June 9, 2008

குட்டி இளவரசிக்கு என்ன ஆச்சு १ : 1(கற்பனைக் கதை குழந்தைகளுக்காக...)

ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி நம்ப இந்திய நாட்டுல நல்லபுரம் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு... அந்த ஊர ராஜா ஒருத்தர் ஆண்டுக்கிட்டு இருந்தாரு. அந்த ராஜாவுக்கு யாரும் பொய் சொன்னா புடிக்கவே புடிக்காது.அவருக்கு ரெண்டு இளவரசிகள். ரெண்டு பேரையும் அவருக்கு ரொம்ப புடிக்கும். அவங்களுக்கும் அப்பானா உயிரு. ஆனா... பெரிய இளவரசிக்கு எப்பவுமே சின்ன இளவரசி மேல பொறாமை. ஏனா சின்னவ பெரியவள விட ரொம்ப அறிவாளி, அழாகானவ, எல்லா கலைகளிலும் திறமைசாலி. ஒரு நாள் அந்த ராஜாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போகவும் அவரு தன்னோட ரெண்டு மகள்களில் ஒருத்திய இந்த நாட்டுக்கு ராணியாக்கனும்னு முடிவு செஞ்சாரு.ஆனா அவங்கள்ல யாரு ராணியாகுற அளவுக்கு திறமைசாலினு நிரூபிக்கிராங்களோ அவங்க தான் ராணியக முடுயும்னு சொன்னாரு.
சின்னவளோ அக்காவே ராணியா இருக்கட்டும் அப்டினு சொன்னா. ஆனா ராஜா திறமசாலிக்கான போட்டி நடந்தே ஆகனும்னுட்டாரு.
அவரு மூன்று போட்டிகள அறிவிச்சாரு. ஓவியப் போட்டி தான் முதல் போட்டி. ரெண்டு பேரும் ஊருக்குள்லள போயி அவங்க பாத்தத பத்தி படமா வரையனும்.
ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு குதிரைல புறப்பட்டாங்க. ரெண்டு பேரும் வேற வேற திசைகள்ல போனங்க.
பெரியவ சந்தைக்கடை வேதிக்கு போனா. ஏனா அவளுக்கு புதிய நகைகங்க, துணிக, அழகு படுத்திக்கும் பொருள்கள்னா ரொம்ப ஆசை. அவ அதையெல்லாம் பாத்து வரையலாம்னு அங்க போனா.அதிலுள்ள நுணுக்கமான வேலைபாடுகள நம்ம படத்துல வரயலாம்கிறது அவளோட திட்டம். அப்டி வரைந்தா தான் ரொம்ப திறமையா வரையுறதா அப்பா நினைப்பாருனு அவ அப்டி செஞ்சா.‌
ஆனா சின்னவ எங்க போனா தெரியுமா??!!! அங்க அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியுமா?

5 comments:

தமிழ் said...

யானை கதை நல்ல இருந்தது

இளவரசி கதையும்
அருமையாக இருக்கிறது

ஆகாய நதி said...

நன்றி திகள்மிளிர் அவர்களே!:)
தொடர்ந்து வாருங்கள்:)

பணம் பணம் பணம் said...

அக்கா ரொம்ம்ம்ம்ப நல்லார்க்கு கதையெல்லாம் எனுக்கு ரொம்ப ரொம்ப புட்ச்சிர்ந்த்தது

ஆகாய நதி said...

//அக்கா ரொம்ம்ம்ம்ப நல்லார்க்கு கதையெல்லாம் எனுக்கு ரொம்ப ரொம்ப புட்ச்சிர்ந்த்தது
//


ரொம்ம்ம்பப.... நன்றி :) மீண்டும் வாருங்கள்....

DHANS said...

என்ன ஆச்சு இளவரசிக்கு ??