இப்போதெல்லாம் தொலைகாட்சியில் விளம்பரங்கள் பார்க்க சகிக்கவில்லை
பெண்களைக் காட்சிப் பொருளாக்கிய விளம்பரங்கள் அதையும் தாண்டி தற்போது பெண்களின் குணத்தை இழிவு படுத்தும் அளவிற்குக் கேவலமாக சித்தரிக்கின்றனர்.
பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தும் அத்தகைய விளம்பரங்கள்:
ஏக்ஸ் ஆண்களுக்கான வாசனை திரவியம். அதை ஒரு ஆண் உபயோகப்படுத்தியதும் அவன் அந்த சாக்லேட் வாசனையினால் பெண்கள் அனைவரையும் கவருகிறான்; இதில் உச்சகட்டக் கொடுமை என்னவெனில் அதில் பெண்கள் அனைவரும் அவனைக் கண்டபடி கடித்து.... சே... சே.... என்ன ஒரு அசிங்கமான விளம்பரம்।
இப்படியாக வைகிங், பெப்ஸிகோ போன்ற பல விளம்பரங்களும் அதில் அடங்கும்.
இப்படிப் பெண்களை இழிவு படுத்தும் விளம்பரங்களினால் அவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.
குழந்தைகளும் இத்தகைய விளம்பரங்களைப் பார்க்கின்றனர். இது அவர்கள் மன நிலையைக் கெடுத்துவிடாதா?
பெண்களை தெய்வம் என்று போற்றிய அதே மண் இன்று பெண்களை வியாபார நோக்கில் பார்க்கிறது. இந்த நிலை எதில் சென்று முடியும் என்று தெரியவில்லை.
இது போன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்காவது தங்களை கேவலமாக சித்தரிக்கும் இது போன்ற காட்சிகளில் நடிக்கிறோமே என்று தோன்ற வேண்டாம்?
என்ன சொல்வது? ஏற்கனவே ஒரு பதிவர் இது போன்று ஒரு பதிவிட்டுள்ளார். இப்போது நானும். இன்னும் சமூக அக்கறையுள்ள பெண்கள் என்னுடன் கைக்கோர்க்கலாம்... ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது... நம் அனைவரின் கூக்குரல் கேட்டாவது மாறட்டும் மீடியா!
வணக்கம்
2 weeks ago
10 comments:
உண்மைதான் ஆகாய நதி! ஆதங்கம் நியாயமே! ஜெஸிலாவின் வலைப்புவின்கூட இதைபற்றி ஒரு பதிவு இருக்கு!
எல்லாரும் கை தட்டலாம், நமது கை தட்டல் ஓசை பெரிசாகலாம், சரி இதில் முக்கியமான விஷயம் இதில் காசு வாங்கிக்கொண்டு நடிக்கிறார்களே அந்தப் பெண்களின் காதில் இந்த ஓசை விழவேண்டும்
ஒரு பழமொழி, தேவைப்படுகிறது இங்கே:
ஊசி இடங்கொடுக்கவில்லையெனில் நூல் நுழையாது.
//இதில் உச்சகட்டக் கொடுமை என்னவெனில் அதில் பெண்கள் அனைவரும் அவனைக் கண்டபடி கடித்து//
மஹா கேவலமான விளம்பரம்.
நீங்கள் சொல்வது போல் "தெய்வமாக" யாரும் பெண்களை மதிக்கவேண்டாம். சக மனுஷியாக மதித்தாலே போதும். வெச்சால் குடுமி, எடுத்தால் மொட்டை கதை. தெய்வம் இல்லாவிட்டால், போகப் பொருள்! என்ன கேடுகெட்ட சித்தரிப்பு!!!
