May 17, 2009

பொழிலனும் நானும் -பகுதி 2


பொழில்குட்டி நியூஸ் போட்டு ரொம்ப நாளாச்சுல; அதான் இன்னைக்கு பொழில்குட்டி பற்றி இனிமையான மொக்கை! :)

பொழிலன் சேட்டைகள்:

பொழில்குட்டி இப்போ நல்லாவே நிற்க, பிடித்துக் கொண்டே நடக்கிறான்; அதானால் அவனை கையில் பிடிக்கவே முடிவதில்லை! "குட்டிமா இங்கே வா"னு கூப்பிட்டாலும் திரும்பி ஒரு ராஜ பார்வை பார்த்துட்டு மறுபடியும் "கடமையே (சேட்டை(அ)விளையாட்டு) கண்கண்ட தெய்வம்" னு தொடருவான்!

ஆனால் சாப்பிட வைக்க ரொம்ப பொறுமைதான் வேணும்! ஸ்ஸ்ஸ் அப்பா! ஒரு வழியா அவனுக்கு ஊட்டி முடிச்சா எதோ பெரிய விருந்து சாப்பாடே நான் சாப்பிட்ட மாதிரி தி்ருப்தி!

ஆனால் சேட்டைகள்தான் கலக்கல் போங்க! அவனுக்குத் தெரியாம ஒளிச்சு வெச்சுருக்க செருப்ப தேடி(அவருக்குத் தெரியாத இடமா?) கொண்டு வந்து சோபாவுல வெச்சு அது மேல துவைச்ச துணிய போட்டு.... அவ்வ்வ்வ் :( துக்கத்துலயும் சிரிப்புதான் வந்தது! :)

செல்ஃபோன் ரிங் சௌண்ட் வந்தா கூட டான்ஸ் தான்!

பொழில்குட்டி தூங்கும் நேரம்:

இப்போலாம் இரவு 12மணி வரை ஆட்டம் போடுறான்! எனக்கு தூக்கம் சொக்கும்... கண்ணு தூங்கலாம் வா டயலாக்... வேலைக்கே ஆவாது :(

கொஞ்சிக்கிட்டே கதை சொல்றது... கதை சொல்லி சொல்லி எனக்குதான் தூக்கம் வரும்... கதை முடிந்ததும் மறுபடியும் ஃபிரெஷ்ஷா எழுந்து உட்காருவானே பார்க்கனும்... அவ்வ்வ்வ்...

பாட்டு பாடலாம்னா ஐயோ இராத்திரி நேரம் அமைதியா ஊரு சனமெல்லாம் உறங்குது... இப்போ போயி நான் பாடினா டெர்ரரா இருக்காது?!! அப்புறம் விஜய்டிவில "நள்ளிரவில் பேயின் பாடல் கேட்டது, நடந்தது என்ன? சுழியத்திற்குள் வாருங்கள்" அப்படினு நம்மள வெச்சு ஒரு எபிசோட் தேத்திடுவாங்க! ஹி ஹி ஹி!

பேச்சாளர் பொழிலனுங்கோ :

இப்போ நிறையா பேசுகிறான்! ஏதோ புதிய புரியாத வார்த்தைகளும் வருது;

அது, இது, அங்கு, அஃகு(???), இங்கு, வா, தா, நேனா(வேணாம்), ஊஊ(நான் கையில் வைத்திருக்கும் பொருளை), காகா இதெல்லாம் சொல்றான்!

உறவுகளை ஓரளவிற்கு சொல்லக் கத்துகிட்டான்! :) தாத்தா தான் எப்பவுமே வாயில வருது... அப்புறம் அய்யா... இந்த இரண்டையும் வெச்சு அதுவே ஒரு பாட்டு பாடும்... ஏற்கனவே போன பதிவுல சொன்ன மாதிரி ஆட்டம் பாட்டம் தனி பதிவில்! :)

அம்மா என்பதை ஒரு நாளைக்கு 100முறையாவது சொல்லிக் கூப்பிடுறான்...:))))) பின்ன ஒரு தடவை கூப்பிடவே "அம்மா ம்மா ம்மா மம்மா"னு தொடர்ந்து பல தடவை சொல்லுவான் :) காதுல தேன் தான் பாயும் எனக்கு! :))))))))

இப்படி என்னைக் கூப்பிட்டுக்கிட்டே சமையலறைக்குள்ளே வந்தா போச்சு... பிறகு நானே கூப்பிட்டாலும் சார் வர மாட்டாரு... ஏனா அங்க தான் நிறைய விளையாட்டு சாமான் இருக்கு! கிரைண்டர், பாத்திரம் எல்லாமே தான்... அப்புறம் பெரிய மெக்கானிக் இஞ்சினியரா வேற ஆயிட்டாரு! கார், பஸ் (பொம்மை தாங்க) எல்லாம் பார்ட் பார்ட்டா கழட்டி போட்டுருவாரு!

பின்ன ஆராய்ச்சி பண்ணிதானே பலவற்றக் கத்துக்கமுடியும! :)

மாலை நேர பொழிலன் :

இப்போலாம் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்க சிறார் பூங்காவிற்கு அடிக்கடி பொழில்குட்டி போயிட்டு வரார்! அங்கு அவனுக்கு மிகவும் பிடித்தது மான்கள் மற்றும் குட்டி டோரா டோரா...

குட்டி டோரா டோராவில் அவனை உட்கார வைச்சு சுத்திக்கிட்டே நான் மெதுவா நடந்தேன்... அந்த மெதுவான வேகத்தில தான் அவன பிடிச்சுட்டே சுத்தினேன்... ஒரே குஷி தான் குட்டிமாவுக்கு!:)))))

தினமும் மாலை நேரத்துல காத்துவாங்க போவாரு! கோடைகாலம்ல அதுனால இந்த ஏற்பாடு :)

சில சமயம் அவரே பைக் எடுத்துக்கிட்டு போவாரு! நீங்களே பாருங்களேன் மேலே இருக்க போட்டோல.... :)

சிரி இன்னக்கு இந்த மொக்கை போதும்... சம்மர் டைம்ல எல்லாரும் உங்க உடல்நிலைய குளிர்ச்சியா வைத்து பார்த்துக்கோங்க :)


8 comments:

அபி அப்பா said...

சூப்பர் பொழிலன் சார்!

ஆகாய நதி said...

ரொம்ப நன்றி அபிஅப்பா! :)

jothi said...

பொழிலனின் (மிக மிக மிக அருமையான பெயர்) சேட்டைகள் என்னுடைய குழந்தையை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. என்ன செய்ய?? பெற்றோருடனும், மனைவி குழந்தைகளுடனும் சொந்த ஊரில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதன் வலி எங்கோ உட்கார்ந்து கொண்டு விட்டத்தை வெறிக்கும் எங்களுகே தெரியும். அதைவிடுத்து எல்லா விஷயங்களுக்கும் இது சரி இல்லை, அந்த அரசு super, எங்க ஊருல தண்ணி உப்பா இருக்கு, பக்கத்து வீட்டுகாரன் பாட்டு சத்தமாய் வைக்கிறான், பால் பாக்கெட் 50 பைசா ஏறிப் போச்சு என complain பண்ணி இருப்பவர்கள் கையில் வெண்ணையை வைத்துகொண்டு நெய்க்கு அலைபவர்கள். மற்றபடி video file-ஐ நேரடியாக Word ஃபைலாக திறக்கும் திறமை உங்களுக்கிருக்கிறது. பொழிலனின் கதைகள் அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

தீஷு said...

பொழில்குட்டியின் சேட்டைகள் மிகவும் ரசிக்கும்படி உள்ளன. சூப்பர்...

ஆகாய நதி said...

வாங்க ஜோதி! நீங்கள் உங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கீங்க போல...

எல்லாம் நன்மைக்கே... கவலைப் படாதீர்கள்!

ரொம்ப நன்றி!

//
பொழிலனின் (மிக மிக மிக அருமையான பெயர்)
//

இதற்கும் நன்றி!

நீங்கள் விரைவில் உங்கள் குழந்தையைக் காண என் வாழ்த்துகள்!:)

ஆகாய நதி said...

நன்றி தீஷு அம்மா! :)

சந்தனமுல்லை said...

அழகாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள், ஆகாயநதி! பொழிலின் சேட்டைகள் புன்னகைக்க வைக்கின்றன!

ஆகாய நதி said...

நன்றி முல்லை... :)

என் அழகு தங்கம் இல்லையா பொழிலன் அதான் மொக்கையா எழுதினாலும் என் மனதில் உள்ள அவன் மீதான ரசனை வெளிப்பட்டு விடுது போல :)