களுக்கும், குட்டிப் பாப்பாவிற்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment