June 3, 2008

ஐந்து தலை யானை முட்டைக் கதை (பாகம் 3):முடிவு

பார்த்தா உள்ள யானையோட யானையோட உவ்வே சாணி இருந்துச்சு :):)க‌டைக்கார‌ருக்கு ஒரே கோவ‌ம் இந்த யானைக்கார‌ன் மேல‌. உட‌னே அவர் அவ‌னை ஆன‌யூர் காவ‌லாளிக‌ள் கிட்ட ஏமாத்திக்கார‌ன் அப்டினு க‌ம்ப்ளெயின்ட் ப‌ண்ணி புடிச்சு குடுத்துட்டார் அவ்ளோத‌ன் அந்த யானைக்கார‌ன் ந‌ல்லா மாட்டிக்கிட்டான்.
வ‌ழ‌க்கு ராஜா கிட்ட விசார‌ணைக்கு போச்சு. அந்த‌ ராஜா அவ‌ன்கிட்ட அந்த முட்டை ஏதுனு கேக்க அவ‌ன் அது வ‌ந்த க‌தை ப‌த்தி சொன்னான். ஆனால் ராஜா ரொம்ப புத்திசாலியா அதுனால‌ அவ‌ன் சொன்ன‌த‌ ந‌ம்பல . "ஐந்து த‌லை யானை சாமி கிட்ட‌ ம‌ட்டும் தான் இருக்கும் உன‌க்காக எல்லாம் அது வ‌ராது... நீ பொய் சொல்ற யானை சாணிய உருட்டி வெச்சு ஏமாத்துற " அப்டினு அந்த ராஜா சொன்னார். சாணிய‌ உருட்டி பொய் சொன்ன அவ‌ன் த‌லைய ம‌ண்னுல உருட்டி ம‌ர‌ண‌ தண்ட‌னை குடுக்குறேனு ராஜா சொல்லிட்டார்.
அவ‌னுக்கு என்ன‌ பண்ற‌துனு புரிய‌ல‌... இப்போதான் அவன் ம‌ன‌சுக்கு அவ‌ன் ப‌ண்ணின‌ பாவம் எல்லாம் உரைச்ச‌து. அவ‌ன் சாகப் போற நேர‌த்துல சாமிகிட்ட எப்படியாவ‌து த‌ன்னை காப்பாத்தும்ப‌டியும் தான் இனிமே யானைக‌ளை கொடுமை ப‌டுத்த‌ மாட்டேனும் பேராசைப் ப‌டாம ஒழுங்கா உழைச்சு சாப்டுவேனும் அழுது புர‌ண்டு வேண்டினான்.
சாமி தான் ரொம்ப ந‌ல்ல‌வ‌ராச்சே அவ‌ன் அழுவுற‌த பாத்து சாமி ரொம்ப‌ ஃபீல் பண்ணி அங்க எல்லார் முன்னாடியும் வ‌ந்து அவ‌னை ம‌ன்னிச்சு ந‌ட‌ந்த எல்லாத்தையும் சொன்னாரு. அவ‌னுக்கு ரொம்ப ஜாலியா போச்சு ஏனா எல்லாத்தையும் கேட்ட‌ ராஜா அவ‌னை விடுத‌லை ப‌ண்ணிட்டாரு.
அவ‌ன் சாமிக்கிட்ட த‌ன்னோட‌ 4யானைக‌ள‌யும் த‌ன‌க்கு கொடுக்க‌னும்னும் தான் இனிமே அதுங்க‌ள ந‌ல்ல‌ ப‌டியா பாத்துக்குவேனும் ச‌த்திய‌ம் ப‌ண்ணிக்குடுத்தான்.
உட‌னே சாமி அவ‌னோட யானைக‌ளை அவ‌னிக்கு குடுத்துட்டு போயிட்டாரு. அவ‌னும் தானே உழைச்சி யானைக‌ளுக்கு சாப்பாடு போட்டு யானைகளோட‌ பாசமா ஹேப்பியா வாழ் ஆர‌ம்பிச்சான்.:)

6 comments:

Unknown said...

சாமி அவ்வளோ நல்லவரா??? :)

கதை சூப்பரோ சூப்பர். ஜனனிக்கு சொல்றதுக்கு நல்ல கதை கெடச்சிடுச்சு. நன்றி. நன்றி. நன்றி. (ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு நன்றி)

நன்றி. இது நீங்க அடுத்து எழுதப்போற கதைக்கு ;)

ஆகாய நதி said...

//சாமி அவ்வளோ நல்லவரா??? :)//


ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப................ நல்லவராக்கும் :)

ஆகாய நதி said...

//கதை சூப்பரோ சூப்பர். ஜனனிக்கு சொல்றதுக்கு நல்ல கதை கெடச்சிடுச்சு. நன்றி. நன்றி. நன்றி. (ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு நன்றி)

நன்றி. இது நீங்க அடுத்து எழுதப்போற கதைக்கு //

நன்றி! நன்றி ! நன்றி! அடுத்தக் (கொடுமையா) கதையா??!!:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது நீங்க் கேட்ட கதையா.. விட்ட ( சுத்தின) கதையா.. :) நல்லாத்தான் இருக்கு.. எப்படியோ சாமி கிட்ட இருந்த யானைன்னு சொன்னதால ஜனனி எப்படி யானைக்கு 5 தலைன்னு கேக்க முடியாது இல்ல...

நீங்க தொடருங்க கொ .. சே கதையை..

ஆகாய நதி said...

// இது நீங்க் கேட்ட கதையா.. விட்ட ( சுத்தின) கதையா.. :) நல்லாத்தான் இருக்கு.. எப்படியோ சாமி கிட்ட இருந்த யானைன்னு சொன்னதால ஜனனி எப்படி யானைக்கு 5 தலைன்னு கேக்க முடியாது இல்ல...

நீங்க தொடருங்க கொ .. சே கதையை..
//

முதன் முறை வந்தமைக்கும் கருத்தியம்பியமைக்கும் மிக்க நன்றி :) இது நான் விட்ட (சுத்திய) கதை தான். :)

Anonymous said...

I like what you guys are up also. Such clever work and reporting! Carry on the superb works guys I have incorporated you guys to my blogroll. I think it will improve the value of my site :)
auto insurance quotes comparison
compare auto insurance
auto insurance quotes comparison