December 22, 2008

வளருகிறார் குறும்புக்கார பொழில்குட்டி :)

பொழில்குட்டிக்கு தற்போது ஆறாவது மாதம் துவங்கியுள்ளது :) ஏற்கனவே தெளிவாக "அம்மா" என்றழைக்கும் என் தங்கத்திற்கு இப்போது "அப்பா" என்று அரைகுறையாக ஆனால் "அழகாக" சொல்ல வருகிறது :) இதைக் கேட்டதும் அவர் அப்பாவைக் கையில் பிடிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் சேட்டைகள் சற்றே வலு பெற்றுள்ளன :) குப்புறப் படுத்துக் கொண்டு கண்களுக்கு எட்டும் பொம்மைகள் கைக்கு எட்டவில்லையென அடம் பிடிக்கிறார். "அம்மா... ம்மா" என்று என்னை அழைப்பார்; நான் திரும்பிப் பார்த்ததும் சிணுங்கிக் கொண்டே பொம்மையைப் பார்த்தால் அது அவருக்கு வேண்டும் என்று அர்த்தம்... நான் சென்று எடுத்துக் கொடுப்பேன் :)

அதைவிட சிரிப்பு என்னவென்றால் தவழ முயற்சிப்பது ஆனால் முடியாமல் போனதும் அழுவது. அவனிடம் விடாமுயற்சி என்னும் சிறந்த பழக்கம் இருப்பதை நாங்கள் பல முறை அவன் விளையாடும் போதும், தவழ முயற்சிக்கும்ப் போதும் கவனித்துள்ளோம் :) இது எனக்குப் பெருமையாக இருக்கிறது :) :)

அவரிடம் ஒரு பாடிக்கொண்டே நகரும் சேவல் இருக்கிறது... நான் அதைப் போட்டுவிட்டு தான் சமையலறைக் கடமைகளையாற்றிக் கொண்டிருப்பேன்.... ஆனால் இப்போது அந்த பொம்மை உதவுவதில்லை. ஏனென்றால் , அது நகருகிறது ஆனால் அதன் பின்னே நம் ஐயாவால் நகர முடியவிலை என்று கோவப்படுகிறார்.... அழுகிறார் :) சரி என்று நகரும் சைக்கிள் மாமா பொம்மையைப் போட்டுவிட்டால் அது சிறிது நேரத்திலேயே பாடுவதை நிறுத்திவிட்டு ஊர்ந்துக் கொண்டிருப்பதை மட்டுமே தொடரும், பாடல் சத்தம் நின்றதும் ஐயாவிற்கு அழுகை வந்துவிடும் :) சரியென்று யானை மாமாவைக் கொட்டு அடிக்கவிட்டால் ஒரே ஆர்வக்கோளாரில் அதைக் கையில் எடுத்துவிடுவார். ஏனென்றால் அந்த இரு பொம்மைகளையும் கையில் பிடிக்க முடியவில்லை ஆனால் இதைப் பிடிக்க முடிகிறதே. அந்த மகிழ்ச்சி தான் :)

ஆனால் அவன் என் வயிற்றில் இருந்த போதிருந்தே பேசிப் பழகியதால் தானோ என்னவோ யாராவது ஒருவர் அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நான் காலையில் என் கணவருக்கு காலை மற்றும் மதிய உணவு சமைத்து எடுத்து வைத்துக் கொடுப்பதில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் தான் அவருக்குப் பேச்சுத் துணை தேவைப்ப்டும். பசிக்கும் போது நான் செல்வதும் பேசுவதற்கு என் கணவர் செல்வதும் மாறி மாறி நிகழ்ந்துக் கொண்டிருக்கும் :) தந்தையும் மகனும் பேசுவதே தனி ஒரு அழகு :)

ஆனால் எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அடிக்கடி அவருடன் பேசியாக வேண்டும் இல்லையென்றால் அன்று அதிகமாக அழுவார். ஆனால் எளிதில் சரி செய்து விடலாம். மிகவும் சிறிய குழந்தை தானே! :) எனக்கும் பகல் நேரத்தில் அதிக வேலை இருக்காது; அவர் தான் என் உலகம் நான் பகலில் என் உலகத்தை சுற்றிக் கொண்டு பல செய்திகளை அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன் :) அப்போது தானே அவர் விரைவில் வெளி உலகத்தை புத்திசாலித் தனமாக எதிர்கொள்ள முடியும்... :)

18 comments:

Karthik said...

வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்சிக்கும் போதும் ரொம்ப அழகா இருப்பான்ல? வாழ்த்துக்கள் பொழிலன்!
:)

//இதைக் கேட்டதும் அவர் அப்பாவைக் கையில் பிடிக்க முடியவில்லை.

//தந்தையும் மகனும் பேசுவதே தனி ஒரு அழகு :)

அவரும் எழுதலாமே? டைம் கிடைத்தால்?

பங்களிப்போர் என்று பெயரைப் பார்த்தேன்..அதான்.

சரிதானே பிரேம்?
:)

ச.பிரேம்குமார் said...

பதிவு முழுக்க ஒரே ஸ்மைலியா இருக்கே :)

Anonymous said...

//வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்சிக்கும் போதும் ரொம்ப அழகா இருப்பான்ல? வாழ்த்துக்கள் பொழிலன்!
:)//

கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போ வந்து என்னை பாக்க போறீங்க???

ச.பிரேம்குமார் said...

//சரிதானே பிரேம்?
:)//

சரிதான் கார்த்திக். சீக்கிரமே எழுத முயற்சிக்கிறேன் :)

ஆகாய நதி said...

//வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்சிக்கும் போதும் ரொம்ப அழகா இருப்பான்ல? வாழ்த்துக்கள் பொழிலன்!
:)//

நன்றி :)

//
கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போ வந்து என்னை பாக்க போறீங்க???
//

அதானே....

ஆகாய நதி said...

//
பதிவு முழுக்க ஒரே ஸ்மைலியா இருக்கே :)
//

என்னுடைய மகிழ்ச்சியின் வெளிபாடு போல... ஒவ்வொரு தடவை நான் சிரிக்கும் போதும் சிரிப்பான் தானாக வருகிறது...கடைசியில் பார்த்தால் நிறைய சிரிப்பான்கள் :)

சந்தனமுல்லை said...

//அவனிடம் விடாமுயற்சி என்னும் சிறந்த பழக்கம் இருப்பதை நாங்கள் பல முறை அவன் விளையாடும் போதும், தவழ முயற்சிக்கும்ப் போதும் கவனித்துள்ளோம் :)//

சூப்பர்!

சந்தனமுல்லை said...

//ஏனென்றால் , அது நகருகிறது ஆனால் அதன் பின்னே நம் ஐயாவால் நகர முடியவிலை என்று கோவப்படுகிறார்.... அழுகிறார்//

சோ ஸ்வீட்!

ஆகாய நதி said...

நன்றி பப்பு அம்மா :)

Karthik said...

//கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போ வந்து என்னை பாக்க போறீங்க???

ஆஹா, இப்ப லீவ்ல இருக்கேன்டா செல்லம். சென்னை வந்தபிறகு வர்றேன்.
:)

Karthik said...

//அதானே....

நன்றிங்க. கண்டிப்பா ட்ரை பண்றேன்.
:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பொழிலனின் முன்னேற்றம் -

இப்போது "அப்பா" என்று அரைகுறையாக ஆனால் "அழகாக" சொல்ல வருகிறது :)

என்ஜாய் பண்ணுங்க அப்பாவும் அம்மாவும்.

ரிதன்யா said...

/ஆனால் அவன் என் வயிற்றில் இருந்த போதிருந்தே பேசிப் பழகியதால் தானோ என்னவோ யாராவது ஒருவர் அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். //
அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்சல்ல பாடல்கள் அதுவும் இசைக்கருவிகளின் (instrument) இசை மட்டும்.

ச.பிரேம்குமார் said...

//என்ஜாய் பண்ணுங்க அப்பாவும் அம்மாவும்.//

அமிர்தவர்ஷிணி அம்மா, நன்றி. வாழ்க்கையின் இந்த பகுதியும் மிகுந்த சுவாரசியத்துடன் தான் இருக்கிறது :)
We are enjoying Parenting !

ச.பிரேம்குமார் said...

//அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்சல்ல பாடல்கள் அதுவும் இசைக்கருவிகளின் (instrument) இசை மட்டும்.//

ஏகலைவன், இப்படி சொல்லிட்டு விட்டுட்டா எப்படி? முடிஞ்சா அதை ஒலிப்பதிவு செஞ்சு போடுங்க. நாங்களும் கேட்க ஆர்வமா இருக்கோம். வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு

ஆகாய நதி said...

//
அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்சல்ல பாடல்கள் அதுவும் இசைக்கருவிகளின் (instrument) இசை மட்டும்.
//

ரொம்ப நல்ல விஷயம்...
எங்களுக்கும் ஒலிப்பதிவு செய்து போட்டீங்கனா மகிழ்ச்சிதான் :)

ஆகாய நதி said...

//
அமிர்தவர்ஷிணி அம்மா, நன்றி. வாழ்க்கையின் இந்த பகுதியும் மிகுந்த சுவாரசியத்துடன் தான் இருக்கிறது :)
We are enjoying Parenting !
//

வழிமொழிகிறேன் :)

Anonymous said...

சோ ஸ்வீட்...

குழந்தையின் குறும்புகள் மிக அழகு...