இன்னொன்று. என்னுடைய எண்ணம் என்னவென்றால், உலகில் தற்போது நீங்கள், நான், இன்னும் நம் போன்று சொற்ப மனிதரே (பெண்ணாகட்டும் ஆணாகட்டும்) இதனைப் பற்றிக் கவலைக் கொள்கின்றனர். மீடியா உலகில் நுழைந்தால், அவர்களில் பலருக்கு, சோஷியல் சென்ஸ் மோரல் சென்ஸ் விரிவடைந்து விடுகிறது அல்லது மாறிவிடுகிறது. விற்பனைக்கு எது சாத்தியப்படுமோ அப்படி விற்பனைவல்லுனர்கள் தயாரிக்க ஒன்றுக்கு பத்தாய் பணம் வந்தால் நடிக்க ஏன் கசக்கிறது?!?!
நாளை சமூகத்தைப் பற்றி யாருக்கு அக்கறை இருக்கிறது?
இன்னொன்றும் உண்டு. இது போன்ற விளம்பரம் இல்லாவிட்டாலும், திரைத்துறையிலிருந்து, வலையுலகம் வரை அனைத்தும் எல்லாவித ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்கிறது. அதனால் இது போன்ற படங்களையும் செய்திகளையும், பலர் சகஜமாக எடுத்துக்கொள்ள பழகிவிட்டனர் என்பது தான் கசப்பான உண்மை.
இதே சாக்லேட் விளம்பரம் வந்த புதிதில் விவரிக்க இன்னும் கடினமாக இருக்கும் அளவில் காட்டியிருந்தனர். சமீபத்தில் (நான் டி.வி பார்ப்பது அரிது) பார்க்க நேரிட்ட போது சில அனாவசிய காட்சிகளை கத்தரித்திருந்தாற் போல் இருந்தது. I may be wrong !
@சந்தனமுல்லை...
ஆமாம்... அவர் பெயர் மறந்ததால் பெயர் குறிப்பிடவில்லை....
@அமித்து அம்மா....
தங்கள் கருத்து நியாயமே... என்ன செய்ய... காசுக்காக எதையும் செய்யும் காலமாகிவிட்டது நம் புண்ணிய பூமியில் :(
//
இன்னொன்று. என்னுடைய எண்ணம் என்னவென்றால், உலகில் தற்போது நீங்கள், நான், இன்னும் நம் போன்று சொற்ப மனிதரே (பெண்ணாகட்டும் ஆணாகட்டும்) இதனைப் பற்றிக் கவலைக் கொள்கின்றனர். மீடியா உலகில் நுழைந்தால், அவர்களில் பலருக்கு, சோஷியல் சென்ஸ் மோரல் சென்ஸ் விரிவடைந்து விடுகிறது அல்லது மாறிவிடுகிறது. விற்பனைக்கு எது சாத்தியப்படுமோ அப்படி விற்பனைவல்லுனர்கள் தயாரிக்க ஒன்றுக்கு பத்தாய் பணம் வந்தால் நடிக்க ஏன் கசக்கிறது?!?!
நாளை சமூகத்தைப் பற்றி யாருக்கு அக்கறை இருக்கிறது?
//
மிக மிகச் சரியான கூற்று... பெற்றோர்களே பெண் பிள்ளைகளை அப்படி பணம் சம்பாதிக்க ஊக்குவிக்கும் போது இதை எப்படித் தடுப்பது... சென்சார் ஒன்றே வழி!
//
இதே சாக்லேட் விளம்பரம் வந்த புதிதில் விவரிக்க இன்னும் கடினமாக இருக்கும் அளவில் காட்டியிருந்தனர். சமீபத்தில் (நான் டி.வி பார்ப்பது அரிது) பார்க்க நேரிட்ட போது சில அனாவசிய காட்சிகளை கத்தரித்திருந்தாற் போல் இருந்தது. I may be wrong !
//
சரி தான்... மிகவும் அசிங்கமான ஒரு காட்சியை நீக்கிவிட்டனர்
வருத்தம் தெரிவித்ததற்கு நன்றி கார்த்திக்
Well said. It was an irritating and vulgar ad. Hope people will boycott buying the stuff. And girls should boycott guys wearing that stuff.
//
Well said. It was an irritating and vulgar ad. Hope people will boycott buying the stuff.
//
நல்ல கருத்து ஆனால் மக்கள் அதைச் செய்ய வேண்டும்... நாம் அதைத் துவங்கி வைப்போம் :)
Post a Comment