காகா காகா காகம் கரையும்
கிகி கிகி கிளி கத்தும்
கீச் கீச் கீச் கீச் எலி கத்தும்
கூ..கூ..... கூ..கூ..... குயில் கூவும்
கொகொகொகொ... கோழி கொக்கரிக்கும்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் கூவும்
ம்மா....ம்மா....மாடு கத்தும்
ம்மே....ம்மே....ஆடு கத்தும்
மியாவ்...மியாவ்....பூனை கத்தும்
லொள் லொள் லொள் லொள் நாய் குரைக்கும்
பக் பக் பக் பக் வாத்து கத்தும்
இது தான் இப்போதெல்லாம் நான் அடிக்கடி பொழில் செல்லக்குட்டிக்குப் பாடும் பாட்டு. செல்லக்குட்டி கண்ணு அம்மாடி மற்றும் இப்பாடல் இரண்டும் அவனுடைய விருப்பப் பாடல்கள். வேறு ஏதாவது ரைம்ஸ் பாடினால் அழுகையை நிறுத்தி சிரிப்பதில்லை. இந்த பாடலுக்கு உடனே சிரிப்பு வந்து விடுகிறது. ஒருவேளை நான் பாடுவதே அவருக்கு சிரிப்பாக உள்ளதோ என்னவோ? :) எப்படியே அழுகை நின்று சிரித்தால் சரி :)
ஆனால் அப்படியே அந்தந்த விலங்குகள் போல் ஓரளவிற்கு குரல் எழுப்ப வேண்டும். ரைம்ஸ் ராகத்திலேயே பாடலாம் :)
இது எளிதில் அவன் விலங்குகளை அடையாளம் கண்டறிய உதவும் என்று நம்புகிறேன். இப்படி விளையாட்டு மற்றும் இசை மூலமே முதல் இரண்டு வயது வரை வாழ்க்கைக் கல்வி, பொதுக் கல்வி போன்றவற்றை அவனுக்குக் கற்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். இந்த முறை சரியானதா என்று பின்னூட்டமிடுங்கள் அனுபவசாலி தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் :)
வணக்கம்
2 weeks ago
11 comments:
அனுபவமில்லை
அருமையான வரிகள்
நன்றி திகழ்மிளிர் அவர்களே! :)
/நன்றி திகழ்மிளிர் அவர்களே! :)/
:):):):)
:-)) ரசித்தேன்! enjoy ur motherhood!
நன்றி பப்பு அம்மா :)
பொழில்...//காகா காகா காகம் கரையும்// காகம் கரையாதே அம்மா னு சீக்கிரம் சொல்லிக் கொடுப்பா..அம்மாவுக்கு! ;-)
எனக்கு அதை பத்தியெல்லாம் தெரியாதுங்க..
எங்க அண்ணி இதே மாதிரி பாட்டு பாடி குழந்தையை வளத்தாங்க...(இதே காக்காதான்...)
புள்ள நல்லாதான் வளந்து நிக்குறா...
இனி உங்கள் பிள்ளையும்...
வாழ்த்துக்கள்!!!
பொழிலன் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ரைம்ஸ் எல்லாம் பழகிடுவான் போல?
:)
//
காகம் கரையாதே அம்மா னு சீக்கிரம் சொல்லிக் கொடுப்பா..அம்மாவுக்கு! ;-)
//
:):)என் தங்கம் என்ன சொன்னாலும் சரிதான் :)
நன்றி கடைக்குட்டி :)
//
பொழிலன் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ரைம்ஸ் எல்லாம் பழகிடுவான் போல?
:)
//
முற்ச்சி திருவினையாக்கும் :)
Post a Comment